LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

வள்ளுவரின் கோபமும் சாபமும் - கமலா கந்தசாமி

"வள்ளுவரின் கோபமும் சாபமும்"
கமலா கந்தசாமி.
பக்கங்கள் 100 விலை rs 90
திருவள்ளுவரின் நினைவை போற்று வகையில் இந்த பதிவு.
**""
ஆசிரியர் குறிப்பு....
எஸ்.சுந்தசாமி எனும் இயற்பெயர் கொண்ட கமலா கந்தசாமியின் சொந்த ஊர். திருத்துறைப்பூண்டி எம்.ஏ. வரலாறு. எம்.ஏ.தமிழ் அரசியல் எம்.எட் பயின்ற இவர் தமிழில் எம்.ஃபில் பெற்றவர்.
தேர்ந்த கல்வியாளரான இவர் தற்போது நாகை மாவட்டம் கீழ்வேளூர் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.
முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள். நாவல்கள், தொடர்கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் தொலைக்காட்சி - வானொலி ஊடகங்களுக்கான எழுத்தாக்கங்கள் ஆகியவை இவரது இலக்கியப் பங்களிப்புகள்,
வரலாறு, மதம், தத்துவம், சிறுகதை, நாவல்கள், கய முன்னேற்றம் என பல்வேறு துறை சார்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை எழுதியுள்ளார். நூறு நூல்களைப் படைப்பது தன் எழுத்து வாழ்வின் இலட்சியம் எனும் உயர்ந்த
குறிக்கோளோடு எழுதிக்கொண்டே
இருக்கிறார். கீழத்தஞ்சை மாவட்டத்தின் இந்த குறிப்பிடத்தக்கப் படைப்பாளி,
****
குறளுக்கு மரியாதை
ஒரே ஒரு நூல்தான் திருக்குறள். அந்த சமுத்திரத்திலிருந்து அள்ளி, அள்ளி, பல பாத்திரங்கள் நிரம்பி வழியும் அளவு ஊற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், அந்த சமூத்திரம் ஒரு துளிகூடக் குறையாத பொங்கு மாக்கடலாகவே இருக்கிறது. இதுதான் வள்ளுவனின் சிறப்பு! இது தான் குறளின் சிறப்பு!
குறள் எனும் சமத்துவச் சமுத்திரத்திலிருந்து தன் பங்கிற்கும் தமிழ்ப் பாத்திரமேந்தி மொண்டு வந்திருக்கிறார் கமலா கந்தசாமி. குறள் வழியே பல நூல்களை எழுதிக் குவிக்கும் பேராசை மனசுக்காரர் கமலா கந்தசாமி. இதற்கு முன், 'திருக்குறள் விளக்கச் சிறுகதைகள்', 'வள்ளுவரின் சுய முன்னேற்றச் சிந்தனைகள்', 'வள்ளுவர் கூறும் அறம்' எனும் நூல் களைத் தந்தவர்.
இந்த நூலில் வள்ளுவர் எந்தெந்த திருக்குறளில் கோபம் கொண்டு வெடிப்புறப் பேசுகிறார், எந்தெந்த குறளில் சாபம் கொடுக்கிறார் என்பதை எல்லாம் ஆய்வு நோக்கில் நுணுகி, ஆராய்ந்து, அழகுத் தமிழில் தந்திருக்கிறார்.
'ஆய்வுப் பார்வையில் அணுகி இருக்கிறார்' என்றதும், படிப்பதற்குக் கடினமானதாக, பல் கலைக் கழக ஆய்வேடு போன்று
இருக்குமோ "என்று எவரும் நினைத்துவிட வேண்டாம். ஒரே ஒரு அத்தியாயத்தைப் புரட்டிப் பாருங்கள் போதும். கமலா கந்தசாமியின் எளிமையான ஈரத் தமிழ் நடையில் மனமிளகிப் போவீர்கள்.
எவ்வளவுதான் வசதி வாய்ப்பு மிக்கவராய் இருந்தாலும், நமக்கு தீங்கு செய்பவரைப் வெறுத்து ஒதுக்குவதற்கு முன் அவர் செய்த நன்மைகளை சற்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிற திருவள்ளுவரின் வல்லவரின் கோட்பாடு மிக்கவர் ஆசிரியர்.
****
பயன்மிக்க நூல்களைப் படைக்கவேண்டும்" என்ற இலட்சியத் தாகத்தோடு, தணியாத வேகத்தோடு எழுதி வருகிறவர் ஆசிரியர்.
உலகின் பொதுமறையான திருக்குறள் மீது பக்தி கொண்டவன் கருத்துச் சுரங்கம் அது! தோண்டத் தோண்ட வைரம் கிடைக்கும் ஆழ் சுரங்கம் அது! பைபிள் நூலுக்கு அடுத்தபடியாக மிக மிக அதிக நூல்கள் வந்திருப்பது குறள் பற்றியே .
எத்தனை நூல் எத்தனை விளக்கம் வந்தாலும், இன்னும் முழுமையாக விளக்கிட முடியாத அற்புத நூல் இது.
ஆசிரியர் எழுதும் பயன்மிக்க நூல் வரிசையில் திருக்குறளுக்கு ஒரு தனியான முக்கியத்துவம் உண்டு.
முதன் முதலில் "வழிகாட்டும் வள்ளுவர் என்ற தலைப்பில் இளையோர்க்கான ஒரு நூல் படைத்தார்.
கற்றோர் பலரால் அது ஏற்கப்பட்டு போற்றப்பட்டு பல வெளியீடுகள் வந்து, பரிசும் பெற்றது .பலர் மனம் கவர்ந்த நூல் அது எனச் சிறப்பித்தனர்.
அடுத்து பல திருக்குறள்களைத் தேர்வு செய்து,அத்தலைப்பில் நல்ல தரமான சிறுகதைகள் எழுதினார்
ஆசிரியர்.
அவை பிரபல ஜனரஞ்சக இதழ்களில் வெளிவந்தன. அதோடு அது *திருக்குறள் விளக்கச் சிறு கதைகள்" என்று ஒரு நூலாகவும் வந்தது.
அடுத்து "வள்ளுவரின் சுயமுன்னேற்றச் சிந்தனைகள்” என்று ஒரு நூல் எழுதினார் ஆசிரியர்.
பிறகு "வள்ளுவர் கூறும் அறம்” என்ற அற்புத் நூல் ஒன்றும் எழுதி தமிழ் உலகத்திற்கு தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஆசிரியரின்
இப்போதைய முயற்சியே இந்த "வள்ளுவரின் கோபமும் சாபமும்" என்ற நூல் .இனியும் திருக்குறள் பற்றி பல நூல்கள் எழுதிட விருப்பமும் ஆர்வமும் இருக்கிறது. எளிய உரைநூல் ஒன்று எழுதும் ஆர்வமும் உண்டு ஆசிரியருக்கு.
வான் மறை தந்த வள்ளுவரின் சிறப்பை எல்லாரும் அறியச் செய்வதே ஆசிரியரின்
நோக்கம் .
டி.வி., கணினி... என எத்தனை அறிவியல் சாதனங்கள் வந்தாலும், நூல்படிக்கும் பழக்கம் தனி! அதனைக் குறைக்கவோ ஒழிக்கவோ முடியாது! என நிருபணம் ஆகி வரும் இந்த வேளையில்,
இறவாத புது நூல்கள் படைக்க வேண்டும் என்ற கவி மன்னவன் பாரதியின் கட்டளையை ஏற்று எழுதி வருகிறார் ஆசிரியர்.
அறிவுரை தந்த திருவள்ளுவர் சில சமயங்களில் சில திருக்குறள் மூலமாக கோபத்தை வெளிப்படுத்துகிறார், சில திருக்குறள் மூலமாக
சாபத்தையும் கொடுக்கிறார் மக்களுக்கு.
மொத்தம் 50 திருக்குறள்களில்
திருவள்ளுவர் சாபமிட்டதையும் கோபம் கொண்டதையும் ஆசிரியர் அழகாக திருக்குறளோடு விளக்குகிறார் ஆசிரியர்.
****
49
திருவள்ளுவரின் கோபம்.
 
'அறநூல் கூறும் நீதி கடுமையானது கசப்பானது. அது மருந்து போல உடல் நோய் தீர்க்கும் மருந்து கசப்பாய் இருப்பினும் நோய்தீர்க்கும் அது போல் நீதி நூல் கூறும் நீதி கசப்பாய் இருப்பினும் அறியாமை நோய். குற்ற நோய் தீர்க்கும். '
காப்பியம் தேன்கலந்து நீதி கூறும் கதைமூலம் மறைமுகமாக நீதி கூறும். பிறன்மனை நோக்கிய இராவணன் அழிந்ததை இராமாயணம். இனிமையான காப்பியம் வழி கூறும் ஆனால் குறளோ, 'பிறன்மனை நோக்காத பெருநலம் சான்றோர்க்கு அழகு' என உறுதியாகக்கூறும்,
சூதின் கொடுமையைப் பாரதம் பவ்யமுடன் கூறும், நளவெண்பா நயமாகக் கூறும். வள்ளுவரோ வேண்டற்க வென்றிடினும் சூது என்று தெளிவாகக் கட்டளைபோல் சொல்வார் கேள்வி பதில். நயமான எடுத்துக்காட்டு. உவமை, உருவகம் போன்ற அணிகள். இல்பொருள் உவமை, பிறிதுமொழிதல் எனப்பல்வேறு யுத்திகளை நீதிசொல்லப் பயன்படுத்தும் வள்ளுவர். சில தீமை கண்டு. சினந்து பொங்கி, கோபத்துடன் சாடும் பகுதிகளை மட்டும் இந்நூலில் காணக்கிடக்கிறது.
தீமைகண்டு பொங்குவாய் என்ற பாரதியின் சீற்றம். அன்றே வள்ளுவருக்கும் இருந்திருக்கிறது.
மிகத்தவறான செயலை விளக்கும்போது. அதன் தீமைகளை எடுத்துக் காட்டும்போது கொஞ்சம் கடுமை காட்டுவார் வள்ளுவர்.
கல்விபற்றிச் சொல்லும்போது, எண்என்ப ஏனை எழுத்தென்ப இவையிரண்டும் கண் என்ப' என்று இதமாகச் சொல்லும் வள்ளுவர். அதைக் கேட்காது. கல்லாமை கொண்டவரை முகத்தில் இரண்டு புண் உடையவர் என்று கோபப்படுவார். அது கண்ணே அல்ல புண்
எனப்பழிப்பார். இதுவே வள்ளுவர் சொல்நயம் அந்தக் கோபத்தைத்தான் நாம் இதுவரை கண்டோம்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
எனக் குறளை ஆரம்பிக்கும் வள்ளுவர், இதமாக, பதமாக, இந்த உலகின் முதல்வன் இறைவன் என எடுத்துரைப்பார். அது கேட்காது இருப்பவன், கற்றவனே என்றாலும் வள்ளுவருக்கு கோபம் வரும். அக்கோபத்தால் 'கற்றதனால் ஆய பயன் என்ன?' என்று வெடிப்பார்.
'இறைப்பற்று இல்லாது போயின் கல்வியால் பயனே இல்லை' எனப் பழிப்பார். அதுவே. 'வள்ளுவர் சொல்திறன்' எனலாம்.
அந்தத் திறன் மிக்க கோப மொழிகளையே இந்நூலில் அழகாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
 
-திரு.நா.கருணாமூர்த்தி -முகநூல் பதிவு
by Swathi   on 31 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு திருக்குறள் எழுதும் தண்டனை ஹெல்மெட் அணியாதவர்களுக்கு திருக்குறள் எழுதும் தண்டனை
உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் போட்டி உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் போட்டி
குறள் வழி  மாத இதழ்  - நவம்பர் 2023  உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - நவம்பர் 2023 உங்கள் வாசிப்பிற்கு
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு
புதுக்கவிதையில் காமத்துப்பால் - ஆசி கண்ணம்பிரத்தினம். புதுக்கவிதையில் காமத்துப்பால் - ஆசி கண்ணம்பிரத்தினம்.
திருவள்ளுவர் - ஞானவெட்டியான் என்னும் ஞானவெட்டி திருவள்ளுவர் - ஞானவெட்டியான் என்னும் ஞானவெட்டி
திருக்குறள் விளக்க நீதிக்கதைகள் -லட்சுமி அம்மாள் திருக்குறள் விளக்க நீதிக்கதைகள் -லட்சுமி அம்மாள்
திருக்குறளில் தேன் கதைகள் - அரிமா புலவர் ந.நாகராஜன் திருக்குறளில் தேன் கதைகள் - அரிமா புலவர் ந.நாகராஜன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.