வீரபத்திரருக்கு நாம அலங்காரம்.இக்கோயிலுக்கு அருகிலுள்ள கஜசம்ஹாரமூர்த்தி கோயிலில் பிட்சாடனாராக வந்த சிவன், மோகினி வேடத்தில் வந்த திருமால்
இருவரையும் தரிசிக்கலாம். இங்கு வீரபத்திரர் சுதையால் ஆன விக்ரகத்தில், அமர்ந்த, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.வீரபத்திரரை "வழித்து ணையான்',
"வழிக்கரையான்' என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பைரவருக்கு நாய் வாகனம் இருப்பது வழக்கம். இங்கு
வீரபத்திரருக்கு நாய் வாகனம் இருக்கிறது.திருமாலுக்கு பிறந்த சாஸ்தாவைக் காக்க வந்தவர் என்பதால் இவரது நெற்றியில் திருமாலுக்குரிய நாமம்
இடுகின்றனர். சிவனுக்குரிய விபூதியை பிரசாதமாக தருகின்றனர்.இவரைத் தவிர மற்றொரு வீரபத்திரர் நின்ற கோலத்தில் உள்ள சன்னதி இருக்கிறது. அருகில்
தூண்டிவீரன், வாகையடியான், லாடசன்னாசி, உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றனர்.குழந்தைகளுக்கான வழிபாடு:
பாலசாஸ்தா சன்னதி முன் மண்டபத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் இருக்கின்றனர். பிறக்கும் குழந்தைகள் நோயின்றி இருக்கவும், அவர்கள்
கல்வியில் சிறக்கவும் இக்கோயிலில் பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
வீரபத்திரருக்கு நாம அலங்காரம். இக்கோயிலுக்கு அருகிலுள்ள கஜசம்ஹாரமூர்த்தி கோயிலில் பிட்சாடனாராக வந்த சிவன், மோகினி வேடத்தில் வந்த திருமால் இருவரையும் தரிசிக்கலாம். இங்கு வீரபத்திரர் சுதையால் ஆன விக்ரகத்தில், அமர்ந்த, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.வீரபத்திரரை "வழித்து ணையான்', "வழிக்கரையான்' என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பைரவருக்கு நாய் வாகனம் இருப்பது வழக்கம்.
இங்கு வீரபத்திரருக்கு நாய் வாகனம் இருக்கிறது. திருமாலுக்கு பிறந்த சாஸ்தாவைக் காக்க வந்தவர் என்பதால் இவரது நெற்றியில் திருமாலுக்குரிய நாமம் இடுகின்றனர். சிவனுக்குரிய விபூதியை பிரசாதமாக தருகின்றனர். இவரைத் தவிர மற்றொரு வீரபத்திரர் நின்ற கோலத்தில் உள்ள சன்னதி இருக்கிறது. அருகில் தூண்டிவீரன், வாகையடியான், லாடசன்னாசி, உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றனர்.
குழந்தைகளுக்கான வழிபாடு, பாலசாஸ்தா சன்னதி முன் மண்டபத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் இருக்கின்றனர். பிறக்கும் குழந்தைகள் நோயின்றி இருக்கவும், அவர்கள் கல்வியில் சிறக்கவும் இக்கோயிலில் பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். |