LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !!

வரும் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமல்ல, பணம் பெறுவதும் குற்றம் என்பதால், பணம் பெறுபவர் மீதும், வழக்கு பதிவு செய்து, ஓராண்டு வரை சிறை தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

 

ஏற்காடு இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைமை தேர்தல் அதிகாரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

ஏற்காடு தொகுதியில் இடை தேர்தல் வரும் டிசம்பர் 4 தேதி நடைபெற இருக்கிறது.  இதற்கான மனுத்தாக்கல், நவம்பர் 9ம் தேதி துவங்க இருக்கிறது. ஏற்காடு தொகுதியில், 2.34 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக, 120 இடங்களில், 290 ஓட்டுச் சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு, சுமார் 2,000 பேர் தேவைப்படுவர். அரசு பணி துவங்குவது, சுவர் விளம்பரம் செய்வது, நலத்திட்ட உதவி வழங்குவது உள்ளிட்டவை, ஏற்காடு தொகுதிக்குள் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து புகார் செய்வதற்காக, கன்ட்ரோல் ரூமுடன் கூடிய, 1800 425 7050 என்ற, "டோல்பிரீ' போன் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

 

தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க, இரண்டு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பறக்கும் படைகள், கூடுதலாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 11 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்படுகின்றன. சேலம், அரசு மருத்துவமனைக்கு, சுகாதாரத்துறை அமைச்சர், அரசு வாகனத்தில் ஆய்வுக்கு வந்தது குறித்து, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

அதிக பண பரிமாற்றம் குறித்து, வங்கிகளுக்கும் தகவல் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க, பணம் கொடுப்போர் மட்டுமின்றி, பணம் பெறுபவர் மீதும், வழக்கு பதிவு செய்து, ஓராண்டு வரை சிறை தண்டனை பெற்றுத்தரப்படும். தொகுதிக்கு வெளியில், பொருட்களை வினியோகம் செய்தாலும், அவை பறிமுதல் செய்யப்படும். தேர்தல் விதிமுறை அமல்படுத்துவது மற்றும் ஒரு சில செயல்பாடுகள் குறித்து, அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. புகார்களுக்கு இடமளிக்காத வகையில், நடுநிலைமையாக தேர்தல் கமிஷன் செயல்படும். இவ்வாறு, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.  

Money for votes will be punished with One year imprisonment

The Chief Electoral Officer of the TN Election Commission, Praveen Kumar said persons who give or receive money for votes during the Yercaud by-elections, will be punished with 1 year imprisonment.

by Swathi   on 18 Oct 2013  0 Comments
Tags: ஏற்காடு தொகுதி   ஓட்டு   பணம்   சிறை தண்டனை   ஒரு வருட சிறை   தேர்தல் அதிகாரி   தமிழக தேர்தல் அதிகாரி  
 தொடர்புடையவை-Related Articles
49ஓ-வுக்கு என் முதல் வாக்கு - சேயோன் யாழ்வேந்தன் 49ஓ-வுக்கு என் முதல் வாக்கு - சேயோன் யாழ்வேந்தன்
வாக்கு Vs Vote வாக்கு Vs Vote
வாக்களிப்பது எப்படி ? ஒரு சிறப்பு கண்ணோட்டம் !! வாக்களிப்பது எப்படி ? ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
ஓட்டுக்கு பணம் : தகவல் கொடுத்தால் பரிசு !! வருமான வரித்துறை அறிவிப்பு !! ஓட்டுக்கு பணம் : தகவல் கொடுத்தால் பரிசு !! வருமான வரித்துறை அறிவிப்பு !!
பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்  நாகராஜ். பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.
வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !! வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!
சஞ்சய்தத்தின் தண்டனை குறைப்பது குறித்து மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுடன் ஆலோசனை !!! சஞ்சய்தத்தின் தண்டனை குறைப்பது குறித்து மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுடன் ஆலோசனை !!!
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !! ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.