இங்குள்ள சிவபெருமான் பாணலிங்க வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி பல்லவ மன்னர்களின் கலை நயத்தைச் சொல்லும் வண்ணம் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பவர்மன் எனும் மன்னனால் இது கட்டப்பட்டது.
நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, மிகப்பெரிய விமானங்களுடன் கலை நுட்பங்களும், அழகிய தூண்களும் மணி மண்டபமும் கொண்டு மிகப்பெரிய கோயிலாக இது விளங்கி வருகிறது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பிரதேசத்தை ஆண்ட பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த ஊத்துக்காடு புகழ்பெற்ற ஒரு கோட்டமாக பெரும் சிறப்புடன் விளங்கி வந்தது. |