|
||||||||
விழியன் என்கிற உமாநாத் செல்வன் - சிறுவர் இலக்கிய எழுத்தாளர் பற்றிய குறிப்பு |
||||||||
![]()
இயற்பெயர் உமாநாத். தந்தை கு.செந்தமிழ் செல்வன். தாய் குணசுந்தரி. மனைவி வித்யா. மகள் ரஞ்சன குழலி. புனைபெயர் விழியன். பிறந்தது ஆரணி. வளர்ந்தது வேலூர். மேலும் வளர்ந்து பெங்களூர். வாழ்வது சென்னை. படித்தது முதுநிலை பொறியியல் வேலூர் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில். தொழில்நுட்பத் துறையில் பணி புரிந்தாலும் சிறுவர் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், பல்வேறு பங்களிப்புகளை தொடர்ந்து செய்துவருபவர். குழந்தைகள் உலகைப் பற்றி அறிந்துகொள்ள பல்வேறு பள்ளி நிகழ்சிகள், குழந்தைகளுகான சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயணிப்பவர் . இவர் சமூக வலைத்தளங்கள் மூலமும், வாட்சப் மூலமும் தினமும் குழந்தைகள் கதைகளை தொடந்து பகிர்ந்து பல பெற்றோர்களை "கதைசொல்லி" -களாக உருவாக்கி வருகிறார் .
விழியன் எழுதிய சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தக பட்டியல். (புக்ஸ் ஃபார் சில்ரன்) 1. பென்சில்களின் அட்டகாசம் 2. டாலும் ழீயும் 3. மாகடிகாரம் 4. அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை 5. வளையல்கள் அடித்த லூட்டி 6. உச்சி முகர் (குழந்தை வளர்ப்பு தருணங்கள்) 7. அக்னிச் சுடர்கள் (மொழிபெயர்ப்பு) 8. காலப் பயணிகள் (சிறுவர் கதை) 9. ஒரே ஒரு ஊரிலே (சிறுவர் கதை) 10. திரு.குரு. ஏர்லைன்ஸ் 11. கடல்ல்ல்ல்ல் 12. ஜூப்பிட்டருக்கு சென்ற இந்திரன் (சிறுவர் கதைகள்) 13. Pencil’s day out
வானம் பதிப்பகம் 1. கிச்சா பச்சா ஆன்லைனில் பெற 1. https://thamizhbooks.com 2. கிச்சா-பச்சா 3. விழியன் – டிஸ்கவரி புக் பேலஸ் 4. விழியன் – மெரினா புக்ஸ்
வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய 84894 01887 – கதிரேசன்
பெற்ற அங்கீகாரங்கள்: அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை 2013ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – தமுஎகச மாகடிகாரம் 2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – தமுஎகச 2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – ஆனந்த விகடன் 2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – கலகம் கிச்சா – பச்சா 2017ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – சென்னை புத்தக கண்காட்சி குழந்தை இலக்கிய பங்களிப்பிற்காக 2014 ஆம் வருடத்தின் சேஷன் சன்மான் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்..
இவரது வலைப்பூ |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 18 Mar 2018 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|