கோயிலின் உட்பிரகார ஈசான மூலையில் பச்சைக் கல்லில் ஆன மகாபைரவர் வாகனமின்றி தனித்தே காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். மூன்று நிலையுள்ள ரிஷி கோபுரவாயில் நுழைந்து அடுத்த சுற்றினை அடையலாம், உள்ளே 6 படிகள் கடந்து சென்று மூலவரை வணங்கலாம் மகா மண்டபம், நவக்கிரக கோயிலை அடுத்து பலிபீடமும் சிங்க மண்டபமும் உள்ளன.
தனிக்கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறாள், அன்னையின் திருப்பெயர் பட்டுவதனாம்பிகை, மண்டபத்தூண்களில் 12 விநாயகர்கள் காட்சியளிக்கின்றனர். மூன்றாவது திருச்சுற்றில் அட்ட நாகங்களான அனந்தன் வாசுகி, தட்சகன், கார்க்கோடன், சங்கன், பத்மன், மகாபத்மன், குளிகன் ஆகியோர் உள்ளனர்.
நான்முகன், நந்தி தேவர், கொற்றவை, வல்லபவிநாயகர், ஏழு கன்னியர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மகா கணபதி, ஆறுமுகக்கடவுள், தட்சிணாமூர்த்தி, திருமால் ஆகியோரை தரிசிக்கலாம், பிரசித்தி பெற்ற ஜேஷ்டாதேவி பிரகாரத்தில் அருள் பாலிக்கிறார். பச்சைக் கல்லாலான தூங்கானைமாடக் கோயிலான இக்கோயில் விமானத்தில் 3 கலசங்கள் கொண்டு அழகுடன் விளங்குகிறது. |