காசியில் பித்ருக்கடன் செய்தால் என்ன புண்ணியமோ, அதே புண்ணியம் இங்குள்ள செய்யாற்றில் செய்தாலும் கிடைக்கும் என்பது சிறப்பு.இங்கு விநாயகர்,
தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, நாகர், காசி விஸ்வநாதர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், நடராஜர், சிவகாமி ஆகியோர் உள்ளனர்.
பித்ரு சாபத்தை நீக்கும் பரிகாரத் தலங்களாக காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற பிரபலமான திருத்தலங்களில் ஆரம்பித்து எண்ணற்ற தலங்கள்
சொல்லப்படுகின்றன. பித்ரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற தலங்களுக்குச் சென்று உரிய பரிகாரத்தைச் செய்து நிவர்த்தி பெறுகின்றார்கள்.
பஞ்சபூதத் திருத்தலங்களுள் ப்ருத்வி ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்துக்குத் தென்கிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவில் செய்யாற்றுக் கரையில் அமைந்துள்ளது
காவாந்தண்டலம். பாலாறின் துணை நதியான இந்த செய்யாறு, இன்று வெறும் மணற்திட்டாக இருக்கிறது. மழைக் காலங்களில் மட்டுமே ஆற்றில் நீர் ஓடும்.
முருகப் பெருமானால் உருவாக்கப்பட்ட ஆறு என்று புராணம் செய்யாறைச் சிறப்பித்துச் சொல்கிறது. சேய் என்றால் முருகன் என்று பொருள். காசியப தண்டலம்
என்று ஆதி காலத்தில் அழைக்கப்பட்ட திருத்தலமே இன்று மருவி காவாந்தண்டலம் ஆகி உள்ளது.
பித்ருக்கடன் செய்தால் என்ன புண்ணியமோ, அதே புண்ணியம் இங்குள்ள செய்யாற்றில் செய்தாலும் கிடைக்கும் என்பது சிறப்பு. இங்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, நாகர், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், நடராஜர், சிவகாமி ஆகியோர் உள்ளனர்.
பித்ரு சாபத்தை நீக்கும் பரிகாரத் தலங்களாக காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற பிரபலமான திருத்தலங்களில் ஆரம்பித்து எண்ணற்ற தலங்கள் சொல்லப்படுகின்றன. பித்ரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற தலங்களுக்குச் சென்று உரிய பரிகாரத்தைச் செய்து நிவர்த்தி பெறுகின்றார்கள்.
பாலாறின் துணை நதியான இந்த செய்யாறு, இன்று வெறும் மணற்திட்டாக இருக்கிறது. முருகப் பெருமானால் உருவாக்கப்பட்ட ஆறு என்று புராணம் செய்யாறைச் சிறப்பித்துச் சொல்கிறது. சேய் என்றால் முருகன் என்று பொருள். காசியப தண்டலம் என்று ஆதி காலத்தில் அழைக்கப்பட்ட திருத்தலமே இன்று மருவி காவாந்தண்டலம் ஆகி உள்ளது. |