LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இவர்களுக்குப் பின்னால் (Behind These People)

வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்

வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் 

சமூக ஆர்வலர்:

    அமெரிக்காவில் வசித்து வரும் திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் அவர்கள் தன் தாய்நாட்டிற்காக பல்வேறு சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கூட்டு முயற்சியாக பல்வேறு நபர்களிடம் இருந்து நன்கொடை வாங்கி அதைத் தமிழ் நாட்டில் உள்ள கிராம மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகிறார். பொறியியல் படித்துள்ள இவர் தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.

சமூக சேவைகள்:

    சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம், சூரிய மின்சக்திகளைக் கிராமங்களில் பொருத்துவது போன்ற திட்டங்களைக் கிராமங்களில் திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் அவர்களின் குழு திறம்படச் செய்திருக்கின்றது. மேலும் கிராமங்களில் இருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளை புணரமைத்து, குழந்தைகளுக்கு ஏற்ற முறையில், அவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாகப் பல மாற்றங்களைச் செயல்படுத்தியது.

    கண் பார்வையற்றோருக்கு ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தையும் அக்குழு செயல்படுத்தியது. இதில் மனநிறைவும் கண்டது. கஜா புயலின் போது வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டி தந்தது அக்குழு. 33 வீடுகள் இத்திட்டத்தில் கட்டப்பட்டன. ஏழை எளியோருக்கு உணவு கொடுக்கும் திட்டத்தையும் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் அக்குழு செய்து வருகிறது. மேலும் கிராமங்களில் ஏரிகள் புணரமைக்கும் திட்டத்தையும் செய்து அதில் வெற்றியும் கண்டது.

குழு:

    யார் வேண்டுமானாலும் சேவை செய்யும் அவரது குழுவில் இணையலாம். ‘இது அவருடைய குழு அல்ல. இது மக்களுக்கான ஒரு குழு’ என்று திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார். இங்குக் கட்டளைகள் திணிக்கப்படுவதில்லை. தன்னார்வலர்கள் தாங்களாகவே பங்கேற்கின்றனர். மனிதனுக்கு மனிதன் கரம் கொடுத்து ஒன்றிணைகின்றனர். நம்மைப் போல் பிறரும் நலமுடன் வாழ வேண்டு்ம் என்ற எண்ணம் கொண்டவர்கள் தொண்டு செய்யவும், நன்கொடை அளிக்கவும் முன் வருகின்றனர்.

ஆலோசனைகள்:

    இது போன்ற சேவைகள் செய்ய முன்வருவோருக்கு அவர் கூறும் ஆலோசனைகளாவன.. எந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற எடுத்துக் கொள்கிறோமோ, அத்திட்டத்தை எத்தனை இடையூறுகள் வந்தாலும் கைவிட்டுவிடக் கூடாது. அத்திட்டத்தால் விளையப்போகும் நன்மையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அணியில் இருக்கும் யாரேனும் தவறு செய்தால் அவரை ஒருமுறை மன்னித்து விட வேண்டும். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. தான் சார்ந்த நம்பிக்கைகளைத் திணிக்கக் கூடாது. ‘தான் தலைமை தாங்குகிறேன்’ என்ற கர்வம் வரக் கூடாது. வெளிப்படைத் தன்மை வேண்டும். வரவு, செலவு கணக்கை நிர்வகிக்கத் தனி நபர் வேண்டும். கேள்வி கேட்பதற்கென்றே ஒரு நபர் வேண்டும். அப்போது தான் நாம் செய்யும் தவறு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். செய்து முடிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். உடன் பணிபுரியும் அனைவரையும் நண்பர்களாகப் பார்க்க வேண்டும்.

by Lakshmi G   on 08 Oct 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி
வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.