LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருவள்ளுவர் - ஞானவெட்டியான் என்னும் ஞானவெட்டி

"திருவள்ளுவர் . ஞானவெட்டியான் என்னும் ஞானவெட்டி 1500 ".
தாமரை நூலகம். எஸ் பி ராமச்சந்திரன். முதல் பதிப்பு 1999 விலை ரூபாய் 100 மொத்த பக்கங்கள் 320. 
#திருவள்ளுவர் சிறப்பு பதிப்புக்காக பதிவு செய்யப்படுகிறது. இந்த புத்தகம் எனது வீட்டில் இருந்திருக்கிறது .
எனது தந்தை மார்கழி மாதம் முழுக்க கம்ப ராமாயணம் படிப்பார் பெரிய எழுத்துக்களில் மற்ற நேரங்களில் பொழுது போகவில்லை என்றால் இந்த புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருப்பார். எனது ஐந்து வயதில் இந்த புத்தகத்தை புரட்டிப் பார்த்த நினைவு இப்போது இந்த அட்டை படுத்தி பார்க்கும் போது வருகின்றது .அப்பொழுதும் ஒன்றும் புரியவில்லை. இப்பொழுது ஒன்றும் புரியவில்லை. பிறகு எங்கள் வீட்டில் குடியிருந்த தப்பால்காரர் போஸ்ட் மேன் சித்த மருத்துவம் தயாரிப்பதில் ஈடுபாடு உடையவர் என்கிற காரணத்தினால் அந்த புத்தகத்தை அவருக்கு கொடுத்து விட்டார். இன்னும் சில ஓலைச் சுவடிகளையும் அந்த தபால்காரருக்கு கொடுத்து விட்டார் .இது குறித்த பதிவு தப்பால்காரர் என்ற புத்தகத்தை படிக்கும் போது எழுதி இருக்கிறேன்.
***
 
இலக்கியங்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்வோர் முதலாவதாக அவற்றின் பயன் பற்றிச் சிந்திப்பதே சிறந்தது .பயனுள்ள நூலே நிலைக்க முடியும். அடுத்தபடியாக அது சொல்லப்பட்டுள்ள முறை இனிமையாக, சுவையாகச் சொல்லப்பட்ட நூலே வாழ முடியும். சித்தர் இலக்கியங்கள் காலம் காலமாக நீடித்து நிலைத்து வந்துள்ளன என்றால் அவை மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத மிகவும் தேவையான, தவிர்க்கவே முடியாத பொருள்களைப் பற்றியே பாடப்பட்டுள்ளன என்பதே அதற்கு முதற்காரணம். ஞானவெட்டியான் என்று கற்றோர்களால் ஆர்வத்துடன், உணர்ச்சியுடன் கூறப் படும் இந்த நூலில் பல அபூர்வமான மருந்துகள் எளிமையாகவும். இனிமையாகவும் கூறப்பட்டுள்ளன.
நாகரச செந்தூரம்
இரசக்குளிகை இரச பற்பம்
சண்ட மாருதக்குழம்பு மதனகாமச் செந்தூரம்
கற்ப லேகியம் அரிதார பற்பம் சவ்வீரச் சுண்ணம் கௌரிபாஷாணச் சுண்ணம் சாதிலிங்க பற்பம்.
பஞ்சாமிர்தக் குளிகை
பற்பம் பளிங்கு பாஷாண
இப்படிப் பல அரிய மருந்துகளைச் செய்யும் முறைகள் கூறப்பட்டுள்ளன.
இந்த மருந்துகளின் பயனைப் பற்றியோ கூறவே முடியாது. மிக அற்புதமான, மிகவும் பயனளிக்கக் கூடிய மருந்துகள்.
*மார் புத்து, வாய்புத்து, வாதபித்த,
சிலேத்துமங்கள்,
நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, நீராமை,
நீர்ச்சுரப்பு,
தூர்செய்யுங் குன்மங்கள் எட்டு
கோசையுடன் காமாலை பேரனந்த நோய்களெல்லாம் பிரிந்து
விடும் காணேனே *
 
வான்குமரி லேகியம் என்ற லேகியத்தால் குணமாகும் நோய்களைப் பற்றி வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார் புற்றுநோய் இன்றைய மனித இனத்தால் அதிகமாக அஞ்சப் படும் நோய் என்பதால் இந்தப் பாடல் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் சிறப்பை இன்று வரைக் கூடச் சரியாக உணர்ந்து கொண்டவர்கள் இல்லை. வாய் கிழியப் பேசுகிறவர்கள் டமாரம் அடிப்பவர்கள் எல்லாம் சித்த மருந்துவத்தைப் பற்றி அறிந்து வைத்திருப்பது மிகவும் குறைவே.
 
பழைய மருத்துவர்கள் பஸ்ப செந்தூரங்களைச் செய்வதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு அதற்காகவே உழைத்துவருபார்கள். பிரதிபலன் கருதாத சில சான்றோர்கள் மட்டுமே சித்த மருத்துவத்தை உயிர்போல் காத்து வருகிறார்கள். அவர்களும் தாங்கள் கண்டறிந்த இரகசியங்களை வெளியே கூற முன் வருவதில்லை. சித்தமருத்துவம் இன்னம் பரவலாகப் படிக்கப் பட்டு முறையாக ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுமானால் நோயால் சாவு என்பதே இல்லாத புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும்.
அதுமட்டு மல்ல இராமலிங்க சுவாமிகள் கனவு கண்டதைப் போல் மனிதன் மரணமில்லாப் பெரு வாழ்வும் அடைய முடியும்.
அடுத்த படியாக இந்த நூல் இயற்றப்பட்டுள்ள முறையைக் கவனிப்போம்:....
 
பெரும்பாலும் வண்ணங்கள் சிந்துகளாலக்கப்பட்டுள்ள இந்த நூலின் சுவை கற்றோர் இதயம் களிகூரச் செய்வதாகும்.
துல்லியை மெல்லியை ஒல்லியை
முல்லியை
நல்லியை எல்லியை
வல்லியைக் கண்டுயான்
அல்லிநகர் விட்டு அகண்ட வெளி
கடந்தத் திருபுரத்துக்கே சுழி
முனை
துல்லிய மாமதில் சூழ் நகர் மாளிகை
சுத்தப் பெருவெளிக் கர்த்தன்
இருப்பிடம்
சொல்லில் அடங்காத் துருவெளி
தனில்
துரியாதீத மடவாலயங் கண்டுயான்.
கும்பிட்டுக் கொண்டேன்.
மதியைப் பிடித்து நிதியைத் திரித்து
விதியைப் பிடித்து
பதியிலடைத்துக்
கெதியை அடக்கிச் சதியை ஒடுக்கி
அதிதவித அம்பிகை அத்தாளைக் கண்டுயான்
விதிமதி இரண்டும் இறுக்கி இறுக்கி
விளக்கித் துலக்கிப் பெருக்கி
வித்தாக்கி
நதிவலமாக்கி அடக்கியே பிங்கலை
நாடு
நடுவரை கூடு உறவாகவே.
கும்பிட்டுக் கொண்டேன் .
இப்படி வார்த்தை ஜாலம் -சொற்களில் மாயம் செய்யும் கற்பனைக் கவித்திறன் வாய்க்கப் பெற்றோர் மிகச் சிலரே என்பது சொல்லாமேல விளங்கும். இலக்கணப்படி பாடல் எழுத முடியாமல் வசனமாகக் கவிதை நாலு வரி மூன்று வரிகளில் எழுதிக் கவியரசர் பட்டம் தாங்களாகவே போட்டுக் கொள்ளும் இன்றைய கவிகள் இந்த நூலைப் படிக்க வேண்டும்.
 
* எழுதப் புகு முன் சொல்லாற்றல் பெற வேண்டும்
சொல்வதை முறைப்படி சொல்லப் பழக வேண்டும்.
அப்பொழுது தான் சொல்லப்பட்ட பொருள் கேட்பவர் நெஞ்சில் தைக்கும். அப்படித் தைப்பதனாலன்றோ ஞான வெட்டியானைப் படித்தவர்கள் அதை மீண்டும் மீண்டும் படித்தும் மறக்க முடியாமல் அல்லாடுகிறார்கள்.
தமிழே சுவையே, உயிரே என்று தவிக்கும் உளப் பாங்கைத் தரும்
அற்புதமான கவிதைகளால் வள்ளுவர் இந்த நூலை யாத்திருக்கிறார்.
பெயர்
அக மகிழும் அம்பிகைப் பெண்
அருளினாலே
அவனிதனில் ஞான வெட்டி
அருள யானும்
நிகழ் திருவள்ளுவ நாயனுரைத்த
வேத நிரஞ்சன மாநிலவு
பொழிரவி காப்பாமே.
 
என்று தமது நூலின் பெயரையும் தமது பெயரையும் வெளிப் படுத்துகிறார். இது ஞான வெட்டி அல்ல ஞானவெற்றி, பெயர் ஞான வெற்றி என்றே இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தவர் ஞான வெட்டி என்று சிதைத்துப் பிறகு ஞான வெட்டியானாக பிணம் புதைக்கும் புலையனாகவும் சிதைத்து விட்டார்கள் என்று ஐயா மெய்வழிக் குழந்தை சாமிக் கவுண்டரவர்கள் கருதுகிறார்கள்.
 
இந்நூலாசிரியரின் குரு.....
*நந்தி யொளிப் பிரகாச
வட்டத்துள்ளே
நற்கமல மாயிர மெட்டிதழைப்
போற்றி
உந்திநிலை அறிந்த திருமூலர் பாதம்
உவமையுள்ள காலாங்கி
போகர் பாதம்
சிந்தையுள்ள மகிழ்ந்த சட்டை
முனியின்பாதம் சிவமயங்கண்ட
கோரக்கர் பாதம்
அந்திபகல் அறிந்த இடைக் காடர்
பாதம் அருளுஞ் சக நாதர் பாதம்
அர்ச்சித்தேனே.
என்று சித்தர்களுக்கு வணக்கம் கூறித் தமது நூலைச் சொல்லத் தொடங்கும்திருவள்ளுவர்.
 
*இசைத்த தொரு திருமூலனார் உரைத்தவண்ணம் இனிய தொரு ஞானவெட்டி இயம்பினனே - * இவருடைய குருவேறு, அகத்தியர் அல்லர் என்று நினைக்கலாம். ஆனால்
பைந்தமிழ்க் குயர்ந்த அகத்தீசர் வந்து பலகலையு மெனக் குரைத்துப் பாலித்தார்காண்
என்ற வரிகள் அகத்தியரே இவருடையகுரு என்று துணியவும் இடமளிக்கிறது. பிறிதோரிடத்தில் அகத்தியர் தமக்கு மானசீக குரு என்றும் கூறியுள்ளார்.
 
பாடல்கள் எண்ணிக்கை....
ஞானவெட்டி 1500 என்று தலைப்பிலேயே போடப்பட்டிருந்த போதிலும் இரத்தின நாயகள் அண் ஸன்ஸ் வெளியிட்டுள்ள நூலில் 1915ன் பாடல்களுக்கு மேல் உள்ளன. பிழைகளும் ஏராளம். காலம் குறளாசிரியரும் இவரும் ஒருவரா அல்லது வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவர்களா என்பது பற்றிப் பலத்த கருத்து வேறுபாடு உள்ளது.
 
குறளாசிரியரே இவர் என்பதை ஏற்றுக் கொள்ளாத அன்பர் ஒருவர், தமிழில் சிந்துகள் வண்ணங்கள் எப்பொழுது தோன்றின? மிகவும் பிற்காலத்தில் பதினெட்டு பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில்! இவரைக் குறளாசிரியர் என்று சொல்வது கிராப் வைத்தவரைத் திருவள்ளுவர் என்று சொல்வதைப் போலாகும் என்று கோபத்துடன் கூறிக் கொண்டே போனதை நினைக்கும் போது
புலமையிலும் நூலை எடுத்துக் கூறியுள்ள முறையிலும் இவர் திருக்குறளாருக்கு எவ்விதத்திலும் குறைந்தவரல்லர் என்று கூறலாம்.
 
-திரு.நா.கருணாமூர்த்தி -முகநூல் பதிவு
by Swathi   on 31 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலைகள் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலைகள்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - திருக்குறள் குஜராத்தியில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - திருக்குறள் குஜராத்தியில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - திருக்குறள் மேல் அதிகப் பற்றுக்கொண்ட திரு. முருகன் அவர்களுக்கு திருக்குறள் நூலை வழங்கியபோது. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - திருக்குறள் மேல் அதிகப் பற்றுக்கொண்ட திரு. முருகன் அவர்களுக்கு திருக்குறள் நூலை வழங்கியபோது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.