இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக "தான்தோன்றீசுவரர்' அருள்பாலிக்கிறார். கோயிலின் பின்புறத்தில் உள்ள விநாயகருக்கு பொய்யா விநாயகர் என்றுபெயர். இவர் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், ""சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும், ஆனால் சுவர் இடிகிறது'' என்கிறார். அதற்கு விநாயகர் இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கு. பதில் கிடைக்கும் என்கிறார். ராஜாவுக்கோ, குளத்தில் மூழ்கினால் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர் காசியை விட வீசம் அதிகம் இந்தக்குளத்தில்.
காசியில் விட்ட பொருள்கள் எல்லாம் இந்த குளத்தில் கிடைக்கவே மன்னனின் சந்தேகம் தீர்ந்தது. இருந்தும் குளத்தில் மூழ்கிய மன்னன் இறைவனை நினைத்து எழுந்தான். கூடவே கோயிலின் கர்ப்பக்கிரகமும் வந்தது. மகிழ்ச்சியடைந்த மன்னன் மீதி கோயிலை கட்டி முடித்தான். சீறப்புலி நாயன்மார் பிறந்து, வாழ்ந்து, முக்தியடைந்த தலம். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வது மிகவும் சிறப்பு. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பானதாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தன் திருப்புகழால் பாடியுள்ளார். அகத்தியருக்கு சிவன் திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று. |