ஜனவரி
2 : சீனாவில் இந்திய தூதர் தாக்கப்பட்டார்.
21 : நார்வேயில் அந்நாடு சட்டப்படி குழந்தையை வளர்க்காததால் இந்திய தம்பதி ரூப் -
சகாரிகாவிடம் இருந்து நார்வே அரசு குழந்தயை பிரித்து இந்தியா அனுப்பியது.
பிப்ரவரி
7 : மாலத்தீவில் ஏற்பட்ட போலிஸ் புரட்சியால் ஜனாதிபதி முகமது நஷித் பதவியை
ராஜினாமா செய்தார்.
14 : சிறந்த சேவைக்கான அமெரிக்காவின் மனிதநேய விருதை அமர்த்தியா பெற்றார்.
27 : 84 - வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்றது.
மார்ச் 5 : ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி
8 : ஐ.நா சபை மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க
தீர்மானம்.
சூரிய காந்த புயல் பூமியை தாக்கியது.பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
22 : இலங்கைகெதிரான தீர்மானம் ஐ.நா சபை மனித உரிமை குழு கூட்டத்தில்
ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது.
ஏப்ரல்
17 : ஐ.நா சபையின் அகதிகள் மேம்பாடிட்கான தூதராக பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி
நியமனம்.
25 : பாகிஸ்தான் அதிக தூரம் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணையை
வெற்றிகரமாக சோதனை செய்தது.
மே
2 :மியான்மர் நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆங் சான் சூசி பதவியேற்பு.
7 : ரசியாவின் அதிபராக புதின் பதவியேற்றார்.
22 : இலங்கை முன்னால் ராணுவ தளபதி பொன்சேகா விடுதலை.
ஜூன்
2 : இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடிக்கொண்ட 60 ஆண்டு நிறைவு விழா
லண்டனில் நடைபெற்றது.
16 : சீனா உலகில் அதிக எடையுள்ள,மிக நீளமான ஷேன்சூ-9 என்ற விண்கலத்தை
வின்னிற்கு ஏவியது.
19 : கோர்ட் அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் அதிபர் கிலானியின் பதவியை பறித்தது
அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்.
21 : பாகிஸ்தான் பிரதமர் தேர்தலில் பர்வேஸ் அஷரப் வெற்றி பெற்றார்.
24 : எகிப்து நாட்டின் புதிய பிரதமராக முகமது முர்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
28 : அமெரிக்க நீதிமன்றம் போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனம்
இந்தியாவிற்கு இழப்பிடு வழங்க தேவையில்லை என தீர்ப்பளித்த்தது.
ஜூலை
4 : விஞ்ஞானிகள் உலகம் உருவானதற்கு காரணமான கடவுள் துகள்களை
கண்டுபிடித்தனர்.
15 : ரசியாவின் பைக்கானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சுனித வில்லியஸ் உட்பட
நான்கு விஞ்ஞானிகளை உள்ளடக்கிய விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
16 : தூபாய் கடல் பகுதியில் சென்ற தமிழக மீனவர்களின் படகு மீது அமெரிக்க படை
தாக்குதல்.
ஆகஸ்ட்
5 : அமெரிக்க விண்கலம் கியூர்யா சிட்டி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக
தரையிறக்கப்பட்டது.
18 : சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் சீன அழகி வெண் ஜியா உலக
அழகி பட்டம் வென்றார்.
25 : காப்புரிமை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பிடு தர சாம்சங் நிறுவனத்திற்கு
அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
26 : நிலவில் முதலில் காலடி வைத்த நீள் ஆம்ஸ்ட்ராங் மரணமடைந்தார்.
செப்டம்பர்
6 : உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக இந்தியாவை சேர்ந்த கவுசிக் பாசு
நியமனம்.
12 : முகமது நபியை விமர்சித்து வெளியான அமெரிக்க திரைபடத்திற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில் லிபியாவில் தீவிரவாதிகள் அமெரிக்க தூதரகத்தின் மீது
தாக்குதல் நடத்தினர்.
17 : சுனிதா வில்லியம்சுக்கு சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பு
வழங்கப்பட்டது.
24 : ஐ.நா எய்ட்ஸ் அமைப்பின் நல்லென்ன தூதராக ஐஸ்வர்யா ராய் நியமனம்.
அக்டோபர்
8 : ஜப்பானை சேர்ந்த யமனகா,இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கார்டன் ஆகியோருக்கு
மருத்துவ துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
9 : பாகிஸ்தானின் பெண் கல்விக்காக போராடிய மலாலா என்ற சிறுமி தீவிரவாதிகளால்
சுடப்பட்டார்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்சின் சொர்ஜ் ஹரோசி, அமெரிக்காவின் டேவிட்
ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
10 : வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ராபர்ட் லேப்கொவிட்ச்,பிரையன்
கோபில்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
11 : இலக்கியத்திற்கான நோபல் பரிசு சீனாவின் மோயானுக்கு வழங்கப்பட்டது.
12 : அமைதிகாண நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டது.
15 : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ரோத்,இலாயிட்
ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நவம்பர்
6 : அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குபதிவு.
7 : அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஒபாமா அபார வெற்றி.
15 : அயர்லாந்தில் கர்பபையில் இறந்த கருவை அகற்றாததால் இந்திய பெண் சவிதா
மரணம்.
30 : நார்வேயில் பிள்ளையை கண்டித்த இந்தியாவை சேர்ந்த சந்திரசேகர் - அனுபாமா
தம்பதியினர் கைது
டிசம்பர்
10 : லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த செவிலியர் ஜெசிந்தா மர்மமான
முறையில் மரணம்.
14 : அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 20
அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
19 : கருகலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அயர்லாந்து அரசு அறிவிப்பு.
|