அன்புடையீர்,
ஜோலார்பேட் இரயில் நிலையம் அருகில் திரு நாகராஜ், அவரது ஏலகிரி ஹோட்டலில், ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்கும் இலவசமாக உணவு வழங்குவதை
வலைதமிழில் கண்டு, இந்த பதிவை செய்கிறேன்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியனான நான் கடந்த 2015 இல் வெறும் 30 புத்தகங்களை வீட்டிற்கு வெளியே ஒரு இரும்பு அலமாரியில் வைத்து புதுவிதமான,ஆளில்லா "ஆர்.ஏப்.எல்" நூலகம்(Read & return Free Library) ஒன்றை உருவாக்கினேன். 24 நேர்மும் இயங்கும் அந்த நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் (கால அவகாசம் கிடையாது) எடுத்த இடத்தைத் தவிர வேறு இடத்தில் உள்ள "ஆர்.எப்.எல்" இல் திருப்பித் தரலாம்.நூலகத்தில் சேர்வதற்கோ, புத்தகத்திற்கோ கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.வீட்டில் வீணாகக் கிடக்கும் புத்தகங்களை வீதிக்குக் கொண்டு வந்து
பலருக்கும் பயன்பட வைப்பதே இதன் நோக்கம். பொது மக்களின் அமோக ஆதரவால், இன்று (ஏப்ரல்,2018 இல்), 10000 புத்தங்களாகவும் 68 இடங்களாகவும் விரிவடைந்துள்ளது.தனி ஒருவனால் இவ்வளவு நடந்தால்,
அனைவரும் சேர்ந்து எவ்வளவு செய்யலாம்? wwwrfllibrary .com
|