LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-6) - பேராசிரியர் அரங்க இராமலிங்கம்

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-21

நாள்: 14/07/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-6)
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம்

வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியின் ஆறாவதான இந்நூலில் கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் நா சஞ்சீவி டாக்டர் கணபதி ஸ்தபதி மற்றும் டாக்டர் வ செ குழந்தைசாமி ஆகியோரது கட்டுரைகள் உட்பட ஒன்பது கட்டுரைகள் உள்ளன. வர்த்தமானன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது (2022).

நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் த சிவலிங்கம்

முனைவர் த சிவலிங்கம் அவர்கள் தற்போது, சென்னையில் உள்ள 'துவாரகாதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியில்' தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை தமிழும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தில் இளமுனைவர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். சிறந்த நாட்டுப்புற கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை துணைத் தலைவரும் கே ஏ குணசேகரன் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றவர். 35க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளையும், 'குறுந்தொகை காட்சியும் புறநானூற்று மாட்சியும்' மற்றும் 'வீரபத்திரர் பாடல்கள்' என்ற நூல்களின் ஆசிரியர்.

by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறளங்காடி  - கனடா தொடங்கியது.. குறளங்காடி - கனடா தொடங்கியது..
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.