LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2013-ல் இந்திய நிகழ்வுகள் ஒரு பார்வை !!

ஜனவரி 1 : நாடளமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்பட தொகையில் ரூ 3,400 கோடி வரை செலவு செய்யப்படாமல் உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.

 

ஜனவரி 2 : குஜராத்தில் லோக் ஆயுக்தாவை ஆளுநர் நியமித்தது செல்லும் என உச்ச நீதி மன்றம் அறிவிப்பு.

 

ஜனவரி 3 : டெல்லி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர்.

 

கேரளாவில் 15 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ் குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

 

ஜனவரி 5 : பாராளமன்ற முன்னால் சபாநாயகர் சங்கமா தேசியவாத மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

 

ஜனவரி 7 : மத்திய அரசு அறிவித்த சேவை வரியை ரத்து செய்யக்கோரி, சென்னையில் நடிகர் - நடிகைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

 

ஜனவரி 8 : ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வாபஸ் பெற்றதால் அர்ஜுன் முண்டா அரசு கவிழ்ந்தது.

 

காஸ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய வீரர்கள் பலியானார்கள். அவர்களில் ஒருவரது தலையை பாகிஸ்தான் வீரர்கள் 

துண்டித்து எடுத்து சென்றனர்.

 

ஜனவரி 16 : ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அரியான முன்னாள் முதல் மந்திரி சவூதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு 

 

அளித்ததையொட்டி அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 21 ம் தேதி இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

ஜனவரி 17 : வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6 -ல் இருந்து 9 ஆக உயர்த்தவும், டீசல் விலையை மாதந்தோறும் 50 காசு உயர்த்தவும் மத்திய மந்திரி சபை முடிவு.

 

ஜனவரி 18 : பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களில் சிலைகள் வைக்க தடை விதித்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது

 

ஜனவரி 19  ஜெய்ப்பூரில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல்காந்தி தேர்வு.

 

ஜனவரி 21 : தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6 சதவீதமாக அதிகரித்தது.

 

ஜனவரி 22 : பாரதீய ஜனதா தலைவர் தேர்தலில் இருந்து நிதின் கட்காரி திடீரென விலகினார்.

 

மும்பையில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் பிரேமா சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை..

 

ஜனவரி 25 : இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பிரபல பட தயாரிப்பாளர் ராமாநாயுடு, நடிகைகள் ஸ்ரீ தேவி, ஷர்மிளா தாகூர் உள்பட 108 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, 

 

பின்னணி பாடகி எஸ்.ஜானகி, மறைந்த நடிகர் ராஜேஷ்கண்ணா ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

 

ஜனவரி 26 : தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதால் பத்மபூஷன் விருதை ஏற்க மாட்டேன் என்று பின்னணி பாடகி எஸ். ஜானகி மறுப்பு.

 

ஜனவரி 29 : காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 

ஜனவரி 31 : ஆள் மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய புதுச்சேரி மாநில முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்துக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

பிப்ரவரி 1 : கற்பழித்து கொலை செய்யும் குற்ற வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

 

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை மாதம்தோறும் லிட்டருக்கு 50 காசு உயர்த்த அனுமதி.

 

பிப்ரவரி 4 : காவிரி பிரச்சனையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை 20 தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் இறுதி கெடு.

 

காமன் வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான ரூ 90 கோடி ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடி மீது டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு.

 

பிப்ரவரி  5 : 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு கடைசி நேரத்தில் திருத்தப்பட்டதாக, அட்டார்னி ஜெனரல் வாகன்வதி பாராளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகி சாட்சியம்.

 

பிப்ரவரி 7 : காவிரியில் உடனடியாக 2.44 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் இந்திய வருகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம். இலங்கை வங்கி மீது தாக்குதல்.

 

பிப்ரவரி 9 : பாராளமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் டெல்லி திகார் சிறையில் அதிகாலையில் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் ஜெயில் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

 

பிப்ரவரி 10 : அலகாபாத்தில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது பாலம் இடிந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கி 38 பேர் பலி.

 

பிப்ரவரி 12 : சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் டெல்லி மேல்சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியனுக்கு ராஜினாமா நெருக்கடி முற்றியது.இதற்கிடையில் தனது நிலையை விளக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதினார்.

 

பிப்ரவரி 15 : ரூ.362 கோடி லஞ்சம் கைமாரியதன் காரணமாக இத்தாலி நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ 

வழக்குப்பதிவு செய்தது.

 

பிப்ரவரி 20 :காவிரி நீரில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்யும் வகையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் நகலை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.  

 

பிப்ரவரி  21 : ஐதராபாத்தில் தில்சுக்பூர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 19 பேர் பலி. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்.

 

பிப்ரவரி 25 : ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

 

பிப்ரவரி 26 : ரயில்வே பட்ஜெட் தாக்கல். இதில் பயணிகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை. சரக்கு மற்றும் முன்பதிவு கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

 

பிப்ரவரி 28 : மத்திய பட்ஜெட் தாக்கல். இதில் ரூ. 18 ஆயிரம் கோடிக்கும் புதிய வரிகள் விதிப்பு. பெண்களுக்கு தனி வங்கி மற்றும் பாதுகாப்புக்கு ரூ.1000 கோடி நிதியம் அமைப்பு.

 

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஆளும் கட்சிகளே மீண்டும் வெற்றி பெற்றன. திரிபுராவில் ஐந்தாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை பிடித்தது. மேகாலயாவில் காங்கிரசும், நாகலாந்தில் நாகா மக்கள் முன்னணியும் மீண்டும் வெற்றி பெற்றன.

 

மார்ச் 8 : டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட 23 வயது பிசியோதெரப்பி மாணவிக்கு அறிவிக்கப்பட்ட ராணி லட்சுமி பாய் பெயரிலான ஸ்திரி சக்தி விருதை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் அந்த மாணவியின் தாயாரிடம் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

 

மார்ச் 10 : உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் 55 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் 60 லட்சம் பெண் புனித நீராடினார்கள்.

 

மார்ச் 11 : டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவியை கற்பழித்துக் கொன்ற 6 பேரில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறைக்குள் தூக்கு பொட்டு தற்கொலை செய்து கொண்டான்.

 

மார்ச் 13 : காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் தமிழக வீரர் உட்பட ராணுவத்தினர் 5 பேர் பலி.

 

மார்ச் 14 : இந்தியாவை விட்டு வெளியேற இத்தாலி தூதருக்கு உச்ச நீதி மன்ற தடை.

 

மார்ச் 18 : எதிர்கட்சிகளின் கடும் எதிர்பால் பாலுறவு சம்மத வயது 16 ஆக குறைப்பு இல்லை என்றும், 18 வயதே நீடிக்கும் என்றும் மத்திய அரசு திடீர் அறிவிப்பு

 

மார்ச் 19 : மராட்டிய மாநிலத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 37 பேர் பலி.

 

மார்ச் 21 : மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

 

மார்ச் 22 : பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவிப்பு.

 

மார்ச் 29 : தமிழ் ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்தது.

 

ஏப்ரல் 3 : 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பாராளமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜர் ஆகா தேவையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக மறுத்தார்.

 

ஏப்ரல் 4 : மராட்டிய மாநிலத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 72 பேர் பலி.

 

ஏப்ரல் 7 :  மேற்கு வங்காளத்தில் 24 துணை ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்ட் தீவிரவாதி சியாம் சரண்டூடு கோவையில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றிய போது சிக்கினான்.

 

ஏப்ரல் 11 : 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம் பெரும் இந்தி நடிகர் பிரானுக்கு தாதாசாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டும் என மத்திய அரசு அறிவிப்பு.

 

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில் குவியல், குவியலாக தங்க, வைர நகைகள் மற்றும் மூட்டை, மூட்டையாக தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

ஏப்ரல் 17 : பெங்களூரில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்ததில் 16 பேர் படுகாயம்.

 

ஏப்ரல் 18 : 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மன்மோகன்சிங் குற்றமற்றவர் என்றும், ஆ.ராசா தவறாக வழிகாட்டியதாகவும் பாராளமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் தகவல்.

 

ஏப்ரல் 19 : 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுத்தேன் என முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா அறிவிப்பு

 

ஏப்ரல் 20 : காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். 19 கிலோ மீட்டர் தூரம் ஆக்கிரமித்து இந்தியா எல்லைக்குள் கூடாரம் அமைத்தனர். 

 

ஏப்ரல் 23 : பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் சென்னை, மதுரையில் 3 சதிக்காரர்கள் கைது. 

 

ஏப்ரல் 26 : நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணை அறிக்கையில் மத்திய சட்ட அமைச்சரின் தலையீடு பற்றி உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ பரபரப்பு தகவலை தெரிவித்ததால், மத்திய அரசுக்கு புதிய சிக்கல்.

 

ஏப்ரல் 30 : நிலக்கரி ஊழல் அறிக்கையை சட்ட அமைச்சரிடம் காண்பித்த சி.பி.ஐ க்கு உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

 

மே 1 : சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரில் நிலநடுக்கத்தில் இரண்டு பேர் பலியானார்கள்.

 

மே 3 : தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக கைதாகி காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள கோட்பல்வால் என்ற சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ராணா சனாவுல்லாஹக் முன்னாள் ராணுவ வீரரான வினோத்குமார் உள்பட சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மே 9ந்தேதி மரணம் அடைந்தார்.

 

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் கோவையில் ஹக்கீம், ஆஸ்கர் அலி ஆகிய 2 பேர் கைது.

 

ரெயில்வே போர்டு உறுப்பினரிடம் இருந்து ரூ.90 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ரயில்வே மந்திரி பவன்குமார் பன்சால் உறவினர் மகேஸ்குமார் கைது.

 

மே 5 : இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவம் வாபஸ் பெற்றது. நான்காவது கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

 

கர்நாடக மாநில சபைக்கு நடந்த தேர்தலில் 69 சதவீத வாக்குப்பதிவானது. மே.8ந்தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக சித்தராமையா மே 13 ந்தேதி பதவி ஏற்றார்.

 

மே 6 : நிலக்கரி சுரங்க ஊழலில் சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் திருத்தங்கள் செய்தனர் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் ஆன சி.பி.ஐ பிரமாண பத்திரத்தில் தகவல்.

 

மே 8 : நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணை அறிக்கையை திருத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ க்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

 

மே 10 : லஞ்ச ஊழல்புகார்களில் சிக்கிய மத்திய ரயில்வே மந்திரி பன்சால், நிலக்கரி ஊழல் பற்றிய சி.பி.ஐ அறிக்கையை திருத்திய விவகாரத்தில் சிக்கிய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்

 

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த தற்காலிக கண்காணிப்பு குழு-சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

 

மே 13 : மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு இல்லை என உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு.

 

மே 14 : அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப் போல் மதுரை நகரில் ரூ.100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவிப்பு.

 

மே 16 : மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்திற்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, அவர் மும்பை தடா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மே 17 : கிரிக்கெட் சூதாட்ட புகாரில் அதிரடியாக சென்னையில் ஆறு தரகர்கள் கைது செய்யப்பட்டனர். 13 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மே 18 : நிலக்கரி ஊழலை விசாரிக்கும் தலைமை சி.பி.ஐ அதிகாரி விவேக் தத் ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதானார்.

 

மே 19 : டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்-சீன பிரதமர் லீ கெகியாங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எல்லைப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆயின.

 

மே 21 : கிரிக்கெட் சூதாட்ட புகார் வழக்கில் ஐ.பி.எல் போட்டிக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

 

மே 23 : இந்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியாக சசிகாந்த் சர்மா டெல்லியில் பதவியேற்றார்.

 

மே 24 : நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவதற்காக உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்று காவிரி கண்காணிப்பு தற்காலிக குழுவை மத்திய அரசு அமைத்தது.

 

மே 25 : சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் மகேந்திரகர்மா.நந்தகுமார் உள்பட 38 பேர் பலி. படுகாயம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி .சி.சுக்லா ஜூன் 11 ந்தேதி மரணம்.

 

மே 28 : ரூ 19 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியாபால் கைது

 

மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கம்.

 

மே 29 : ரூ. 1,928 கோடி செலவிலான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

 

அணுசக்தி துறையில் இந்தியாவும், ஜப்பானும் கூட்டு ஒப்பந்தம் செய்தன. பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷூ அபேயும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

மே 30 : டெல்லி மேல்-சபை தேர்தலில் அசாமில் இருந்து ஐந்தாவது முறையாக போட்டியிட்ட மன்மோகன்சிங் வெற்றி.

 

12 தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

 

ஜூன் 3 : தகவல் அறியும் உரிமை சட்டம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்று மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு.

 

ஜூன் 4 : கஜினி படத்தில் நடித்த இந்தி நடிகை ஜியாகான் மும்பையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

ஜூன் 5 : ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவிடம் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.

 

ஜூன் 7 : கோவாவில் நடைபெற்ற பா.ஜா நிர்வாகிகள் கூட்டத்தை கட்சியின் மூத்த தலைவர் அத்வானி புறக்கணித்தார்.

 

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் பலி.

 

ஜூன் 9 : பாரதீய ஜனதா தேர்தல் பிரசார குழு தலைவராக கோவா மாநாட்டில் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.

 

ஜூன் 10 : நரேந்திர மோடிக்கு பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அத்வானி ராஜினாமா செய்தார்.

 

ஜூன் 11 : அத்வானி ராஜினாமாவைத் தொடர்ந்து பா.ஜனதாவில் ஏற்பட்ட பிரச்சனையில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. மேலிட குழு முடிவை ஏற்று ராஜினாமா முடிவை அத்வானி வாபஸ் பெற்றார்.

 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் எம்பி நவீன் ஜிண்டால் இடம் இருந்து முன்னாள் மத்திய - மந்திரி தாசரி நாராயணராவ் ரூ. 2 1/2 கோடி லஞ்சம் பெற்றதாக அவர்கள் இருவர் மீதும் 

 

சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து, அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

 

ஜூன் 13 : பீகார் மாநிலத்தில் 150 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து பயணிகள் ரயில் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலி

 

ஜூன் 15 : மத்திய அமைச்சர் அஜய்மக்கான் திடீர் ராஜினாமா.

 

ஜூன் 16 : பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது,

 

ஜூன் 17 : உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் புனித யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் 

 

சிக்கினார்கள்.மழை வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகவும், மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாகவும் அறிவிக்கப்பட்டது.

 

மத்திய மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உள்பட 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். மல்லிகார் ஜூனகார்கேவுக்கு ரயில்வே இலாகா ஒதுக்கீடு.

 

ஜூன் 18 : நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு பற்றி பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை.

 

ஜூன் 19 : உத்தரகாண்ட் வெள்ள சேதத்தை பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர்.

 

பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் பாரதீய ஜனதா வெளிநடப்பு.

 

ஜூன் 23 : மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

 

ஜூன் 25 : உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் மதுரை விமானி பிரவீன் உள்பட 19 பேர் பலி.

 

ஜூன் 26 : இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்க பாதையுடன் ஜம்மு - காஷ்மீரை இணைக்கும் முதல் ரயில் பாதையை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

 

ஜூன் 27 : டெல்லி மேல்-சபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 பேர் வெற்றி பெற்றனர். ஆறாவது இடத்துக்கு கனிமொழி (தி.மு.க) வெற்றி பெற்றனர். 22 ஒட்டு பெற்று தேமுதிக தோல்வி அடைந்தது.

 

ஜூன் 29 : உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமனம்.

 

ஜூன் 30 : உத்தரகாண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கிய மூன்றாயிரம் பெற காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

 

ஜூலை 2 : ஜார்கண்ட் மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் வந்த கார்கள் மெது 100 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் சூப்பிரண்டு அமர்ஜித் பாலிகர் உள்பட 8 பேர் பலி.

 

ஜூலை 3 : இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

 

உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

 

ஜூலை 7 : பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில் அதிகாலையில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் மதகுரு உள்பட  5 பேர் படுகாயம்

 

ஜூலை 10 : குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனையே எம்.பி., எம்.எல்.ஏ க்களின் பதவியை ரத்து  செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு.

 

ஜூலை 11 : டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான சிறுவன் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.

 

விசாரணை கைதிகளும் தேர்தலில் போட்டியிடமுடியாது என்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

 

ஜூலை 12 : இந்திப்பட வில்லன் நடிகர் பிரான் மரணம் அடைந்தார்.

 

ஜூலை 13 : ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக ஹேமந்த்சோரன் பதவி ஏற்றார்.

 

ஜூலை 14 : 160  ஆண்டுகள் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிய தந்தி சேவைக்கு மக்கள் பிரயா விடை கொடுத்தனர். இறுதி நாளில் ஏராளமான பேர் தங்களது உறவினர்களுக்கு தந்தி அனுப்பி நெகிழ்ந்தனர்,

 

ஜூலை 16 : பீகார் மாநிலம் சாப்ரா பள்ளிக்கூடத்தில் மத்திய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் பலி.

 

ஜூலை 17 : நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் புகார் விசாரணை குறித்து எந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்க கூடாது என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

 

ஜூலை 18 : எம்.பி.பி.எஸ் ., பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான பொது நுழைவுத் தீர்வை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு.

 

ஜூலை 24 : ஏழைகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது என்று மத்திய திட்டகமிஷனின் புள்ளி விவரத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

 

ஜூலை 26 : ஒரு ரூபாய்க்கு ஒருவர் சாப்பிட்டு வயிற்றை நிரப்பி விடலாம் என்று மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது.

 

ஜூலை 29 : ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

 

ஜூலை 30 : முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் கேரள மாநில அரசுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது. அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? என்று 

கேட்டு கண்டித்தது.

 

ஆகஸ்ட் 1 : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

 

ஆகஸ்ட் 2 : தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் 15 காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா.

 

ஆகஸ்ட் 5 : இந்தியாவில் எந்த இடத்திலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஆறுகளில் மணல் அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை.

 

ஆகஸ்ட் 10 : முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முதல் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியது.

 

சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா போலி ஆவணங்கள் கொடுத்து நிலமோசடி செய்ததாக ஐ.ஏ.எஸ் அதிகரி தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்.

 

ஆகஸ்ட் 11 : ராஜ்நாத்சிங் முன்னிலையில் சுப்பிரமணியசாமி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.

 

ஆகஸ்ட் 12 : சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் கேரளா முதல் அமைச்சர் உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி கேரளா சட்டசபையை ஒரு லட்சம் பேர் முற்றுகை.

 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் தொடக்க விழா கொச்சியில் நடைபெற்றது. ராணுவ அமைச்சர் ஏகே. அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ஆகஸ்ட் 13 : சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நிலா மோசடி புகார் விவகாரத்தால் நாடளமன்றம் முடங்கியது.

 

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீல்மூல்கி கப்பல் கடற்படை தளத்தில் தீப்பிடித்து வெடித்தது. இதனால் அந்த கப்பலில் இருந்த 18 வீரர்கள் பலியானார்கள்.

 

ரூ.3600 கோடி ஹெலிகாப்டர் பேரத்தில் விதி மீறல் நடந்துள்ளது என்று தணிக்கை அதிகாரி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

 

தங்கம் இறக்குமதி வரி மேலும் 2 சதவீதம் உயர்வு.

 

எம்.பி.., எம்.எல்.ஏக்கள் பதவி பறிப்பு பற்றிய உச்ச மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வர அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

 

ஆகஸ்ட் 16 : இறக்குமதி வரி உயர்வு,  ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 840 அதிகரித்தது.

 

ஆகஸ்ட் 17 : இந்தியாவில் 43 வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்ட லஸ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி துண்டாவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

 

ஆகஸ்ட் 18 : இந்தியாவால் தேடப்பட்டு வரும் அத்தனை தீவிரவாத தலைவர்களையும் சந்தித்து இருக்கிறேன் என நேபாள எல்லையில் கைது செய்யப்பட்ட லஸ்கர் இ தொய்பா வெடிகுண்டு நிபுணர் 

சையத் அப்துல் கரீம் என்ற துண்டா வாக்குமூலம் அளித்தார்.

 

ஆகஸ்ட் 19 : பீகார் மாநிலத்தில் பக்தர்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது, ரயில் மோதி 39 பேர் பலி.

 

ஆகஸ்ட் 20 : நிலக்கரி ஊழல் தொடர்புள்ள 257 கோப்புகளை காணவில்லை என சி.பி.ஐ அறிவிப்பு.

 

ஆகஸ்ட் 22 : ஆந்திர எம்.பிக்கள் 10 பேரை இடைநீக்கம் செய்து மத்திய அரசு பாராளமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்ததை கண்டித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

 

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பாக ரிலையன்ஸ் தலைவர் அணில் அம்பானி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நான்கு மணி நேர சாட்சியம் அளித்தார். பல கேள்விகளுக்கு அவர் ஞாபகம் இல்லை என்று கூறியதால் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

 

ஆகஸ்ட் 23 : மும்பையில் பத்திரிகை பெண் புகைப்பட நிபுணர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

 

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி டெல்லி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அப்போது ரிலையன்ஸ் நிறுவனங்களில் எனக்கு பங்களிப்பு இல்லை என 

கூறினார்.

 

ஆகஸ்ட் 24 : கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பாராளமன்ற இடைத்தேர்தலில் பெங்களூர் ஊரகம், மண்டியா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மாண்டியாவில் நடிகர் ரம்யா வெற்றி பெற்றார்.

 

ஆகஸ்ட் 26 : உணவு பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

 

ஆகஸ்ட் 28 : பாகிஸ்தான் சீனவைத் தொடர்ந்து, குட்டி நாடான மியான்மர் ராணுவமும் இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு முகாம் அமைக்க முயன்றது. மத்திய அரசின் உடனடி 

நடவடிக்கையால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

 

ஆகஸ்ட் 29 : ரூ.35 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட டெல்லி, மும்பை, புனே குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி யாசின்பத்கல் இந்திய-நேபாள எல்லையில் கைது.

 

ஆகஸ்ட் 31 : பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் அசராம் பாபுவை இந்தூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர்.

 

செப்டம்பர் 1 : பல பெண்களை கற்பழித்து கொலை செய்த சைகோ ஜெயசங்கர் கர்நாடகா சிறையில் இருந்து தப்பி ஓட்டம்.

 

செப்டம்பர் 2 : டெல்லி மேல்சபையில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது.

 

பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் அசராம் பாபு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

செப்டம்பர் 3 : நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமானது பற்றி நாடளமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்.

 

செப்டம்பர் 4 : குற்றவழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்ற எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச 

நீதிமன்றம் மறுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

செப்டம்பர் 7 : உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் பெண்ணை கேலி செய்தது தொடர்பாக ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 62 பேர் கொலை செய்யப்பட்டனர். 40 ஆயிரம் பேர் வேறு 

இடங்களுக்கு குடி பெயர்ந்தனர்.

 

செப்டம்பர் 10 : சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சோனியா காந்திக்கு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் மூலம் சம்மன் வழங்க நியூயார்க் 

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

செப்டம்பர் 11 : புயல் - மழையால் பலத்த சேதம் அடைந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் 86 நாட்களுக்கு பிறகு வழிபாடுகள் தொடங்கின.

 

செப்டம்பர் 13 : பாரதீய ஜனதா கட்சியில் பிரதாமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.

 

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கி குற்றவாளி என அறிவிக்கப்பட அக்ஷயகுமார், வினய்ஷர்மா, பவன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்ற அதிரடி தீர்ப்பு

 

தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுவில் குற்ற வழக்கு, சொத்து விவரங்களை மறைத்தால், மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துவிடலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

 

செப்டம்பர் 16 : அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற 2014ம் ஆண்டுக்கான அமெரிக்க அழகி போட்டியில் 24 வயது இந்திய வம்சாவளிப் பெண் நினா தவ்லூரி அழகிப் பட்டம் வென்றார்.

 

செப்டம்பர் 19 : மருத்துவ மாணவர்கள் சேர்க்கை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ரஷீத் மசூது குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு.

 

செப்டம்பர் 23 : பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதர் அட்டையை கட்டாயமாக்க கூடாது என மத்திய-மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 

செப்டம்பர் 25 : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக் கமிஷன் அமைப்பு.

 

செப்டம்பர் 26 : காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் நிலையம் மற்றும் ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் ராணுவ அதிகாரி உள்பட 13 பேர் பலி.

 

திருச்சியில் பா.ஜ.கவின் இளந்தாமரை மாநாட்டில் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.

 

செப்டம்பர் 27 : குற்றவழக்குகளில் தண்டனை பெரும் மக்கள் பிரதிநிதிகளை காப்பாற்ற வகை செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு, அவசர சட்டம் முட்டாள் தனமானது 

என்றும், அதை கிழித்து ஏறிய வேண்டும் என்று அவர் கூறினார்.

 

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய மின்னணு ஓட்டு எந்திரத்தில் தனி பட்டன் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரணை நடத்திய நாடளமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை தி.மு.க வின் கடும் எதிர்ப்பையும் மீறு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

செப்டம்பர் 30 : பீகாரில் நடந்த மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று நீதிபதி பரபரப்பு தீர்ப்பு.

 

அக்டோபர் 1 : மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக காங்கிரஸ் எம்பி. ரஷீத் மசூதுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

அக்டோபர் 2 : குற்ற வழக்கில் தண்டனை பெரும் மக்கள் பிரதி நிதிகள் பதவியை இழப்பதை தடுக்கும் வகையில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவசர சட்டத்தை வாபஸ் 

பெறுவது என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு

 

சென்னை உள்பட 5 மாநகரங்களில் பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனை தொடங்கியது.

 

அக்டோபர் 3 : பீகார் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் எம்.பி 

பதவியை இழந்தார்.ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் டிசம்பர் 16 ந்தேதி விடுதலையானார்.

 

ஆந்திராவை 2 ஆகா பிரித்து தனி தெலுங்கானா மாநில அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் சிரஞ்சீவி, பல்லம் ராஜீ, சூர்யபிரகாஸ் ரெட்டி உள்பட 

நான்கு பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

 

அக்டோபர் 12 : வாங்க கடலில் உருவான பைலின் புயல் ஓடிசாவை தாக்கி 25 பேர் பலி

 

வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டோ பட்டன் வசதியை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது.

 

அக்டோபர் 14 : மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள ரத்னகார் என்ற இடத்தில் உள்ள துர்க்கை கோவிலில் நடந்த நவராத்திரி விழாவின் போது நெரிசலில் சிக்கி 115 பேர் பலி.

 

அக்டோபர் 21 : லஞ்ச வழக்கில் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பியான பியானா ரஷீத் மசூத்தின் பதவி பறிக்கப்பட்டது.

 

அக்டோபர் 24 : 3500 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய பிரபல சினிமா பின்னணி பாடகர் மன்னாடே பெங்களூரில் மரணம்.

 

அக்டோபர் 26 : பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜா.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலி, 100 பேர் காயம் அடைந்தனர்.

 

அக்டோபர் 29 : நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை சேர்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடியும் ஒரே மேடையில் பேசினார்கள்.

 

அக்டோபர் 30 : பெங்களூரில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 45 பயணிகள் உயிருடன் கருகி பிணமானார்கள்.

 

அக்டோபர் 31 : அரசியல்வாதிகளால் பந்தாடப்படுகிற ஐ,ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

 

நவம்பர் 3 : கேரளா மாநிலம் கொல்கத்தாவில் நடத்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி என் பீதாம்பர குரூப் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என நடிகர் சுவேதா மேனன் புகார் தெரிவித்தார். அந்த எம்பி. மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பின்னர் புகாரை வாபஸ் பெற்றார்.

 

நவம்பர் 5 : செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கல்யான் விண்கலத்துடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

நவம்பர் 8 : கர்நாடக அரசு ஜனவரி மாதம் வரை காவிரியில் 26 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது.

 

நவம்பர் 9 : இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான குர்ஷித் செல்வார் என அறிவிக்கப்பட்டது.

 

சி.பி.ஐ சட்ட விரோதம் என்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 

நவம்பர் 13 : காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றார்.

 

நவம்பர் 16 : கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விடைபெற்றார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு.

 

நவம்பர் 19 : சிறைச்சாலை மற்றும் போலீஸ் காவலில் இருக்கும் விசாரணை கைதிகள் தேர்தல்களில் போட்டியிட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

 

பெங்களூரில் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த வங்கி மேலாளர் ஜோதி உதய் அங்குள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்ற போது அவரை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றான். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவானது.

 

நவம்பர் 22 : வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஹெலன் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.

 

கனிம சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர் சந்தோஷ்லாட் ராஜினாமா

 

பெண் நிருபர் கூறிய பாலியல் புகாரின் பேரில் தெகல்கா ஆசிரியர் தரும் தேஜ்பால் மீது வழக்கு பதிவு

 

ஐந்து முறை சாம்பியனான ஆனந்தை வீழ்த்தி உலக சதுரங்க பட்டத்தை கார்ல்சென் கைப்பற்றினார். அவருக்கு ரூ. 9.90 கோடி மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

 

நவம்பர் 23 : நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மெகா லோக் அதலத் நடத்தப்பட்டது இதில் 31 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. 

 

மும்பை அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து நடிகை சுருதிஹாசனை தாக்கிய திருமூக்கே என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

நவம்பர் 25 : சிறுமி ஆருஷி கொலையில் பெற்றோர்கள் தான் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 

நவம்பர் 28 : போலி பாஸ்போர்ட் வழக்கில் மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி அபுசலீமுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு.

 

நவம்பர் 29 : பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலி என தெரியவந்தது. அவர் நீதிபதிகள் குழுவிடம் குற்றத்தை மறுத்து வாக்குமூலம் அளித்தார்,

 

நவம்பர் 30 : பெண் நிருவர் கொடுத்த பாலியல் வழக்கில் தெகல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார்.

 

டிசம்பர் 8 : நடந்து முடிந்த சட்ட பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ. ஆட்சியை கைபற்றியது. டெல்லியில் பாஜக 32 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

 

டிசம்பர் 10 : பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை.

 

டிசம்பர் 13 : மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஜாமினில் வெளிவந்தார். 

 

முன்னாள் உள்துறை செயலர் ஆர்.கே. சிங்., பா.ஜ., கட்சியில் இணைந்தார். 

 

நாடு முழுவதும் வங்கி சேமிப்பு கணக்குகளில், வாடிக்கையாளர்களின் உரிமை கோரப்படாத பணம் 3,652 கோடி ரூபாய் உள்ளதாக நிதியமைச்சகம் தகவல். 

 

டிசம்பர் 14 : மிசோரம் சட்டசபை தேர்தலில் காங்., மீண்டும் வெற்றி. முதல்வராக தொடர்ந்து 2வது முறையாக லால் தன்ஹவ்லா பதவியேற்பு. இவர் 5வது முறையாக மிசோரம் முதல்வராகியுள்ளார்.

 

டிசம்பர் 15 : மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்த சிஸ் ராம் ஓலா மறைவைத் தொடர்ந்து, அவரது துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்க்கு ஒதுக்கீடு. 

 

டிசம்பர் 18 : சம்பள உயர்வு, வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம். 

 

டிசம்பர் 20 : உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர்சானிக் விமானம் "தேஜஸ்', 2வது முதல் கட்ட சோதனை பெங்களூருவில் வெற்றிகரமாக நடந்தது.  

 

டிசம்பர் 28 : டெல்லியின் இளம் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு.

 

by Swathi   on 31 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.