LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

'நீட்' நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது!

மருத்துவப் படிப்பில் பிளஸ் 2 முடித்த  மாணவர்கள் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான, 'ஆன்லைன்' பதிவு தொடங்கியது.

பிளஸ்- 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.,  பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதுவரை, இந்த நுழைவுத் தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது. இந்த ஆண்டு முதல், தேசியத் தேர்வு முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது.

நீட் தேர்வுக்கான அட்டவணை, என்.டி.ஏ., சார்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.மே, 5ல், நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன் 5ல் வெளியாகும்.

இந்த முறை, தமிழ் உட்பட, 10க்கும் மேற்பட்ட, மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கியது.

என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம். மாணவர்களின் வசதிக்காக, நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நீட் தேர்வு எழுதுவதற்கு, 'ஆதார்' கட்டாயம் இல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வில், தமிழ் போன்ற மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றின் மொழி மாற்றத்தின்  போது பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே, பதில் எழுத வேண்டும். விடை திருத்துவதும் அதன் அடிப்படையிலேயே  செய்யப்படும் என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்து உள்ளது

by Mani Bharathi   on 01 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது
5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி  வழங்கும் மத்திய அரசு 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி வழங்கும் மத்திய அரசு
தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
புதுச்சேரியில்  மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு
சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை -  மத்தியக் கல்வி அமைச்சகம் 6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை - மத்தியக் கல்வி அமைச்சகம்
ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம் ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம்
12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.