LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஆன்மீகத் தமிழர்கள் Print Friendly and PDF

திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று நடைபெற்ற தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழாவில், ஏராளமான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப்பாடி இசையஞ்சலி செலுத்தினர்.

 

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரிக் கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பகுலபஞ்சமி தினத்தில் தியாகராஜ சுவாமிக்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு 177-வது ஆராதனை விழா கடந்த 26-ம் தேதி தொடங்கியது.

 

தொடர்ந்து தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு இசைக் கலைஞர்கள் பாடியும், இசைக் கருவிகளை வாசித்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசையஞ்சலி செலுத்தி வந்தனர். விழாவின் நிறைவு நாளான 30/01/2024 காலை தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்ச விருத்தி பஜனை புறப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழி யாக சன்னிதியைச் சென்றடைந்தது.

 

ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு 

 

காலை 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, நித்யஸ்ரீ மகாதேவன், ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனி வேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ண குமார் உள்ளிட்ட ஏராளமான இசைக் கலைஞர்கள் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை வாசித்தும் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

 

அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப் பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கூடுதல் ஆட்சியர் ஸ்ரீ காந்த் மற்றும் தியாகப் பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பஞ்சரத்ன கீர்த்தனையைத் தொடர்ந்து, பல்வேறு இசைக் கலைஞர்கள் ஹரிகதை, பாட்டு, புல்லாங்குழல், நாகசுரம் நிகழ்ச்சி களை நடத்தினர். இரவு 10.40 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவுபெற்றது.

by Kumar   on 31 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை
தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி
பத்திரகிரியார் பத்திரகிரியார்
முரளீதர சுவாமிகள் முரளீதர சுவாமிகள்
முகவை கண்ண முருகனார் முகவை கண்ண முருகனார்
மத்துவர் மத்துவர்
வேங்கடரமண பாகவதர் வேங்கடரமண பாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.