|
|||||
மத்துவர் |
|||||
பிறப்பு: 1238ம் ஆண்டு பிறந்தார்.25வது வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானார். துறவியானதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப்
பிரஞ்ஞர். முக்கியப் பிராணன்:மிகவும் படித்த அறிவாளி, துறவி என்பது மட்டும் அல்ல, அவர் தேகபலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சுமச் செய்கைகளிலும்
கைதேர்ந்தவர். அநுமன், பீமன் இவர்களுக்குப் பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவராகக் கருதப்பட்டார். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன்
என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இப்பெயரும் அவருடைய மிகையான
அறிவைக் கருத்தில் கொண்டு அவருடைய குருவால் அவருக்கு இடப்பட்ட பெயரே.எழுதிய நூல்கள்:மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில்
மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக்
கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே
மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது. அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை
அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார்.
‘துவைதம்’:‘துவைதம்’ என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால்
மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச்
சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை,பிரம்மமும் ஆன்மாக்களும்,ஆன்மாவும் உலகும், உலகிலுள்ள பொருளும்
பொருளும்,பிரம்மமும் உலகும் மற்றும் ஆன்மாவும் ஆன்மாவும்.விக்கிரகம்:ஒரு சமயம் உடுப்பிக்கருகாமையில் கடலில் ஒரு கப்பல் சென்று
கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ
செய்தார். கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி
வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர்
அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையை விட்டு
சாலிக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர். தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு
சென்றார். அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.இறப்பு;அவர் புவியில் அவதரித்த காரியங்கள் செவ்வனே முடிந்ததும்
வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. மலர்க்குவியலுக்கடியில் மறைந்த ஆச்சாரியரை மலர்களை அகற்றிப் பார்த்தபோது அவருடைய உடலும்
காணவில்லை.1317ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
பிறப்பு:
1238ம் ஆண்டு பிறந்தார்.25வது வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானார். துறவியானதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப் பிரஞ்ஞர்.
முக்கியப் பிராணன்:
மிகவும் படித்த அறிவாளி, துறவி என்பது மட்டும் அல்ல, அவர் தேகபலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சுமச் செய்கைகளிலும் கைதேர்ந்தவர். அநுமன், பீமன் இவர்களுக்குப் பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவராகக் கருதப்பட்டார். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இப்பெயரும் அவருடைய மிகையான அறிவைக் கருத்தில் கொண்டு அவருடைய குருவால் அவருக்கு இடப்பட்ட பெயரே.
எழுதிய நூல்கள்:
மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது. அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார்.
‘துவைதம்’:
‘துவைதம்’ என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை,பிரம்மமும் ஆன்மாக்களும்,ஆன்மாவும் உலகும், உலகிலுள்ள பொருளும் பொருளும், பிரம்மமும் உலகும் மற்றும் ஆன்மாவும் ஆன்மாவும்.
விக்கிரகம்:
ஒரு சமயம் உடுப்பிக்கருகாமையில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார். கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையை விட்டு சாலிக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர். தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார். அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.
இறப்பு:
அவர் புவியில் அவதரித்த காரியங்கள் செவ்வனே முடிந்ததும் வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. மலர்க் குவியலுக்கடியில் மறைந்த ஆச்சாரியரை மலர்களை அகற்றிப் பார்த்தபோது அவருடைய உடலும் காணவில்லை.1317ம் ஆண்டு இயற்கை எய்தினார். |
|||||
by Swathi on 23 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|