|
||||||||
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் திருக்குறள் -யுனெசுகோ குறிப்பு |
||||||||
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் திருக்குறள் -யுனெசுகோ குறித்த குறிப்பை Chinnasamy Rajendiran அவர்கள் நேற்று பகிர்ந்தார்.
தொடர்ந்து நாம் நம் அறிவை, இலக்கியங்களை, அதில் உள்ள உயர்ந்த விழுமியங்களை நமக்குள் பழங்கதைகளாகப் பேசி மகிழ்ந்து வருகிறோமே தவிர இன்னும் உலக மக்களுக்கு , தமிழ்நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பெரும் அளவில் நிதி ஒதுக்கி கூர்மையான இலக்கோடு செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என்பதே என் புரிதல்.
தமிழில் திருக்குறள் மட்டுமே ஓரளவு பேசுபொருளாகியுள்ளது. அதுவும் இன்னும் தேசிய நூல் அளவுக்குக்கூட செல்லவில்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் நம் முன்னோர்கள் வைத்த கோரிக்கை இன்றும் கோரிக்கை அளவிலேயே உள்ளது.
திருக்குறள் தவிர்த்து பிற சங்க இலக்கியங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே குறிப்பிடும்படி செல்லவில்லை. நம் மொழியில் உள்ள கருத்துகளை தமிழ் மக்களிடமே கொண்டுசேர்க்க பல நூறு பேர் உழைக்கவேண்டியது தேவையுள்ளது. பெரும் நிதியை செலவிடவேண்டிய தேவை உள்ளது.
தமிழ்ச்சமூகம் உள்வாங்காத , உணராத ஒன்றை பிற சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்று கருதுவது சரியான பார்வையன்று. திருக்குறளை தமிழ்ச் சமூகம் முழுமையாக உள்வாங்கவேண்டும். வீடுதோறும் திருக்குறள் நூல் இருப்பதும், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் குடும்பதோடு அமர்ந்து வாசிப்பதும் அவசியம். குழந்தைகளை முற்றோதல் செய்யவைத்து , அதன் பொருளை வயதிற்கு ஏற்ப உள்வாங்கச் செய்வது அவசியம்..
1. தமிழ்ச் சமூகம் அதன் கடமையை செய்யவேண்டும்.
2. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் பரவலாக்கப்படவேண்டும்.
3. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் வாழும் அனைத்து மொழிகளிலும் கொண்டுவரவேண்டும்.
4. திருக்குறள் அனைத்து நாடுகளிலும், அனைத்து உயர்மட்ட சந்திப்புகளிலும் பரிசளிக்கும் இடத்தை பெறவேண்டும்.
5. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படவேண்டும்.
6. திருக்குறள் யுனெசுகோவில் அங்கீகரிக்கப்பட்டு , திருவள்ளுவர் சிலை யுனெசுகோ வளாகத்தில் வைத்து , ஆண்டுதோறும் உலக மாணவர்கள் கற்க வாய்ப்பு ஏற்படவேண்டும்.
தொடர்ந்து சாதி, மத, அரசியல் எல்லைகளைக் கடந்து உலகப்பொதுமறையான திருக்குறள் கருத்துகள் உலக மக்களுக்கு சென்றுசேர வேண்டும் என்று தொடர்ந்து உழைப்போம்..
|
||||||||
by Swathi on 19 Sep 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|