இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் , தமிழகத்தில் உள்ள பெரிய வீரபத்திரர் கோயில். பார்வதியும் ருத்ர தாண்டவம் ஆடினாள். சிவனிடம்
இருந்து வெளிப்பட்ட வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து "அகோர வீரபத்திரர்' தோன்றினார். பார்வதியின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள்
சிதறி பத்ரகாளி 9 வடிவில் தோன்றினாள். அகோர வீரபத்திரரும், பத்ரகாளியும் சிவபார்வதியை வணங்கினார்கள். சிவபெருமான் இவர்களிடம், ""நீங்கள் இருவரும்
தட்சனிடம் அவிர்ப் பாகம் கேளுங்கள். தராவிட் டால் அவனை அழித்துவிடுங்கள்,'' என உத்தரவிட்டார். சிவனின் உத்தரவின்படி வீரபத்திரர் தட்சனிடம் அவிர்பாகம்
கேட்டார். தட்சன் வீரபத்திரரை அவமானப் படுத்தி விட்டான். பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் வீரபத்திரர் நியாயம் கேட்க, அவர்கள் தட்சனுக்கு பயந்து
அமைதியாக இருந்தனர். கோபம் கொண்ட வீரபத்திரர் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் தாக்க, பத்ரகாளி பெண்களை தாக்கினாள். தட்சனோ சாகாவரம்
பெற்றவன். வீரபத்திரர் அவனது தலையை வெட்டவும், தலை தனியாக யாகத்தில் போய் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால்
அருகிலிருந்த ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார். அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம் தணியவில்லை. சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி
கேட்க, ""தெற்கேயுள்ள அனுமந்தபுரத் தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும்,'' என்று கூறினார். தட்சனும்
வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்தார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் , தமிழகத்தில் உள்ள பெரிய வீரபத்திரர் கோயில். பார்வதியும் ருத்ர தாண்டவம் ஆடினாள். சிவனிடம் இருந்து வெளிப்பட்ட வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து "அகோர வீரபத்திரர்' தோன்றினார். பார்வதியின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள் சிதறி பத்ரகாளி 9 வடிவில் தோன்றினாள். அகோர வீரபத்திரரும், பத்ரகாளியும் சிவபார்வதியை வணங்கினார்கள். சிவபெருமான் இவர்களிடம், ""நீங்கள் இருவரும் தட்சனிடம் அவிர்ப் பாகம் கேளுங்கள்.
தராவிட் டால் அவனை அழித்துவிடுங்கள்,'' என உத்தரவிட்டார். சிவனின் உத்தரவின்படி வீரபத்திரர் தட்சனிடம் அவிர்பாகம் கேட்டார். தட்சன் வீரபத்திரரை அவமானப் படுத்தி விட்டான். பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் வீரபத்திரர் நியாயம் கேட்க, அவர்கள் தட்சனுக்கு பயந்து அமைதியாக இருந்தனர். கோபம் கொண்ட வீரபத்திரர் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் தாக்க, பத்ரகாளி பெண்களை தாக்கினாள். தட்சனோ சாகாவரம் பெற்றவன். வீரபத்திரர் அவனது தலையை வெட்டவும், தலை தனியாக யாகத்தில் போய் விழுந்தது.
தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் அருகிலிருந்த ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார். அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம் தணியவில்லை. சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க, ""தெற்கேயுள்ள அனுமந்தபுரத் தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும்,'' என்று கூறினார். தட்சனும் வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்தார். |