|
||||||||
தஞ்சையில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் மாவட்ட ஆட்சியர் வழியாக திருக்குறள் இலவச நூல் வழங்கும் நிகழ்வு செப்டம்பர் 4 அன்று நடைபெறுகிறது |
||||||||
![]() தஞ்சையில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் -திருக்குறள் முற்றோதல் பயிற்றகத்துடன் இணைந்து உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் வழங்கும் இலவசத் திருக்குறள் நூல்களை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கும் நிகழ்வு செப்டம்பர் 4, திங்கள் அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் தலைமைப் பயிற்சியாளர் திரு.கோபிசிங் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து , மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சியை இலவசமாகப் பயிற்றுவிக்கிறார். உலகத் தமிழ் வளர்ச்சிமன்றம் , உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்துடன் இணைந்து மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 நூல்கள் வீதம் ஆண்டுக்கு 80000 திருக்குறள் நூல்கள் என்று, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 4.5 லட்சம் மாணவர்களுக்கு திருக்குறள் நூல்களை வழங்குகிறது.
திருக்குறள் முற்றோதல் செய்து தஞ்சை மாவட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் 15000 ரூபாய் பணமுடிப்பும், சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு வழங்குகிறார்.
__________________________________________________________
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பாக ,
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
kural.mutrothal@gmail.com
|
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 01 Sep 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|