வீரபத்திரர் இத்தலத்தில், மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு, "கல்யாணசுந்தர வீரபத்திரர்' என்று பெயர். அக்னி கிரீடத்துடன்,
நான்கு கரங்களில் வில், அம்பு, கத்தி, தண்டம் வைத்திருக்கிறார். காலில் காலணி உள்ளது. வலப்புறம் தட்சன் வணங்கியபடி இருக்கிறான்.குடும்பத்தில்
மகிழ்ச்சி நிலவ, பயப்படும் குணம், மனக்குழப்பம் நீங்க, புத்திரப்பேறு உண்டாக இத்தலத்தில் தம்பதி சமேதராக "வீரபத்திரர் ஹோமம்' செய்கின்றனர்.
ஹோமம் முடிந்ததும், சுவாமிக்கு பின்புறம் உள்ள மரத்தாலான இரண்டு திருவாசிகள் அவர்கள் கையில் தரப்படுகிறது. அதில் வெற்றிலை செருகி,
தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வருகின்றனர். திருவாசிகளை உற்சவர் சிலைக்கு பின்புறம் வைக்கின்றனர்.சுண்டல், பச்சைப்பயிறு, உளுந்து, மிளகு
ஆகியவை கலந்த வடை படைத்து விசேஷ பூஜை செய்கின்றனர். பின்னர், சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர். இந்த யாகம்
நடத்த 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
வீரபத்திரர் இத்தலத்தில், மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு, "கல்யாணசுந்தர வீரபத்திரர்' என்று பெயர். அக்னி கிரீடத்துடன், நான்கு கரங்களில் வில், அம்பு, கத்தி, தண்டம் வைத்திருக்கிறார். காலில் காலணி உள்ளது. வலப்புறம் தட்சன் வணங்கியபடி இருக்கிறான். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ, பயப்படும் குணம், மனக்குழப்பம் நீங்க, புத்திரப்பேறு உண்டாக இத்தலத்தில் தம்பதி சமேதராக "வீரபத்திரர் ஹோமம்' செய்கின்றனர்.
ஹோமம் முடிந்ததும், சுவாமிக்கு பின்புறம் உள்ள மரத்தாலான இரண்டு திருவாசிகள் அவர்கள் கையில் தரப்படுகிறது. அதில் வெற்றிலை செருகி, தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வருகின்றனர். திருவாசிகளை உற்சவர் சிலைக்கு பின்புறம் வைக்கின்றனர். சுண்டல், பச்சைப்பயிறு, உளுந்து, மிளகு ஆகியவை கலந்த வடை படைத்து விசேஷ பூஜை செய்கின்றனர். பின்னர், சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர். இந்த யாகம் நடத்த 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். |