|
||||||||
திருக்குறள் விளக்க நீதிக்கதைகள் -லட்சுமி அம்மாள் |
||||||||
![]() "திருக்குறள் விளக்க நீதிக்கதைகள் " தொகுப்பு நான்கு. லட்சுமி அம்மாள் ரம்யா பதிப்பகம் .முதல் பதிப்பு 2008 விலை ரூபாய் 36 .
மொத்த பக்கங்கள் 94. இது ஒரு திருக்குறள் விளக்க நீதிக் கதைகள் அடங்கிய புத்தகம் சிறுவர்களும் படிக்கலாம் பெரியவர்களும் படிக்கலாம் நீதி கடைபிடிக்க விரும்புகின்றவர்கள் நெறியாக வாழ விரும்புகின்றவர்கள் இந்த புத்தகத்தை வழியாட்டியாக கொள்ளலாம்.
***
எழுதப் படிக்க தெரிந்த சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவரும் சுலபமாக திருக்குறளின் பொருளைத் தெரிந்து கொள்ளவும் அதே சமயம் சமுதாயத்தில் வெற்றி பெற்ற பல பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளவும் உருவானதே இந்த 'திருக்குறள் விளக்க நீதிக் கதைகள்'. இவை மொத்தம் நான்கு தொகுப்புகளாக வெளிவருகின்றன. இது நான்காம் தொகுப்பு.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இந்த புத்தகத்தைப் படித்தால் நாம் திருக்குறளின் பொருளையும் தெரிந்துகொள்ளலாம் .அதேசமயம் சமுதாயத்தில் வெற்றி பெற்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறையும் தெரிந்து கொள்ளலாம்.
***
கீழ்க்கண்டவாறு பெரியவர்களின் பட்டியலும் அவர்களுக்கு உதாரணங்களாக சொல்லத் தக்க திருக்குறள்களும் அடங்கிய பதிவு .
1. "தமிழ் தாத்தா உ.வே.சா."
2. ஸ்ரீ அன்னமாச்சார்யா!
3.உழைப்பே மூச்சு
4. குல விளக்கு
5. எமனை ஏமாற்றியவர்
6. மான் குத்திய மணி
7. படிகளைக் கடந்தவர்.
8. எத்தனை வளையல்?
9. "உழைப்பே உயர்த்தும்"
10. "அதிசய மரக்கால்"
11. "சிறுகதை சிற்பி"
12. "கடவுளால் முடியாதது"
13. "கை வீசம்மா கை வீசு"
14. "தங்கச் சங்கு''.
15. "தும்மினால் தண்டனை"
16.பேச்சாளர் டெமாஸ்தனிஸ்.
17.தெய்வத்தின்மீது வீண் பழி
18. "யோகாவுக்கு ஓர் ஆச்சார்யார்"
19. "விதியை வென்றவள்"
20. "கருணைக் கடல்".
21. இரட்டையர் சாதனை.
****
"கடவுளால் முடியாதது"
சொல்லுக சொல்லைப்பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (645)
பொருள்: நாம் பேசும் பேச்சை மற்றவர் பேச்சு ஜெயிக்க முடியாதபடி நயமாகப் பேசுவதே நாவன்மையாகும்.
மன்னன் மகேந்திரனுக்கு முன்கோபம் அதிகம். எவர் சிறுகுற்றம் செய்தாலும் நாடு கடத்தி விடுவான். மந்திரி பூபாலர் மகாபுத்திசாலி. அவரையே பலமுறை நாடு கடத்தி பின் அழைத்து வரச் செய்திருக்கிறான். மன்னனது இந்த குணத்தை மாற்ற சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தார் மந்திரி. ஒரு நாள் ஒரு புலவர் வந்திருந்தார். அவர் பல பாடல்களால் மகேந்திரனைப் புகழ்ந்தார். அதில் ஒரு பாடலில் "கடவுளை விட உயர்ந்தவர்' என்று பாடிவிட்டார்.
மகேந்திரன் "அது எப்படி? கடவுள் இந்தப் பரந்த உலகத்தைப் படைத்திருக்கிறார். நான் எதையுமே உருவாக்க வில்லையே! இந்த சிறு நாட்டுக்கு அரசன். நான் எந்த விதத்தில் கடவுளை விட உயர்த்தி என்று உதாரணத்தோடு விளக்கிக் கூறவேண்டும்" என்றான்.
புலவன் பாடி விட்டானே தவிர விளக்கம் சொல்லத் தெரியவில்லை! மன்னரைப் புகழ்ந்துபாடினால் பரிசு கிடைக்கும் என்று மட்டுமே எண்ணியிருந்ததால் திரு திருவென விழித்தான். மந்திரி பூபாலர் புலவர் நிலைமையைப் புரிந்து கொண்டார்.
'அரசே! பாடலைப் பாடியவரை விட விளக்கங்கள் மற்றவராலேயே புதுப்புது கண்டுபிடிக்க முடியும்" என்றார்.
"அப்படியா? அப்படியானால் உங்களால் விளக்கம் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் அரசர். பூபாலர் நாவன்மை மிக்கவர்.
"அரசே! கடவுள் உலகையெல்லாம் படைத்திருந்தாலும் எவரையும் வெளியேற்ற உத்தரவு போடமுடியாது. ஆனால் உங்களால் முடியுமே" என்றார். அரசர் அதிலிருந்து எவரையும் நாடு கடத்துவதில்லை! புலவருக்குப் பரிசளித்ததோடு பூபாலருக்கும் பரிசளித்தார்.
-திரு.நா.கருணாமூர்த்தி -முகநூல் பதிவு
|
||||||||
![]() |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 31 Oct 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|