|
|||||
முகவை கண்ண முருகனார் |
|||||
பிறப்பு:இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் எளிய அந்தணர் குடும்பத்தில், ஆகஸ்டு 1890 -ஆம் ஆண்டு கிருஷ்ணய்யர், சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாகப்
பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில்
படித்தார்.கல்லூரி நாட்களிலேயே அவருக்கிருந்த தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது பெயரை முருகனார் என்று தூய தமிழாக்கிக் கொண்டார். பிறந்த இடம்
முகவை என்பதால், "முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார்.துறவறம்:அந்தக் காலகட்டத்திலேதான் ரமண மகரிஷியின் எளிய
அத்வைத உபதேசம் தாங்கிய "நான் யார்?' என்ற சிறு நூலை 1922-இல் படிக்க நேர்ந்தது. அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியைத்
தரிசித்தார்.1926-இல் தமது அருமை அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல்
துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமணரின் காலடி பணிந்து, புற வாழ்வை அறவே துறந்தார். கடைசிவரை ஒரு துறவியாய் வாழ்ந்தார்.
குருவாசகக் கோவை:ரமணர் பக்தர்களுக்கு அருளிய உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக்
கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச் செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி ரமணரிடமும் காண்பித்து, அவரது
ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்று வந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி, பாடலைப் அமைத்தார்.இவ்வாறு கோத்தமைத்த
நூலே குருவாசகக் கோவை என்பது. மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை. இக்
கோவை, குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது."உள்ளது நாற்பது':1928-இல் முருகனாரின் முயற்சியால், ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள்
ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத் தொகுக்கப்பட்டன. இவையே "உள்ளது நாற்பது' என்ற தலைப்புடன் ஒரு நூலை எழுதினார் கண்ண
முருகனார்.பதினான்காயிரம் பாக்கள் இயற்றிய முருகனாரின் பாடல்கள், "ரமண ஞான போதம்' என்ற தலைப்பில் ஒன்பது தொகுதிகளாக
வெளியிடப்பட்டுள்ளது.மறைவு:முருகனார், 1973-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28 ஆம் தேதி காலமானார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை
மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
பிறப்பு:
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் எளிய அந்தணர் குடும்பத்தில், ஆகஸ்டு 1890 ஆம் ஆண்டு கிருஷ்ணய்யர், சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார்.கல்லூரி நாட்களிலேயே அவருக்கிருந்த தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது பெயரை முருகனார் என்று தூய தமிழாக்கிக் கொண்டார். பிறந்த இடம் முகவை என்பதால், "முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார்.
துறவறம்:
அந்தக் காலகட்டத்திலேதான் ரமண மகரிஷியின் எளிய அத்வைத உபதேசம் தாங்கிய "நான் யார்?' என்ற சிறு நூலை 1922-இல் படிக்க நேர்ந்தது. அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியைத் தரிசித்தார்.1926-இல் தமது அருமை அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல் துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமணரின் காலடி பணிந்து, புற வாழ்வை அறவே துறந்தார். கடைசிவரை ஒரு துறவியாய் வாழ்ந்தார்.
குருவாசகக் கோவை:
ரமணர் பக்தர்களுக்கு அருளிய உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக் கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச் செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி ரமணரிடமும் காண்பித்து, அவரது ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்று வந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி, பாடலைப் அமைத்தார்.இவ்வாறு கோத்தமைத்த நூலே குருவாசகக் கோவை என்பது. மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை. இக் கோவை, குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது.
"உள்ளது நாற்பது':
1928-இல் முருகனாரின் முயற்சியால், ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத் தொகுக்கப்பட்டன. இவையே "உள்ளது நாற்பது' என்ற தலைப்புடன் ஒரு நூலை எழுதினார் கண்ண முருகனார். பதினான்காயிரம் பாக்கள் இயற்றிய முருகனாரின் பாடல்கள், "ரமண ஞான போதம்' என்ற தலைப்பில் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
மறைவு:
முருகனார், 1973-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28 ஆம் தேதி காலமானார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. |
|||||
by Swathi on 23 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|