இங்குள்ள கருடன் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்ட அஷ்டநாக கருடனாக இருப்பது இக்கோயிலின் தனி சிறப்பு.கி.பி. 850 ஆம் ஆண்டில்
கட்டப்பட்டதாகக் கருதப்படும் இத்தலம் விஜயநகரப் பேரரசுடன் தொடர்பு கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் கோபுர வாசலில் ஒரு
கல்வெட்டைக் காணலாம், அதைக் கொண்டே இத்திருக்கோயிலின் புராதனத்தை உணரலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதவு இன்று வரை
பிரதான வாயிற்கதவாய் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாதது ஒரு குறைதான். சற்று மேடான பகுதியில் பெருமாள் அமைந்துள்ளார் என்பதை நாம்
கோயிலுக்குள் சென்றாலே புரிந்துவிடும். பல படிகள் ஏறித்தான் கருவறைக்குச் செல்ல வேண்டும். கருடனின் திருமுடியும் பெருமாளின் திருவடியும் ஒரே
நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு இத்தலம் சற்று மேடான பகுதியில் அமைந்திருந்ததால், இத்தல எம்பெருமாள் மலைமண்டலப்
பெருமாள் என்றும்; கிரிவரதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள கருடன் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்ட அஷ்டநாக கருடனாக இருப்பது இக்கோயிலின் தனி சிறப்பு. கி.பி. 850 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இத்தலம் விஜயநகரப் பேரரசுடன் தொடர்பு கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் கோபுர வாசலில் ஒரு கல்வெட்டைக் காணலாம், அதைக் கொண்டே இத்திருக்கோயிலின் புராதனத்தை உணரலாம்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதவு இன்று வரை பிரதான வாயிற்கதவாய் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாதது ஒரு குறைதான். சற்று மேடான பகுதியில் பெருமாள் அமைந்துள்ளார் என்பதை நாம் கோயிலுக்குள் சென்றாலே புரிந்துவிடும். பல படிகள் ஏறித்தான் கருவறைக்குச் செல்ல வேண்டும்.
கருடனின் திருமுடியும் பெருமாளின் திருவடியும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு இத்தலம் சற்று மேடான பகுதியில் அமைந்திருந்ததால், இத்தல எம்பெருமாள் மலைமண்டலப் பெருமாள் என்றும், கிரிவரதர் என்றும் அழைக்கப்படுகிறார். |