|
||||||||
ஊர் பரவலாக்கலும்- உலகப் பரவலாக்கலும் : திருக்குறள் |
||||||||
![]() சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் "ஊர் பரவலாக்கலும் -உலகப் பரவலாக்கலும்" செய்ய ஒவ்வொரு நூலுக்கும் தன்முனைப்பு இல்லாத ஒரு குழு , ஓர் அமைப்பு பொறுப்பேற்று, தனிமனிதர்களை முன்னிறுத்தாமல், கையில் எடுத்துள்ள நூலை / இலக்கியத்தை முன்னிறுத்தி , காலத்திற்கு ஏற்ப வாழ்வியலாக்கல் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நிலையை, தேவையை உள்வாங்கி, பிற மொழிகளை ஏற்றுக்கொண்டு அந்தந்த நாடுகளில் குறிப்பாக ஆங்கிலச் சூழலில் வாழும் நம் தமிழ் மக்களின் நிலையை உள்வாங்கி, அமைப்புகள் சிந்தனை மாற்றங்களை உள்வாங்கி , நவீனத்துவம் பெறவேண்டியது காலத்தின் தேவை.
அவற்றில் குறிப்பாகத் தொன்மையான நூல்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், இணையத்தில் ஒழுங்குசெய்து வெளியிடுதல், புதிய படைப்புகளை ஊக்குவித்தல், காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒலி ,ஒளி வடிவில் பாதுகாத்தல், அச்சில் இல்லாத நூல்களை மீட்டுருவாக்கம் செய்தல், பயிற்சிகளை முறைப்படுத்துதல், ஒருங்கிணைந்த இணையதளத்தை , மென்பொருள்களைக் கட்டமைத்தல் , அந்த இலக்கியத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர்களை மட்டும் ஒரு குழுவாகக் கட்டமைத்து அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்துதல், ஆண்டு சந்திப்பு, ஐந்தாண்டு, பத்தாண்டு இலக்கு என்று நிகழ்ச்சிகளாக, மாநாடுகளாக , ஆய்வுகளாக மட்டும் செல்லாமல் அந்த குறிப்பிட்ட இலக்கியத்தை, நூலை கையில் எடுத்து ஆழமாகப் பல்வேறு கோணங்களில் மக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு முன்னெடுத்துச் செல்லும் நிலை இன்றைய காலக்கட்டத்தின் தேவை.
அதற்காகக் கடந்தகாலப் பங்களிப்புகளைக் குறைசொல்வதோ , குறைத்து மதிப்பிடுவதோ அல்ல , இன்றைய கால மாற்றத்தை உள்வாங்கி தமிழ் என்றும் கணித்தமிழாக , அறிவியல் தமிழாக நிற்பது போன்று நம் ஒவ்வொரு இலக்கியங்களும் , அதனை முன்னெடுக்கும் அமைப்புகளும் மாற்றங்களை உள்வாங்கவேண்டும், மாணவர்களை, அடுத்த தலைமுறையை உள்வாங்க வைக்கவேண்டும், வாழ்வியலாகவேண்டும் என்பதே இதை எழுதுவதன் நோக்கம்.
இதற்காகத் திருக்குறள் என்ற ஒரு வாழ்வியல் நூலை கையில் எடுத்து இது முழுமையாக வாழ்வியல் நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களிடமும் உலகிடமும் செல்ல என்ன செய்யவேண்டும் என்று ஆராய்கிறோம். இதற்காக ஒத்த அமைப்புகளை, ஆளுமைகளை ஒருங்கிணைத்து குழுவாக அகல பயணிக்காமல் ஆழப் பயணிக்கும் நோக்கில், ஆய்வு செய்து ஒரு இலக்கியத்தை, நூலைக் கொண்டுசெல்ல மூன்று வகைகளில் நாம் செயல்பட முடிகிறது என்பதை அறிந்தோம்.
1. ஊர் பரவலாக்கல்
2. அரங்க ஆய்வுகள் ( மாநாடுகள் - நூல் எழுதுதல், அமைப்புகளைக் கட்டி விழாக்களை நடத்துதல், ஊக்குவித்தல் போன்றவை)
3. உலகப் பரவலாக்கல்
நாம் கடந்த கடந்தகாலங்களில் தொடங்கி நிகழ்காலத்தில் செய்துவருபவை பெரும்பாலும் இரண்டாவது வகையான அரங்க ஆய்வுகள் வகையில் வருவதாக அறிகிறோம். அந்த குறிப்பிட்ட இலக்கியத்தை, நூலை ஊர் பரவலாக்கல் செய்ய, உலகப் பரவலாக்கல் செய்யப் பல்வேறு நவீன உத்திகள் தேவை
என்பதையும், அதைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாம் திருக்குறளை மட்டும் கையில் எடுத்து 50 விதமான பரவலாக்கல் திட்டங்களையும் ஆவணப்படுத்தி (kuralworld.org) வெளியிட்டுள்ளோம். மேலும் "திருக்குறள் பரவலாக்கல் திட்டங்கள் -50" என்று எமது மூன்றாவது கையேடு நூல் தயாராகிவருகிறது. மே மாதம் கரூரில் நடைபெறவிருக்கும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவில் நூல்கள் வெளியிடப்படும்.
1 ) ஊர் பரவலாக்கல் - சில சிந்தனைகள், செயல்பாடுகள், ஒருங்கிணைப்புகள் , ஆவணப்படுத்தல்கள்
1.1. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
1.2 தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் , புதுச்சேரி, காரைக்காலில் ஒருங்கிணைப்பாளர், முற்றோதல் பயிற்சியாளர், புரவலர்
1.3 தமிழ் வளர்ச்சி மன்றம் வழங்கும் மாவட்டத்திற்கு 1000 நூல்கள் வீதம் ஆண்டுக்கு 40000 நூல்கள் , அடுத்த 10 ஆண்டுகளில் 4 இலட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் தரமான திருக்குறள் நூல்கள் (திருக்குறள் முனுசாமியார் உரையுடன்)
1.4 திருக்குறள் இணையவழிப் பயிற்சிக் கட்டமைப்பு (இந்திய, வெளிநாட்டு மாணவர்களுக்கு)
1.5 பயிற்சியாளர்களுக்குப் பயிற்சிக் கையேடு, பயிற்சி வகுப்பு
1.6 திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் ஆலோசனை, வழிகாட்டுதல், உதவி செய்யக் குழு.
1.7. தொழில்நுட்ப வசதிகள் (திருக்குறள் உச்சரிப்பு, பயிற்சி, மனன உத்திகள் ), இணையதளம்
1.8. கைப்பேசி செயலிகள், தேவையான மென்பொருள் கட்டமைப்புகள்
1.9. உலகத் திருக்குறள் செய்திகளைத் தொகுத்து இணையத்திலும் , மாத இதழாகவும் வெளியிடுதல் - "குறள் வழி " மாத இதழ்
1.10. திருக்குறள் வெவ்வேறு தேவைகளுக்காக எல்லா வடிவிலும் கிடைக்கச் செய்தல் ( திருக்குறள் ஒலி வடிவில்,திருக்குறள் 108 போற்றி
அகவல்,திருக்குறள் மறையோதல்,திருக்குறள் இசை)
1.11 திருக்குறள் நூல்கள் தொகுப்புத் திட்டம் (7000 நூல்கள், அச்சில் இல்லாத பல நூறு நூல்கள் மீட்டெடுப்பு )
1.12 உலக அளவில் திருக்குறளுக்குப் பங்காற்றும் அமைப்புகளில் தொகுப்புப்பணி - உலகத் திருக்குறள் அமைப்புகள்
1.13 திருக்குறள் விளக்கக் காணொளிகள்
1.14 திருக்குறள் அவதானிகள் (கவனகர்கள்)
2. உலகப் பரவலாக்கல் : சில சிந்தனைகள், செயல்பாடுகள், ஒருங்கிணைப்புகள் , ஆவணப்படுத்தல்கள்
2.1 திருக்குறள் யுனெஸ்கோ அங்கீகாரம்
2.2 திருக்குறள் சிறப்புப் பதிப்பகம் - வலைத்தமிழ் பதிப்பகம் : அனைத்து நாடுகளிலும் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள திருக்குறள் சார்ந்த நூல்களைத் தொகுத்து ஒரே இடத்தில், ஒரே இணையதளத்தில் கிடைக்கச் செய்தல்
2.3 300க்கும் மேற்பட்ட திருக்குறள் உரைகளைத் தொகுத்தல் , இணையத்தில் திறனாய்வு செய்ய வெளியிடுதல் , ஆவணப்படுத்தி கிடைக்கச்செய்தல் .
2.4 திருக்குறள் உரையாசிரியர்கள் அனைவரையும் நேர்காணல் செய்து ஆவணப்படுத்தல்
2.5 திருக்குறள் தேசிய நூல் ஆவதற்குக் குழு அமைத்து வியூகம் வகுத்து செயல்பாடுகளை முன்னெடுத்தல்
2.6 திருக்குறள் மேல் தொடுக்கப்படும் கேள்விகளும் - அறிஞர்களின் பதிலும் ஆவணப்படுத்தப்பட்டுத் தெளிவு ஏற்படுத்துதல் .
2.7 உலக அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான சுமார் 309 மொழிகளில் திருக்குறளை அரசு , தனியார் அமைப்புக்கள் மொழிபெயர்க்க எதுவாக தரவுகளைத் திரட்டி ஒரு மென்பொருளை உருவாக்கி எந்த நாடு, எந்த அலுவல் மொழி, அலுவல் மொழி அல்லாத மொழி , மொழிபெயர்ப்பு விவரங்கள், எங்கு கிடைக்கும் என்று முழுமையாக வெளியிடுதல் (Thirukural Translations Data Analytics Technology Project ) .
2.8 உலகளாவிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு, அமைப்புகளுக்கு உதவ , திருக்குறள் ஐயங்களைத் தீர்க்க, அரசுகளின் உதவிகளைப் பெற வழிகாட்ட அறிஞர்களைக்கொண்ட Thirukkural Translations Guidance Committee.
2.9 திருக்குறள் சுற்றுலா
2.8 அனைத்து முயற்சிகளும், மொழிபெயர்ப்புகளும் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர - திருக்குறள் 2030 (Thirukkural 2030) திட்டம்.
2.9 திருக்குறள் நூல்களை ஆய்வு செய்து, உரையாடி காணொளியாகப் பதிவுசெய்யும் "நவில்தொறும் நூல்நயம்" திருக்குறள் நூல்கள் திறனாய்வு
2.10 திருக்குறளை வாழ்வியலாகக் கொண்டவர்களை, திருக்குறளுக்குப் பங்களிப்பு செய்தவர்களை ஆவணப்படுத்த "எனைத்தானும் நல்லவை கேட்க" காணொளிப்பதிவு நேர்காணல் நிகழ்ச்சி
2.11 திருக்குறளுக்கு என்று ஓர் ஆய்வு நடுவராக "உலகத் திருக்குறள் ஆய்வு மையம், மயிலாடுதுறை"
2.12 திருக்குறள் சிலைகள் விவரத் தொகுப்பு
2.13 திருக்குறள் கதைகள் - நாடகங்கள் தொகுப்பு
2.14 திருக்குறளில் ஆய்வுசெய்துள்ள முனைவர் பட்டங்கள், ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுக்க -திருக்குறள் ஆய்வுகள் தொகுப்புத் திட்டம்
2.15 Thirukkural Aptitude Test
2.16 திருக்குறள் வினாடி-வினா (குறள் தேனீ) - கேள்வி-பதில்கள் தொகுப்பு
2.17 குறள் குறும்படம், திரைப்படம், ஆவணப்படம் - தொகுப்பு
2.18 திருக்குறள் ஆய்வு இருக்கைகள் ஆவணப்படுத்தல், ஆய்வு நிலை
2.19 பிற நாட்டினர், தமிழுக்கு வெளியே பிற தலைவர்கள் குறிப்புகளில் திருக்குறளை ஆவணப்படுத்தும் " தமிழுக்கு வெளியே திருக்குறள்" திட்டம்
2.20 பிற படங்களைப் பயன்படுத்தாமல் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படம் பரவலாக்கக் கிடைக்கச்செய்தல் .
|
||||||||
by hemavathi on 06 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|