இத்தலத்தில் இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் தியாக விநாயகர் எனப்படுகிறார். சப்தவிடத்தலங்கள், "டங்கம்'
என்றால் "கல் சிற்பியின் சிற்றுளி' என்று அர்த்தம். "விடங்கம்' என்றால் "சிற்பியின் உளி இல்லாமல்' என்று பொருள். "சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்' தானே
உருவான இயற்கை வடிவங்களை "சுயம்பு' அல்லது "விடங்கம்' என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் சப்தவிடத்தலங்கள்
எனப்பட்டன. இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமானின் திருமுடி கண்டதாக பிரம்மா
பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய
முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் லிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க
பெறுகிறார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன. இதனால் இத்தலம் "கோளிலி' ஆனது.
இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு.
இத்தலத்தில் இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் தியாக விநாயகர் எனப்படுகிறார். சப்தவிடத்தலங்கள், "டங்கம்' என்றால் "கல் சிற்பியின் சிற்றுளி' என்று அர்த்தம். "விடங்கம்' என்றால் "சிற்பியின் உளி இல்லாமல்' என்று பொருள். "சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்' தானே உருவான இயற்கை வடிவங்களை "சுயம்பு' அல்லது "விடங்கம்' என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன. இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமானின் திருமுடி கண்டதாக பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் லிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன. இதனால் இத்தலம் "கோளிலி' ஆனது. இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு. |