|
|||||
தங்கம்மா அப்பாக்குட்டி |
|||||
பிறப்பு:அப்பாக்குட்டி, தையற்பிள்ளை தம்பதிகளுக்குப் பிறந்த தங்கம்மா அப்பாக்குட்டி 7 ஜனவரி, 1925ஆம் ஆண்டு பிறந்தார்.படிப்பு: 1929 ஆம் ஆண்டு
மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர், பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி
வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர்
பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார்.சைவப்புலவர்:1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ்
ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.
தமிழையும் சைவ சமயத்தையும் முறையாகக் கற்று 1952 ஆம் ஆண்டு பாலபண்டிதராகத் தேர்வடைந்த இவர், 1958 இல் தமிழகத்தில் சைவப்புலவர்
பட்டத்தையும் பெற்றார். இவரது 31 ஆண்டுகள் ஆசிரியைப் பணியில் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியையாகப்
பணியாற்றி 1976 இல் ஓய்வு பெற்றார்."பண்டிதை":"பண்டிதை" என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி
உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் துவக்கினார்.
தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார்.பிற்காலத்தில் இவர் "சிவத்தமிழ்ச்
செல்வி", மற்றும் "துர்க்கா புரந்தரி" என அழைக்கப்பட்டார். தங்கம்மா அப்பாக்குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு
கிடைத்ததுடன், இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன.மறைவு:திடீரென நோய் வாய்ப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 15, 2008 நண்பகல் 12.15 மணியளவில் காலமானார்.
பிறப்பு:
அப்பாக்குட்டி, தையற்பிள்ளை தம்பதிகளுக்குப் பிறந்த தங்கம்மா அப்பாக்குட்டி 7 ஜனவரி, 1925ஆம் ஆண்டு பிறந்தார்.
படிப்பு:
1929 ஆம் ஆண்டு மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர், பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார்.
சைவப்புலவர்:
1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார். தமிழையும் சைவ சமயத்தையும் முறையாகக் கற்று 1952 ஆம் ஆண்டு பாலபண்டிதராகத் தேர்வடைந்த இவர், 1958 இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். இவரது 31 ஆண்டுகள் ஆசிரியைப் பணியில் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி 1976 இல் ஓய்வு பெற்றார்.
"பண்டிதை":
"பண்டிதை" என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் துவக்கினார். தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார்.பிற்காலத்தில் இவர் "சிவத்தமிழ்ச் செல்வி", மற்றும் "துர்க்கா புரந்தரி" என அழைக்கப்பட்டார். தங்கம்மா அப்பாக்குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன், இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன.
மறைவு:
திடீரென நோய் வாய்ப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 15, 2008 நண்பகல் 12.15 மணியளவில் காலமானார். |
|||||
by Swathi on 23 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|