இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் பிரதானவிநாயகர் எனப்படுகிறார். மேலும் இங்குள்ள ஜூரம் தீர்த்த விநாயகரை வழிபட்டு தீராத காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டு பிரச்சினைகள் நீங்கப்பெறுகிறார்கள். லட்சுமி தீர்த்தத்தில் வரலட்சுமி நோன்பு நாளில் மூழ்கி நோன்பு இருந்து மறுநாளும் மூழ்கி மாணிக்கவண்ணரைத் தரிசித்துப் பாரனை செய்தால் கடன் தொல்லை நீங்கும். செல்வம் பெருகும் என்று இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர். லட்சுமி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் சேர்கின்றனர். இத்தலத்து மூலவர் மாணிக்கவண்ணரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு தலவிருட்சம் வாழை. கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது. சுந்தரர் வாழை காய்க்கும் மருகல் நாட்டு மருகலே என்று கூறியுள்ளார். இவ்வாழை எவ்வித செய்நேர்த்தியும் இன்றித் தானாகவே பயிராகிறது.இதன் பழம் தனித்தொரு இன்சுவை உடையது. இதனை கோயிலுக்கு வெளியில் பெயர்த்து நட்டால் பயிராவதில்லை. வெளிப்பிரகாரத்தில் வன்னிமரம் ஒன்று இருக்கிறது. அது இத்தல விசேசத்திற்குச் சிறந்த சான்றாக இருக்கிறது.
இறைவன் திருநாமம் வடமொழியில் ரத்தினகிரீசுவரர் என்றுவழங்குகிறது. சிவலிங்கத்திரு வுருவில் கவர்ச்சியானவைகளில் இதுவும் ஒன்று.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் பிரதானவிநாயகர் எனப்படுகிறார். மேலும் இங்குள்ள ஜூரம் தீர்த்த விநாயகரை வழிபட்டு தீராத காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டு பிரச்சினைகள் நீங்கப்பெறுகிறார்கள். லட்சுமி தீர்த்தத்தில் வரலட்சுமி நோன்பு நாளில் மூழ்கி நோன்பு இருந்து மறுநாளும் மூழ்கி மாணிக்கவண்ணரைத் தரிசித்துப் பாரனை செய்தால் கடன் தொல்லை நீங்கும். செல்வம் பெருகும் என்று இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர். லட்சுமி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் சேர்கின்றனர். இத்தலத்து மூலவர் மாணிக்கவண்ணரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு தலவிருட்சம் வாழை. கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது. சுந்தரர் வாழை காய்க்கும் மருகல் நாட்டு மருகலே என்று கூறியுள்ளார். இவ்வாழை எவ்வித செய்நேர்த்தியும் இன்றித் தானாகவே பயிராகிறது.இதன் பழம் தனித்தொரு இன்சுவை உடையது. இதனை கோயிலுக்கு வெளியில் பெயர்த்து நட்டால் பயிராவதில்லை. வெளிப்பிரகாரத்தில் வன்னிமரம் ஒன்று இருக்கிறது. அது இத்தல விசேசத்திற்குச் சிறந்த சான்றாக இருக்கிறது.இறைவன் திருநாமம் வடமொழியில் ரத்தினகிரீசுவரர் என்றுவழங்குகிறது. சிவலிங்கத்திரு வுருவில் கவர்ச்சியானவைகளில் இதுவும் ஒன்று. |