LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

உயிர் உருவாக்குதல்!

தன் வீட்டில் இருக்கும் ஒரு வயது பக்(pug) வகை நாய்க்குட்டியான கூகி பிரசவித்த அற்புதமான தருணத்தை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. அதன் வீடியோவும் உள்ளே! பார்த்து மகிழுங்கள்…
சாதாரணமானது என்று நாம் நினைக்கும் சில சூழ்நிலைகளில், வெளிப்படும் ஆழமான பிரபஞ்ச அறிவு சில சமயங்களில் நம்ப முடியாததாக இருக்கிறது. அந்த அறிவுதான் சரியான பருவத்தில் ஒரு மலரை மலர வைக்கிறது. இவை எல்லாமே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது என்று சிலர் வாதம் செய்யலாம். இப்படி வாதம் செய்பவர்கள் உள்ளேயும், வெளியேயும் நிகழும் உயிர் செயல் பற்றி சரியான கவனம் செலுத்தத் தவறியவர்களாகத்தான் இருப்பார்கள்.
கடந்த சில வருடங்களில் அன்பளிப்பாக பக் (pug – தட்டையான முகமும் குள்ளமான உருவமும் கொண்ட) வகையை சேர்ந்த பல நாய்க்குட்டிகள் என் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தன. இறுதியாக நாலு பக் நாய்க்குட்டிகள் இருந்தது. அந்த நான்கில் ஒன்று வயதானது. இன்னொன்றுக்கு ஒரு வயதுக்கு சற்று கூடுதலாக இருக்கும். மிகவும் துறுதுறுவென சேட்டை செய்யும் அது கர்ப்பமடைந்தது. மூன்று நாட்களுக்கு முன் எலிகள் உருவ அளவிற்கு மூன்று குட்டிகளை ஈன்றது. இதில் வியப்பான அம்சம் என்னவென்றால் துறுதுறுவென, குறும்பு செய்யும் இது, சில மணி நேரங்களில் எப்படி ஒரு பொறுப்பான தாயாக மாறியது என்பதுதான். தன்னுள் இருந்து மூன்று உயிர்கள் வெளிப்பட்ட அதிசயம் தாண்டி அவளுடைய மாற்றம் மிக மிக வியப்பான ஒரு அம்சம்.
தாய் மற்றும் குட்டிகளின் வளர்ச்சியை ஒவ்வொரு நிலையிலும் உடனிருந்து பார்க்க எனக்கு ஆசைதான். ஆனால் நான் இப்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறேன். அமெரிக்கா செல்வதற்கு முன் பெங்களூருவுக்கும், மும்பைக்கும் பறக்க வேண்டியுள்ளது. என்ன செய்வது, உலகின் இப்போதைய தேவையோ ஒரு சுறுசுறுப்பான கால அட்டவணை. ஆனால், வாழ்க்கை குறித்த எனது கருத்தோ காத்திரு, கவனி, இணைத்துக்கொள் என்பதே.
மனித தாய்ப்பாலின் கூறுகள் குழந்தையின் பாலினதிற்கேற்ப மாறுபடும் என்பது நம் பாரம்பரியத்தில் முன்னரே அறிந்ததுதான். ஆண் குழந்தை என்றால் சுரக்கும் தாய்ப்பாலுக்கும் பெண் குழந்தை என்றால் சுரக்கும் தாய்ப்பாலுக்கும் வேறுபாடு இருக்கிறது. குறிப்பிட்ட பாலினத்தின் உடல்ரீதியான, மனரீதியான வளர்ச்சிக்கேற்றவாறு இது மாறுபடும். ஒரு பெண் பிரசவிக்கும் பொழுது கணவன் உடனிருக்க வேண்டும் என்று பாரம்பரியம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. தாய் மற்றும் குழந்தையுடனான அவரின் பிணைப்புக்கு இது மிகவும் முக்கியம்.
குழந்தைப் பிறப்பிற்கு பின்னர் ஒரு பெண்ணின் இயல்பு முற்றிலும் மாறி விடுகிறது. முதலில் பார்த்தது போன்று இனி அவளைப் பார்க்க முடியாது. ஒரு ஆண், புதிதாகப் பிறந்த குழந்தையை முகர்ந்தவுடன் அவனுடைய பாலுறுப்பு ஹார்மோனின் (testosterone) அளவு குறைந்து, ஆண் என்ற நிலையிலிருந்து தந்தை என்ற நிலைக்கு முதிர்ச்சி அடைகிறான் என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு மனிதன் அந்தக் குழந்தையை கையில் எடுத்தவுடன் இயல்பாகவே தன் முகத்திற்கு அருகே கொண்டுபோகிறான். அவன் இப்போது தந்தைப்பருவத்தை நோக்கி நகர்கிறான்.
ஒரு உயிரை உருவாக்குதலும், படைப்பின் ஒவ்வொரு அம்சத்தில் இருக்கும் வியத்தகு பிரபஞ்ச அறிவும் மனித மனத்தால் முழுவதும் கிரகிக்க முடியாதவை. இந்த பிரபஞ்சமே ஒரு உயிருள்ள மனம்தான். அந்த அறிவு உங்களுக்கு உள்ளேயோ, எனக்கு உள்ளேயோ இல்லை. நம் புரிந்து கொள்ளும் தன்மையை முற்றிலும் திறந்த நிலையில் வைத்திருந்தால், படைப்பு மற்றும் படைத்தவனின் புத்திசாலித்தனம் நம் வசப்படும். இல்லையெனில் நம் புலன்களின் கட்டுப்பாட்டில் ஒரு சிதறிய வாழ்க்கையையே வாழ்வோம்.
இந்தப் பிரபஞ்ச அளவிற்கு நீங்களும் மலர வேண்டும்.

by Swathi   on 28 Mar 2014  0 Comments
Tags: உயிர்   உருவாக்குதல்   சத்குரு   Uyir   Uruvakuthal   Sadhguru     
 தொடர்புடையவை-Related Articles
உயிர் விளக்கு..  - வித்யாசாகர்! உயிர் விளக்கு.. - வித்யாசாகர்!
உயிருக்குள் உயிர் உயிருக்குள் உயிர்
உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர் உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர்
பக்தி பற்றி சத்குரு ! பக்தி பற்றி சத்குரு !
விவாகரத்து சரியா? விவாகரத்து சரியா?
ஜப்பானிய ரோபோக்கள்… ஜப்பானிய ரோபோக்கள்…
இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை
நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்? நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.