LOGO
  முதல் பக்கம்    மற்றவை    பொதுசேவை Print Friendly and PDF

உயிர்மூச்சாம் ஒழுக்கம் காப்போம் ! உலகை மீட்போம் !!

( சூழலியல் சார்ந்த உளவியல் கட்டுரை )

 

"உலகளாவிய நம் ஒழுக்கக்கேடுகளின் பினாமிகள் தான் சுனாமியும்; எய்ட்சும்; ஓசோன் மண்டல ஓட்டைகளும்; உலகம் வெப்பமயமாதலும் என்ற உண்மையை நாம் உணர்ந்துள்ளோமா ? இயற்கையோடு இயைந்து வாழ்வதில் இலக்கணம் படைத்த நம் முன்னோர்கள், ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றினார்கள். நம்மையும் போற்றச் சொன்னார்கள். நாம் ஏற்றுக்கொள்ள மறந்தோம். மனம்போன போக்கில் வாழ்ந்தோம். இம்மையின் செம்மைகள் எல்லாவற்றையும் இன்று முழுமையாக இழந்து நிற்கின்றோம்.


நம்முடைய புற,- அக, -  ஒழுக்கக்கேடுகளால் இன்று ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச்சிதைவுகளைச் சீர்தூக்கிப்பார்த்தால் தான் 'எப்படி இருந்த நம்ம இப்படி ஆயிட்டமே !’            

 என்பது புரியும். இழப்பில் தான் எதனுடைய அருமையும் முழுமையாகத் தெரியும், என்ற அடிப்படையில் நாம் இழந்திருப்பவைகளைச் சுட்டினால்தான், ஒழுக்கத்தின் விழுப்பத்தை உள்ளபடியே உணரமுடியும்.


தனிமனித ஒழுக்கச்சிதைவின் உச்சகட்டம் தான் இன்று உலகயே உலுக்கிக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோய். சமுதாயக் கூட்டுறவின் உயிர்மூச்சாம் சாதி, மத, மொழி, இன நல்லிணக்கத்தைத் துறந்தோம் !  மனித நேயத்தை மறந்தோம் !! சாதி, மத, இனக்கலவரங்கள் இன்று தலைவிரித்தாடுகின்றன. தன்முனைப்பு, தன்னலப்போக்கால் தனிமனிதனும் நாடுகளும் இயற்கையோடு இயைந்து வாழும் இனிய ஒழுக்கத்தைக் கைவிட்டோம். இயற்கையோடு முரண்பட்டோம்.    

    

அகழ்வாரைத் தாங்கும் பூமியின் பொறுமையை அணுகுண்டு கொண்டு சோதித்தோம். குறுகிய காலத்தில் குபேரர்கள் ஆவதற்கு, சுற்றுப்புறச் சூழல்களைச் சூறையாடினோம். இரசாயன நச்சுக் கலக்காத உணவுப்பொருட்களே இல்லை என்ற சாதனையைப் படைத்தோம். காட்டையெல்லாம் அழித்தோம். நிலத்தடிநீரையெல்லாம் உறிஞ்சித் தள்ளிவிட்டோம். தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கினோம். ஆற்றமுடியாமல் இயற்கையன்னை சீற்றம் கொண்டாள். இயற்கைப் பேரழிவு இன்றும் தொடர்கிறது. முழுமையாக மாசுபட்டுக் கிடக்கும் நிலம், நீர், காற்று, ஆகாயம் இனம் புரியாத எத்தனையோ வகையான உடல்நலப் பாதிப்புகளை மனிதகுலத்துக்குப் பரிசளிக்கின்றன. இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம்.


இந்த அவலநிலை மாற என்ன வழி ? ஒரே வழி தான். ஒழுக்கக்கேடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு, நல்லொழுக்கங்களை நாளும் கடைப்பிடிக்க உறுதியேற்றுச் செயல்படவேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இயற்கை அன்னையின் ஆறாக்காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றவண்டும். நச்சுப்புகை கக்கும் நாகரிக அசுரர்களின் (ஆலை) கொட்டத்தை அடக்கி, ஓசோன் மண்டலத்தின் ஓட்டைகளை அடைப்போம். சாதிமத இன நல்லிணக்கம் கடைப்பிடித்து மனிதநேயத்துக்கு மதிப்பளிப்போம். இவற்றின் அருமைபெருமைகளை, இளையதலைமுறைக்கு எடுத்துரைப்போம்


இவையெல்லாம் நடக்குமா? சாத்தியமா ? என்ற ஐயமும் வியப்பும் நமக்கு ஏற்படுவது இயல்பு தான் இருக்கும் இயற்கை வளங்களைக் காப்பதோடு அவற்றை மென்மேலும் பெருக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் புயலெனச் செயல்படவேண்டும். இதில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டாலும் இளைய தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல எந்த நல்லதும் மிஞ்சாது.


இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, இளையதலைமுறைக்கு நல்ல காற்று, ஆரோக்கிய உணவு என தூய்மையான சுற்றுச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய இன்றியமையாத கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. சுற்றுச்சூழல் சுகாதார விழிப்புணர்வை சுற்றியிருக்கும் அனைவருக்கும் ஏற்படுத்துவோம், அனைவரையும் ஒருங்கிணைத்து அகிலத்தை நம் வாரிசுகள் அச்சமின்றி பாதுகாப்பாய் வாழ்வதற்கேற்ற வளமான பூமியாய் மாற்றுவோம். அந்த இலக்கை விரைவில் அடைய அல்லும்பகலும் அரும்பணியாற்றுவோம். 


- இரா.வீ.அப்பாத்துரை (appadurai50@gmail.com)

by Swathi   on 26 Nov 2014  1 Comments
Tags: Keep Discipline   Save World   Olukkam   Nal olukkam katturai   ஒழுக்கம்   உலகம்     
 தொடர்புடையவை-Related Articles
உலகம்  உனக்காக - ச.சவகர்லால் உலகம் உனக்காக - ச.சவகர்லால்
தப்புக்கணக்கு (ஒரு நிமிட உலகம் ) - கவிப்புயல் இனியவன் தப்புக்கணக்கு (ஒரு நிமிட உலகம் ) - கவிப்புயல் இனியவன்
புதியதோர் உலகம் செய்வோம் புதியதோர் உலகம் செய்வோம்
உயிர்மூச்சாம் ஒழுக்கம் காப்போம் ! உலகை மீட்போம் !! உயிர்மூச்சாம் ஒழுக்கம் காப்போம் ! உலகை மீட்போம் !!
புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !! புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !!
உலகை வாழ்த்துவோம் உலகை வாழ்த்துவோம்
இரண்டாம் உலகம் - திரை விமர்சனம் !! இரண்டாம் உலகம் - திரை விமர்சனம் !!
இரண்டாம் உலகம் படத்துக்காக ரத்தம் சிந்தி நடித்திருக்கும் ஆர்யா !! இரண்டாம் உலகம் படத்துக்காக ரத்தம் சிந்தி நடித்திருக்கும் ஆர்யா !!
கருத்துகள்
03-Nov-2017 05:53:45 குமார் v said : Report Abuse
இது உண்மைதான் . காப்பாற்ற வழி உண்டு இவை வொருவருடைய நாடுடைய பிரச்சனை இல்லை உகலகமக்களின் அனைவருடைய பங்களிப்பும் வேண்டும் இதற்க்கு மனிதாபிமானம் ஓங்கவேண்டும் . இயற்கைக்கு மாறாக சாதனைபடைப்போம் என்கிற அறிவியலுக்கு அணைபோடவேண்டும் . மக்கள்தொகையை கட்டுப்படுத்த அனைவருக்கும் ஒரேசட்டம் கொண்டுவரவேண்டும் .மனிதகுலத்தை காப்பாற்ற இவை இன்றிமையாது . இதற்காக நமது நாடு உதாரணமாக இருக்கும் என்னுடைய முதல் துளி KRC Foundation
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.