LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!!

பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில்(நவ 07, 2016) வெளியிடப்பட்டது.


இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (கீழே இணைக்கப்பட்டுள்ளது) கூறியிருப்பதாவது:-


அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 1.9.2016 அன்று சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். அவரது அறிவிப்பின் பேரில், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதத்தில் (180 நாட்கள்) இருந்து 9 மாதமாக (270 நாட்கள்) முழு சம்பளத்துடன் உயர்த்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர் (7.11.2016) மகப்பேறு விடுமுறையில் இருக்கும் ஊழியர்கள் 9 மாதம் வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

by Swathi   on 09 Nov 2016  13 Comments
Tags: 9 Months   Maternity leave   TN Govt Maternity leave   மகப்பேறு விடுமுறை   பெண் அரசு ஊழியர்கள்        
 தொடர்புடையவை-Related Articles
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!! தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!!
கருத்துகள்
24-Oct-2020 09:39:30 முனீஸ்வரன் said : Report Abuse
எனது மனைவி கடந்த பிப்ரவரி 2020 ல் பணிக்கு சேர்ந்துள்ளார் நேரடி நியமனம் வாயிலாக தற்போது கடந்த ஆகஸ்ட் 10 முதல் மருத்துவ விடுப்பில் இருந்து செப்டம்பர் 6 ல் குழந்தை பிறந்துள்ளது ... தகுதி காண் பருவத்தில் ஒரு வருட பணி நிறைவடையாததனால் மகப்பேறு விடுப்பு தகுதி இல்லை என்று ஊதியம் வழங்கப்படவில்லை தகுந்த வழிமுறை தருக அய்யா
 
17-Oct-2020 05:02:07 Savithri said : Report Abuse
எனக்கு நவம்பர் மாதத்தில் குழந்தை பிறக்க உள்ளது.ஆனால் இப்போது எனது துறையில் பதவி உயர்வு எனக்கு வரும் நிலையில் உள்ளது. மகப்பேறு விடுப்பில் சென்று விட்டால் மகப்பேறு விடுப்பு முடிந்து தான் நான் பதவி உயர்வு நிலையில் பணி சேர முடியும் எனவும், இடையில் சென்று சேர்ந்து விட்டால் மீண்டும் மகப்பேறு விடுப்பைத்தொடர முடியாது எனவும் கூறப்படுகிறது.எனவே இது சம்பந்தமான வழிமுறைகள் , ஆணைகள் இருந்தால் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
12-Aug-2020 11:03:16 Tamilkaviya said : Report Abuse
நான் வேலைக்கு சேர்ந்து பின்பு குழந்தை பிறந்தது ஒரு வருடம் முடியாததால் மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் கிடைக்கவில்லை இப்பொழுது புதிய அரசு உத்தரவில் ஒரு வருடம் முடியாமல் இருக்கு பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் குடுக்கலாம் என்று உள்ளது. ஆனால் நான் இடையில் மே மாதம் பணியில் சேர்ந்து பின்பு திரும்பவும் விடுப்பு எடுத்து விட்டேன் அதனால் எனக்கு மே மாதம் வரை மட்டும் தான் சம்பளம் வரும் என்று சொல்கிறார்கள். இவ்வாறு மகப்பேறு விடுப்பில் இடையில் சேர்ந்து திரும்ப விடுப்பு எடுத்தால் சம்பளம் வருமா இல்லையா?
 
30-Jun-2020 21:54:09 Ravisankar said : Report Abuse
மகப்பேறு விடுப்பில் உள்ள ஒருவரை பணிமாறுதல் செய்யலாமா
 
18-May-2020 16:09:10 இமாகுலேட் said : Report Abuse
வாழ்த்துக்கள் தோழர். நான் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன்.எனக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிரசவம் ஆக இருக்கிறது. வரும் ஜுன் மாதம் முதல் வாரம் ( 12.06.2020 ) என்ற நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த பட்டு உள்ளது. குழந்தை பிறந்தநாள் முதல் மகப்பேறு விடுப்பு எடுப்பது அல்லது அதற்கு முன்னரே எடுப்பது என்று தான் உள்ளது. தற்போது விடுமுறை (ஊரடங்கு) என்பதால் பள்ளி திறப்பிற்கு பின் பணியில் சேர்ந்துவிட்டு அடுத்த நாள் முதல் மகப்பேறு விடுப்பை எடுக்க முடியுமா என்று தாங்கள் ஆலோசனை வழங்கவும். அதற்கு அரசானை ஏதும் உள்ளது எனில் அதனையும் வழங்க வேண்டுகிறேன். நன்றி.
 
24-Nov-2019 04:17:12 Ganesan said : Report Abuse
மகப்பேறு விடுப்பில் உள்ள இடைநிலை ஆசிரியர் சிவகங்கைமாவட்டத்தில் பணிபுரிந்து பொது மாறுதலில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளார். பணிவிடுவிப்பு செய்து புதிய பணி இடத்தில் பணி ஏற்றால் விடுப்பு முடிந்துவிடும். பணி விடுவிப்பு செய்து தொடர்ந்து விடுப்பில் இருக்கவும், புதிய பணியிடத்தில் ஊதியம் பெறவும் விதிகளில் இடமிருக்கிறதா ஐயா,
 
01-Sep-2019 04:45:13 சுப்புலட்சுமி said : Report Abuse
நான் அரசுப்பள்ளி ஆசிரியர். உடல்நலம் பாதித்ததால் மருத்துவ விடுப்பு இருப்பு இல்லை. தற்போது இதயத்தில் 3அடைப்பு இருந்து சிகிச்சை எடுத்துள்ளேன். இதற்கு மருத்துவ விடுப்பு உண்டா? எவ்வளவு காலம் எடுக்கலாம்? தயவுசெய்து பதில் செல்லவும்.
 
21-May-2019 15:43:41 Nathiya said : Report Abuse
ஐயா நான் அங்கன்வாடியில் உதவியாளராக சேர்ந்து 10 மாதங்கள் ஆகின்றன.ஜூலை 2.7.18 ல் சேர்ந்தேன்.எனக்கு 11.05.2019 அன்று ஆண்குழந்தை பிறந்தது.எனக்கு குழந்தைப்பேறு விடுப்பு கிடைக்குமா.அதற்கு வழிமுறை வழங்கவும்.ஆபிஸில் விடுமுறை இல்லை என கூறுகிறார்கள்
 
28-Mar-2019 07:06:16 Anbarasan said : Report Abuse
என் மனைவிக்கு 3 மாதத்தில் கருசிதைவு அடைந்து விட்டது அவர் ஆய்வக உதிவியாலர் பணி புறிகிறர் விடுப்பு என்ன இருக்கு சார்
 
23-Feb-2019 10:06:07 Malathi said : Report Abuse
Velaiku sernthu 3 days la maternity leave tharuvangala na Tamil Nadu government la typist exam clear paneiruken
 
23-Oct-2018 02:29:07 ரம்யா said : Report Abuse
அய்யா நான் அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றி வருகிறேன் நான் வேலைக்கு சேர்ந்து இன்றுடன் 23.10.௨௦௧௮ 1 வருடம் 2 மாதம் ஆகியது ஆனால் எனக்கு கடந்த 5.8.2018 எனக்கு க குழந்தை பிறந்தது ஆனால் எனக்கு 9 மாத விடுமுறை வழங்கவில்லை தற்போது எனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகிறது தற்போதாவது எனக்கு ஊதியத்துடன் சேர்ந்த விடுமுறை கிடைக்குமா
 
08-Sep-2018 08:06:38 முது said : Report Abuse
Job joining before First baby birth .next second baby.took maternity leave.now 3 rd baby birth.so maternity leave iruka? Ilaya
 
05-Mar-2018 18:27:21 யுவராணி said : Report Abuse
ஐயா நான் அங்கன்வாடி உதவியாளர் பணியில் 01/09/2017ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.15/02/2018 பெண் குழந்தை பிறந்தது .எங்கள் மேல் அதிகாரி மகப்பேறு விடுப்பு இல்லை பணியில் சேர்ந்து 150நாட்கள் தான் ஆகிறது உனக்கு விடுமுறை கிடையாது.. பணியில் சேர்ந்து வேலை பார் என்று கூறினார்.. எனக்கு அறுவை சிகிச்சை மகப்பேறு குழந்தை பிறந்தது.. எனக்கு விடுப்பு வாங்க சரியான தீர்வு கூறுங்கள்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.