LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் இலக்கியம் Print Friendly and PDF
- சிறுவர் நூல்கள்-Kids Books

குழந்தைகளைப் புகழுங்கள்

தம்பி சி. முத்துகந்தனின் "குழந்தைகளைப் புகழுங்கள்" சிறுவர் கதைகள் நூலைப் படிக்கும்போது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பு இன்னும் அடங்கவே இல்லை. கூட்டுக்குடும்ப வாழ்வு சிதைந்து தனிக்குடும்ப வாழ்வாக மாறிப்போன சமூக வாழ்வியலில் நாம் தொலைத்த எத்தனையோவற்றில் தாத்தா, பாட்டி கதைகளும் அடங்கும். தொலைக்காட்சிப் பெட்டிகளற்ற, கைபேசிகளற்ற, கார்டூன்கள் இல்லாத காலத்தில் கதைகள்தான் இவற்றின் இடத்தை இட்டுநிரப்பிக் கொண்டிருந்தன. தாத்தாவும், பாட்டியும் ஒரு ஊர்ல ஒரு ராஜா என்பதிலேயே குழந்தைகளின் மொத்த அகவுலகமும் வெளிச்சம் நிரம்பியதாக மாறும். நிலாக்காயும் நேரங்களும், அமாவாசை இரவுகளும் சோற்றொடு கூடிய கதைகளால் குழந்தைகளிடம் நிரம்பி வழியும்போது பிரபஞ்சம் மின்மினிகளால் பளிச்சிடும்.


ராஜாவும், ராணியும், நிலாவில் வடைசுட்ட பாட்டியும், காடும் காட்டு விலங்குகளும் குழந்தைகளின் மனங்களெங்கும் களமாடி நிற்பர். ஆனால் இன்றோ குழந்தைகளின் அகவுலகு கைபேசி விளையாட்டுகளால் மாய உலகத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது. வெட்டு, சுடு, அடி என்னும் வன்முறைகள் அவர்களின் விளையாட்டுகளின் வழி விரல்களில் வழிந்து மனங்களைத் தூர்ந்துபோகச் செய்கின்றன.


தம்பி முத்துகந்தன் காலத்தின் தேவையை உணர்ந்திருக்கிறார். இருபத்தோராம் நூற்றாண்டின் எல்லையற்ற அறிவியலை எதிர்கொள்ள இவரின் கதைகளின் சூட்சுமங்கள் துணைசெய்யும். இயற்கையையும், சமூகத்தையும் சுக்குநூறாக்கும் மாயவலைகளில் சிக்கிக்கிடக்கும் மனித சமூகத்தின் முகங்களின் முகமூடிகளை அவிழ்ந்து குழந்தைகளுக்கு நிஜ உலகு எது என்பதைத் தெளிவிக்கிறார். உலகமயமாதலின் விளைவாக ஏற்பட்ட கிராமத்தின் அழிவையும், காடுகளில் வாழும் விலங்குகளின் இடப்பெயர்வையும் குழந்தைகளின் கேள்விகள் வழியாக எதிர்கொண்டு பெரியவர்களை வாயடைக்கச் செய்வதோடு திக்குமுக்காடவும் செய்கிறார். விவசாயம், நீராதாரம், தாத்தா, பாட்டி, பறவை, விலங்கு என சமூகத்தின் விளிம்புநிலையில் தள்ளப்பட்டவர்களை மீண்டும் தமது கதைகளின் வழி மைய நீரோட்டத்திற்கு கொண்டுவந்து பேசச் செய்துள்ளார்.


தீர்வு, சோதனை, எனது வீடு, மனமிருந்தால் மார்க்கம் உண்டு, எளிது, எது நல்லது?, பதில் சொல்லுங்கள் என எளிய தலைப்புகளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் ஏதோ ஒரு கருத்தை அதன் இயல்பிலிருந்து விலகாமல் எடுத்துரைத்துச் செல்கிறது முத்துக்கந்தனின் கதைகள். அறவுரைகளை அப்படியே சொன்னால் எழுந்து ஓடிவிடும் குழந்தைகளை முத்துக்கந்தன் பூக்காடுகளுக்குள் கைபிடித்து அழைத்துச் சென்று அப்பாவாக, ஆசிரியராக, தாத்தாவாக, பாட்டியாக, தோழனாக என எல்லாமுமாக மாறி அரவணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டுக் காட்சிகளாக மாற்றி தேர்ந்த கதைசொல்லியாக மாறிநிற்கிறார்.


25 கதைகள், 64 பக்கங்கள், சிறுசிறு ஓவியங்கள் என நூலினைக் குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு வடிவமைத்துத் தந்திருக்கிறார். படிக்கத் தெரிந்த எந்தக் குழந்தையும் ஏதோ ஒரு கதையின் வழியாக உள்நுழையலாம். குழந்தையாக உணரும் எந்த வயதினரும் எல்லாக் கதைகளின் வழியாகவும் குழந்தைகளாக மாறலாம். ஆலீஸின் அற்புத உலகம், நார்னியாவின் உலகம் என மாயவாதக் கதைகளிலிருந்து மாறி முத்துக்கந்தனின் இந்தக் கதைகள் எதார்த்தத்தின் வழி இந்தப் பேரண்டத்தின் குரூரங்களையும் கோரமுகங்களையும் எதிர்கொள்ள கற்றுத்தருகிறது. 


குழந்தைகளைப் புகழுங்கள் என்ற முத்துக்கந்தனின் வார்த்தைகளில் இருந்தே நீங்கள் குழந்தைகளைப் புகழக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் இந்த நூலினைக் குழந்தைகளுக்குப் பரிசாக அளியுங்கள். அன்பினால் குழந்தைகள் உங்களைப் புகழ்வார்கள்.

பா. ஜெய்கணேஷ்

by Swathi   on 25 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன்
கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன் கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன்
கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி
கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன் கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன்
கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன் கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன்
கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர் கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர்
கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா
பஞ்சுமிட்டாய் பரிந்துரைக்கும் சிறார் இலக்கியம் – புத்தகப் பரிந்துரை : 2018 – 2019 பஞ்சுமிட்டாய் பரிந்துரைக்கும் சிறார் இலக்கியம் – புத்தகப் பரிந்துரை : 2018 – 2019
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.