மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவிலான பாணலிங்கம் இருப்பது சிறப்பு.வேங்கி தேசத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது சந்திரகிரி.
இங்கே, ஊத்துக்காடு எனும் கோட்டம் இருந்தது. இந்த ஊத்துக்காடு எல்லைக்குள், வடதில்லை எனும் கிராமத்தைத் தோற்றுவித்த மன்னன், அங்கேதான் எம்பார்
சுவாமிகளுக்காக அழகிய சிவாலயத்தை எழுப்பினான். தில்லையம்பதி எனப்படும் சிதம்பரம் திருத்தலத்துக்கு இணையாக இந்த வடதில்லைத் தலமும்
போற்றப்பட வேண்டும் எனும் நோக்கத்துடன், கோயிலுக்கு நிலங்களையும் நிவந்தங்களையும் வாரி வழங்கினான் மன்னன். நந்தியாறு எனும் ஆரணி
ஆற்றங்கரையில் அமைந்த இந்தக் கோயில்- காசிக்கு நிகரான தலமாகவும், ஆரணி ஆறு-கங்கைக்கு இணையான தீர்த்தமாகவும் போற்றப்பட்டது. ஆற்றில்
நீராடி, இறைவனைத் தொழுதால் , பாவங்கள் யாவும் தொலையும்; தோஷங்கள் அனைத்தும் கழியும் என்பது ஐதீகம் ! எனவே, இங்கேயுள்ள சிவலிங்கத்
திருமேனிக்கு பாபஹரேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர் மக்கள். மூலவருக்கு அருகிலேயே, கருவறையில் உள்ளங்கை லிங்கம்
கொணர்ந்த நாயனாருக்குக் கிடைத்த லிங்கத் திருமேனியும் உள்ளது.
மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவிலான பாணலிங்கம் இருப்பது சிறப்பு. வேங்கி தேசத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது சந்திரகிரி. இங்கே, ஊத்துக்காடு எனும் கோட்டம் இருந்தது. இந்த ஊத்துக்காடு எல்லைக்குள், வடதில்லை எனும் கிராமத்தைத் தோற்றுவித்த மன்னன், அங்கேதான் எம்பார் சுவாமிகளுக்காக அழகிய சிவாலயத்தை எழுப்பினான்.
தில்லையம்பதி எனப்படும் சிதம்பரம் திருத்தலத்துக்கு இணையாக இந்த வடதில்லைத் தலமும் போற்றப்பட வேண்டும் எனும் நோக்கத்துடன், கோயிலுக்கு நிலங்களையும் நிவந்தங்களையும் வாரி வழங்கினான் மன்னன். நந்தியாறு எனும் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்த இந்தக் கோயில் காசிக்கு நிகரான தலமாகவும், ஆற்றில் நீராடி, இறைவனைத் தொழுதால் , பாவங்கள் யாவும் தொலையும், தோஷங்கள் அனைத்தும் கழியும் என்பது ஐதீகம்.
எனவே, இங்கேயுள்ள சிவலிங்கத் திருமேனிக்கு பாபஹரேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர் மக்கள். மூலவருக்கு அருகிலேயே, கருவறையில் உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனாருக்குக் கிடைத்த லிங்கத் திருமேனியும் உள்ளது. |