LOGO

அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் [Arulmigu thiruppayarunathar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   திருப்பயற்றுநாதர் (முத்கபுரீஸ்வரர்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு திருப்பயற்றுநாதர் / முக்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி - 610 101 நாகப்பட்டினம் மாவட்டம்.
  ஊர்   திருப்பயத்தங்குடி
  மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 610 101
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலவிநாயகர் சித்திபுத்தி விநாயகர் எனப்படுகிறார். கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோயில் சுற்றுப்பகுதியில் சித்திவிநாயகர், தெட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு மிளகு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்நாளில் வணிகர் ஒருவர், மிளகு மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக இவ்வூர் வழியாக வண்டியில் ஏற்றிவந்தார். அப்போது அருகில் சுங்கச்சாவடி இருப்பதை அறிந்தார். மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும். பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை.

இவர் கொண்டு செல்லும் மிளகு மூட்டைகளுக்கு சுங்கவரி கட்டினால் வணிகருக்கு வருமானம் ஏதும் கிடைக்காது. இதை உணர்ந்த வணிகள் மிகவும் வருந்தினார். சிவ பக்தராகியி இவர் இத்தல சிவபெருமானிடம்,""இறைவா! சுங்கவரி செலுத்தினால் எனக்கு பேரிழப்பு ஏற்படும். தங்கள் திருவருளால் இந்த மிளகு மூட்டைகளை, சுங்கச்சாவடி கடந்து போகும் வரை பயறு மூட்டைகளாக  மாற்றி அருள்புரியவேண்டும்,''என வேண்டினார். பின் அங்கேயே உறங்கினார். இறைவன் மிளகு மூட்டைகளை பயறு மூட்டைகளாக மாற்றிவிட்டார். அடியவராக வணிகரின் கனவில் மிளகு பயறாக மாற்றப்பட்டதை அறிவித்தார். பொழுது விடிந்தது. கனவில் இறைவன் கூறியதை கேட்டு மகிழந்த வணிகர் நாகப்பட்டினம் நோக்கி பயணத்தை துவக்கினார். சுங்கச்சாவடி வந்தது. சுங்க அதிகாரிகள் அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். பயறுமூடைகளாக இருப்பதை அறிந்து வரி விதிக்காமல் அனுப்பிவிட்டனர். சுங்கச்சாவடி கடந்த பின் பயறு மூடைகள் அனைத்தும் மிளகு மூடைகளாக மாறிவிட்டன. இதனால் இத்தலம் "திருப்பயற்றூர்' எனவும், இறைவன் "திருப்பயற்றுநாதர்' எனவும் அழைக்கப்படுகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    சிவன் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சூரியனார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சடையப்பர் கோயில்     அம்மன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     அய்யனார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     திவ்ய தேசம்
    வள்ளலார் கோயில்     விநாயகர் கோயில்
    சித்தர் கோயில்     முருகன் கோயில்
    சேக்கிழார் கோயில்     பிரம்மன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    முனியப்பன் கோயில்     வீரபத்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்