LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2013-ல் விளையாட்டு உலகம் ஒரு பார்வை !!

ஜனவரி 6: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றியது.

 

கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி ஓய்வு.

 

ஜனவரி 19 : இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த ஒருநாள் போட்டியில், அதிவேகமாக (93 இன்னிங்ஸ்) 4000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் விராத் கோஹ்லி (96 போட்டி, 4028 ரன்கள்). 

 

ஜனவரி 27: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 3-2 என கைப்பற்றியது.

 

ஜனவரி 27: ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பைனலில், இங்கிலாந்தின் முர்ரேவை வீழ்த்திய செர்பியாவின் ஜோகோவிச், சாம்பியன் பட்டம் வென்றார். 

 

ஜனவரி 28: சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் வென்ற மும்பை அணி, 40வது முறையாக சாம்பியன்.

 

பிப்ரவரி 8: "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் சதம் அடித்த மும்பை அணியின் சச்சின், முதல் தர போட்டியில் அதிக சதம் (81) அடித்த கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.

 

பிப்ரவரி 14: வேல்ஸ் ஓபன் ஸ்னூக்கர் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் பங்கஜ் அத்வானி.

 

பிப்ரவரி 17: பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் பைனலில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய ஆஸ்திரேலியா, 6வது முறையாக சாம்பியன்.

 

பிப்ரவரி 18: ஜெர்மனியில் நடந்த கிரென்கே கிளாசிக் செஸ் தொடரில், 6.5 புள்ளிகள் பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

பிப்ரவரி 22: சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற "சுழல் மன்னன்' ஹர்பஜன் சிங், 100 டெஸ்டில் விளையாடிய 10வது இந்தியர் என்ற பெருமை பெற்றார். 

 

பிப்ரவரி 23: துபாய் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெதானி மேடக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

 

பிப்ரவரி 24: பிரான்சில் நடந்த மார்செல்லி ஓபன் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் போபண்ணா, இங்கிலாந்தின் கோலின் ஜோடி சாம்பியன்.

 

பிப்ரவரி 25: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் 224 ரன்கள் எடுத்த தோனி, அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் சச்சினை (217 ரன்கள், எதிர்-நியூசி., 1999, ஆமதாபாத்) முந்தி, முதலிடம் பிடித்தார்.

 

மார்ச் 2 : துபாய், டென்னிஸ் தொடரில், இந்தியாவின் பூபதி, பிரான்சின் மைக்கேல் லோட்ரா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

 

மார்ச் 5 : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் கங்குலியை (21 வெற்றி) பின்தள்ளி முதலிடம் பிடித்தார் தோனி (22 வெற்றி).

 

மார்ச் 12 : உலகின் தலைசிறந்த வீரருக்கான லாரஸ் விருதை, ஜமைக்காவின் உசைன் போல்ட் வென்றார்.

 

மார்ச் 16 : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் ஷிகர் தவான் 85 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் 136 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில், அறிமுக போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.

 

மார்ச் 17 : மலேசியாவில் நடந்த அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 5வது இடம் பிடித்தது.

 

ஏப்ரல் 7 : தென் கொரியாவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனலில் இந்தியாவின் ஹீனா சித்து 8வது இடம் பிடித்தார்.

 

ஏப்ரல் 20 : சச்சினின் மெழுகுச்சிலை ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் திறக்கப்பட்டது.

 

மே 4 : மலேசிய ஓபன் பாட்மின்டன் பைனலில் இந்தியாவின் சிந்து, சிங்கப்பூரின் ஜுவான் குவை வீழ்த்தி, கோப்பை வென்றார்.

 

மே 20: ஸ்பெயினில் நடந்த லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

மே 21: இந்திய கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட பிரச்னையினால், பிரிமியர் கிரிக்கெட் அமைப்பிலிருந்து புனே அணி விலகியது.

 

மே 24: பிரிமியர் தொடர் சூதாட்டம் தொடர்பாக சென்னை அணியின் முன்னாள் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் கைது.

 

மே 26: கோல்கட்டாவில் நடந்த பிரிமியர் தொடர் பைனலில் மும்பை அணி, சென்னையை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.

 

ஜூன் 2: பி.சி.சி.ஐ., தற்காலிக தலைவராக ஜக்மோகன் டால்மியா நியமனம்.

 

ஜூன் 23: தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் தேர்வு.

 

ஜூலை 6: விம்பிள்டன் பெண்கள் பிரிவு பைனலில், பிரான்சின் மரியன் பர்டோலி, ஜெர்மனியின் லிசிக்கியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். 

 

ஜூலை 7: விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு பைனலில், செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்திய ஆன்டி முர்ரே, 77 ஆண்டுகளுக்கு பின் இப்பட்டத்தை வென்ற முதல் பிரிட்டன் வீரரானார். 

 

ஜூலை 12: இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில், வென்ற இந்திய அணி கோப்பை கைப்பற்றியது. 

 

ஜூலை 11: நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்டில், 98 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியாவின் ஆஷ்டன் ஏகார், 11வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். 

 

ஜூலை 23: இந்தியன் பாட்மின்டன் லீக் தொடர் ஏலத்தில் குறைந்த தொகைநிர்ணயித்ததாக ஜூவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா புகார். 

 

ஆகஸ்டு 3: புலவாயோவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அன்னிய மண்ணில் முதல் முறையாக தொடரை முழுமையாக (5-0) வென்று வரலாறு படைத்தது. இத்தொடரில் 5 போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா 18 விக்கெட் வீழ்த்தினார்.

 

ஆகஸ்டு 4: இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா. இவரது "சுழல்' ஜாலம் கைகொடுக்க, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என முழுமையாக வென்றது. தொடர்ந்து, ஐ.சி.சி., ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம், கும்ளேவுக்கு பின் 17 ஆண்டுகள் கழித்து முதலிடம் பிடித்த இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார்.

 

ஆகஸ்டு 12: உலக தடகளப் போட்டியின், பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர் தங்கம் வென்றார்.

 

ஆகஸ்டு 16: சீனாவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரஞ்சித் விராலி-முருகேசன் ஜோடி சாம்பியன். 

 

ஆகஸ்டு 17: உலக தடகள சாம்பியன்ஷிப் 200 மீ., ஓட்டத்தில், ஜமைக்காவின் உசைன் போல்ட், தங்கம் வென்றார்.

 

ஆகஸ்டு 25: நியூஹேவன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜி ஜெங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

 

ஆகஸ்டு 25: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, கோப்பை வென்றது.

 

ஆகஸ்டு 29: இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், "டுவென்டி-20' போட்டியில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார்.

 

ஆகஸ்டு 31: முதல் முறையாக நடந்த இந்தியன் பாட்மின்டன் லீக் தொடரில், ஐதராபாத் அணி, அவாத் வாரியர்ஸ் (லக்னோ) அணியை வீழ்த்தி சாம்பியன்.  

 

செப்டம்பர்  8: வரும் 2020 ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம் சேர்க்கப்பட்டது. 

 

செப்டம்பர்  9: யு.எஸ்.ஓபன் டென்னிஸ் பைனலில், பெலாரசின் அசரன்காவை வீழ்த்தி, கோப்பை வென்றார் அமெரிக்காவின் செரினா. 

 

செப்டம்பர்  10: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராக ஜெர்மனியின் தாமஸ் பாக் தேர்வு.

 

செப்டம்பர் , 13: சூதாட்ட சூறாவளி: பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா கடந்த மே 16ல் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் ஜாமினில் வெளியாகினர். இதில், ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை விதித்தது.

 

செப்டம்பர்  29: பி.சி.சி.ஐ., தலைவராக சீனிவாசன் போட்டியின்றி தேர்வு

 

செப்டம்பர்  29: சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) தொடரில், இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

 

அக்டோபர் 4: ஆப்கானிஸ்தான் அணி, உலக கோப்பை கிரிக்கெட் (2015) தொடரில் பங்கேற்க, முதன் முறையாக தகுதி பெற்றது.

 

அக்டோபர் 5: டிரினிடாட் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் போட்டியில், 26வது ரன் எடுத்த போது, கிரிக்கெட் அரங்கில் 50 ஆயிரம் ரன்களை எட்டினார் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். 

 

அக்டோபர் 16: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில், 52வது பந்தில் சதம் அடித்து கோஹ்லி, அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்களில் முதலிடம் பெற்றார். 

 

அக்டோபர் 20: மக்காவு ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல் சாம்பியன்.

 

நவம்பர் 2: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, 3-2 என, இந்தியா கைப்பற்றியது.

 

நவம்பர் 3: கோஹ்லி "நம்பர்-1': இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி. "சேஸ்' மன்னனான இவர், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் தலா 1, ஆஸ்திரேலிய தொடரில் 2 சதங்கள் அடிக்க, ஐ.சி.சி., ஒருநாள் பேட்ஸ்மேன்கள் "ரேங்கிங்' பட்டியலில், முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்றார் (நவம்பர் 3). 

 

நவம்பர் 8: டெஸ்ட் "ஆல்-ரவுண்டர்கள்' பட்டியலில் அஷ்வின் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.

 

நவம்பர் 11: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் "பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஹீனா சித்து.

 

நவம்பர் 15: கடைசி டெஸ்டில் களமிறங்கிய இந்திய வீரர் சச்சின், 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

 

நவம்பர் 18: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், செக் குடியரசு மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. 

 

நவம்பர் 20: பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் மெஸ்சி, சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்கான "கோல்டன் பூட்' விருதை தட்டிச்சென்றார்.

 

நவம்பர் 21: இந்தியாவின் செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இளம் வீரர் நார்வேயின் கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் ஒரு சுற்றில் கூட வெற்றி பெறாத இவர், 3.5-6.5 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து, நவம்பர் 21ல் பட்டத்தை பறி கொடுத்தார்.

 

டிசம்பர் 3: ஐ.சி.சி., வழங்கும் "மக்களின் மனம் கவர்ந்த வீரர்' விருது, இந்திய அணி கேப்டன் தோனிக்கு கிடைத்தது.

 

டிசம்பர் 5: வரும் 2017, "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரை (17 வயது) நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது.

 

டிசம்பர் 7: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின், புதிய விதிகளை ஏற்க, இந்திய ஒலிம்பிக் சங்கம் முன்வந்தது.

 

டிசம்பர் 13: ஐ.சி.சி.,யின் சிறந்த "வளர்ந்து வரும் வீரருக்கான' விருதை இந்திய அணியின் புஜாரா தட்டிச் சென்றார். 

 

டிசம்பர் 14: இந்திய ஆண்கள் "சர்கிள்' கபடி அணி, தொடர்ந்து நான்காவது முறையாக உலக கோப்பை வென்றது. 

 

டிசம்பர் 17: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை, 3-0 என, ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

 

டிசம்பர் 20: நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரருக்கான விருதுக்கு, கேப்டன் சுனில் செத்ரி தேர்வானார்.

 

டிசம்பர் 22: இங்கிலாந்து அணியின் "சுழல்' ஜாம்பவான் சுவான், கிரிக்கெட் அரங்கில் இருந்து திடீரென விடைபெற்றார்.

 

டிசம்பர் 23: தேசிய பாட்மின்டன் தொடரில் சிந்து, ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றனர். 

 

டிசம்பர் 25: தென் ஆப்ரிக்க அணியின் "ஆல் ரவுண்டர்' காலிஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

by Swathi   on 31 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.