|
||||||||
Thirukkural Translations in World Languages - book review |
||||||||
உலகம் ஒரு ஒழுங்கில் செயல்படுவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த காலக்கட்டத்தில் ஏற்படும் சமூக , வாழ்வியல் சிக்கல்களை உள்வாங்கி எழுதப்படும் நூல்களும் , நன்னெறிக் கதைகளும் , உலகின் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படும் நூல்களுமாகும். அந்த வகையில் இன்று உலகம் என்பது ஒரு சிறு வட்டமாக சுருங்கிவிட்ட சூழலில், உலகம் போர், பகை , வன்மம், சுயநலம், அமைதியின்மை, பேராசை என்று அறத்தை விட்டு விலகி பயணிக்கும் இக்கட்டான சூழலில் உலக மக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு திருக்குறள் என்பதை உலகத் தத்துவஞானிகள், அறிவுச் சமூகம் அறியும். இருப்பினும், அதன் சொந்தக்காரர்களான நாம் அதை மொழிபெயர்த்து , முக்கியதத்துவம் கொடுத்து உலகிற்கு கொண்டுசெல்லும் பொறுப்பை முன்பைவிட மேலும் வேகமாக செய்தாகவேண்டும். தமிழில் சங்க இலக்கியமோ , திருக்குறளோ தமிழ் மக்கள் , குறிப்பிட்ட பகுதியில் நன்றாக இருக்கவேண்டும் என்று எழுதப்பட்டதல்ல. உலக மாந்தர்களுக்காக, உயிரினங்களுக்காக எழுதப்பட்ட , எந்த நாட்டிலும், எந்த மொழியிலும், எந்த பண்பாட்டிலும், எந்த இனக்குழுவிலும், எந்த காலத்திலும், எந்த வயதுடையோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான , ஆழமான , நடைமுறைக்கு ஏற்ற வாழ்வியல் கருத்துகளை உள்ளடக்கியது என்பது இதன் தனிச்சிறப்பு. வலைத்தமிழ் என்பது தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று 18 ஆண்டுகளுக்கு மேல் வசித்துவரும் ச.பார்த்தசாரதி என்பவரால் தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்ட தளம். அதில் சேர்க்கவேண்டிய ஒரு தகவலாக 2018-ல் இவர் முகநூலில் ஒரு பதிவிடுகிறார். திருக்குறள் உலகின் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? அதன் பட்டியல் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? என்று கேட்கும்போது, இதுவரை அப்படி ஒரு முழு ஆய்வு செய்யப்படவில்லை என்று அறிந்து இதற்காக "உலக மொழிகளில் திருக்குறள்:தொகுப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து அமெரிக்காவில் மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேலு, டெக்சாஸில் வசிக்கும் திரு.செந்தில் துரைசாமி, உள்ளிட்ட திருக்குறள் ஆர்வலர்களைக்கொண்டு ஒரு குழு அமைத்து மொழிபெயர்ப்பு விவரங்களை தொகுத்தல், உறுதிசெய்தல், ஒரு அச்சு நூலையாவது திரட்டி சென்னைக்கு கொண்டுவருதல் , அனைத்தையும் தொகுத்து உலகம் பயன்படுத்தும்வகையில் ஒரு நூலாக இறுதி அறிக்கையை வெளியிடுதல் என்று முழுமையாகத் திட்டமிட்டு மூன்று இலக்குகள் கொண்டு திட்டம் தீட்டுகிறார். அடுத்த ஆண்டே அவரது தேடலில் முனைவர்.என்.வி.கே.அஷ்ரப் இணைகிறார். இவர் 2001ஆம் ஆண்டுமுதல் கிடைத்த தகவல்களை தொகுத்து வருபவர். இவருடன் வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இராஜேந்திரன் IRS (ஓய்வு ) இணைகிறார், சென்னையிலிருந்து திருக்குறள் ஆர்வலர் அஜய்குமார் செல்வன் இணைகிறார். இப்படி பலதரப்பட்ட இடங்களிலிருந்து ஒரு வலுவான குழுவை அமைந்ததே இத்திட்டத்தின் வெற்றிக்கு அடித்தளம் என்கிறார் ஒருங்கிணைப்பாளர் ச.பார்த்தசாரதி. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீண்டுள்ள இப்பணியில் உலகின் தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளும், திருக்குறள் மொழிபெயர்ப்பு நடந்துள்ள பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகளும் தொடர்புகொள்ளப்பட்டு பல சவால்களை எதிர்கொண்டு உலகின் பல நாடுகளிலிலிருந்து மொழிபெயர்ப்பு நூல்கள் திரட்டப்பட்டு சென்னையில் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிவந்துள்ள மொழிகளில் இன்னும் 10 நூல்கள் தேடுதல் பட்டியலில் உள்ளன. இருப்பினும் வெளிவந்துள்ள 58 மொழிபெயர்ப்புகளில் 48 நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருக்குறள் வரலாற்றில் பல ஆண்டுகாலம் பின்னோக்கிச் சென்று, உலக நாடுகளைத் ஈடுபடுத்தி முடிக்கப்பட்டுள்ள இப்பணியில் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து அது முழு அறிக்கையை 212 பக்கங்கள் கொண்ட வண்ண நூலாக ஆங்கிலத்தில் "Thirukural Translations in World Languages" என்ற நூல் வெளிவந்துள்ளது. இதை பிப்ரவரி 11, 2024 அன்று சென்னையில் 450 திருக்குறள் ஆர்வலர்கள் கூடி நீதியரசர் மகாதேவன் அவர்கள் வெளியிட பல ஆளுமைகள் பெற்றுக்கொண்டனர். பிறகு அமெரிக்காவின் சிகாகோ, சிங்கப்பூர், மலேசியா, அமீரகம் (UAE) என்று தமிழர்கள் வசிக்கும் உலக நாடுகளில் வெளியீடு கண்டு வருகிறது. இந்நூலில் இதுவரை அறியப்படாத பல்வேறு தரவுகள் ஆதாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரை வெளிவந்துள்ள நூல்களின் மொத்த எண்ணிக்கை 58 எனவும் , அதில் இந்திய மொழிகளில் 29, வெளிநாட்டு மொழிகளில் 28 எனவும், இன்னும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல்களின் எண்ணிக்கை 158, இந்தியாவின் அலுவல் மொழிகல் சிந்தியைத் தவிர அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யுனெசுகோவின் அலுவல் மொழிகளான 10 மொழிகளில் போர்ச்சுகீசு மொழியைத் தவிர பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஐ.நா. அவையில் அலுவல் மொழியாக உள்ள ஆறு மொழிகளில் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 148 நாடுகளில் அந்நாட்டின் ஒரு மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பை பெற்றுள்ளது, இன்னும் ஒரு அலுவல் மொழியில்கூட மொழிபெயர்ப்பு செய்யப்படாத நாடுகளின் எண்ணிக்கை 45, செம்மொழி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ள இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை 52, உலக மொழிகளில் மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ள எண்ணிக்கை 6. என்று துல்லியமாக அனைத்து விவரங்களையும் துல்லியமாக பட்டியலிட்டுள்ளது இந்நூல். முதல் திருக்குறள் மொழிபெயர்ப்பு மலையாளத்தில் 1595ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது என்றும் இரண்டாவது மொழிபெயர்ப்பு இலத்தீன் மொழியில் 1730 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், முதல் ஐந்து அதிக மொழிபெயர்ப்புகளைக்கொண்ட மொழிகளாக ஆங்கிலம் -130, மலையாளம் -30 , இந்தி-20, தெலுங்கு-19 , பிரெஞ்ச் -16 விளங்குகிறது. இந்தியாவின் குடியரசுத்தலைவர் பேசும் சாந்தலி மொழி முதல் முதல் ஆப்பிரிக்க மொழியில் வெளிவந்துள்ள சுவாகளி வரை திருக்குறள் எவ்வித பொருளாதாரப் பின்புலமோ, பெரும் அமைப்பு பலமோ,பெரும் ஆதரவோ இல்லாமல் மத நூல்களுக்கு இணையாக, பல இடங்களில் அதைவிட அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டு தனி மனிதர்களால், அரசின் ஒருசில துறைகளால் மொழிபெயர்க்கப்பட்டு பரவி வருவது வியப்படையவேண்டிய ஒன்றாகும். இக்குழு இத்தோடு நின்றுவிடாமல், இரண்டாம் கட்டமாக கீழ்காணும் ஐந்து செயல்பாடுகளை அறிவித்துள்ளது: இவ்வளவு பெரிய உலகத் திட்டத்தை முன்னெடுத்துள்ள இக்குழுவுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாக முதல் கட்டமாக வந்துள்ள நூலை வாங்கி வாசித்து திருக்குறள் பரவலாக்கல் பணியில் நம்மையும் இணைத்துக்கொள்வதுதான். நூல் விவரம்: Thirukural Translations in World Languages |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 22 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|