LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- விவேகானந்தர்

அன்புதான் வாழ்க்கை

->  நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.

->  அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.

->  மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.

->  கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

->  அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

->  உன் உடலில் விழுந்த ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே! இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி எழுந்திரு, இது போன்ற ஆயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.

->  நமக்கு நாமே நன்மை செய்து மோட்சத்தை அடைவதைவிட மற்றவர்களுக்கு நன்மை செய்து,ஆயிரம் நரகங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

-> அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை.

->  “சமயம்’ என்ற பெரிய கறவை மாடு பல முறை உதைத்திருக்கலாம். ஆனால் அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். காரணம் கறவை மாடு அதிகம் பால் தருகிறது. இதனால் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.

->  துணிந்து செயல்படுங்கள். எதையும் முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்பாட்டில் இறங்குங்கள்.“முடியாது’ என்ற வார்த்தையை அகராதியை விட்டு அகற்றுங்கள்.

by Swathi   on 02 Mar 2013  0 Comments
Tags: Swami Vivekananda   Vivekananda   Quotes   விவேகானந்தர்   சுவாமி விவேகானந்தர்   சிந்தனைகள்     
 தொடர்புடையவை-Related Articles
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? - ராபின் ஷர்மா சொல்லும் ரகசியம்!! நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? - ராபின் ஷர்மா சொல்லும் ரகசியம்!!
அர்ப்பணிப்பு - சரஸ்வதி ராசேந்திரன் அர்ப்பணிப்பு - சரஸ்வதி ராசேந்திரன்
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
இயல்பாக இரு இயல்பாக இரு
எச்சரிக்கையாய்யிரு எச்சரிக்கையாய்யிரு
நடனமாடுதல் நடனமாடுதல்
தியானம் என்பது ஒரு செயலல்ல தியானம் என்பது ஒரு செயலல்ல
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.