LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ்நாடு சுற்றுலா Print Friendly and PDF

தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..!

தஞ்சையையடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது சமுத்திரம் ஏரி. இந்த ஏரி தஞ்சையிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. பழமையான இந்தச் சமுத்திரம் ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது.பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டது.

 

இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஏரிக்குக் கல்லணை கால்வாயிலிருந்து தண்ணீர் வருகிறது. மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று‌ வந்ததாகவும் கூறப்படுவது உண்டு. கடல்போல் காட்சியளித்த சமுத்திரம் ஏரியானது நாளடைவில் சுருங்கிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்த ஏரியைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

ரூ.9 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை

 

இதையடுத்து கல்லணை கால்வாய் கட்டப் பொதுப்பணித் துறை சார்பில் இது‌ தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காகத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றது.அதன்படி சமுத்திர ஏரியில் பறவைகள் இங்குத் தங்கி குஞ்சு பொரிக்கும் மூன்று தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடம் ஏற்ப டுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இதனைச் சுற்றிப் பார்க்கும் வகையில் படகுச் சவாரியும் விடப்பட உள்ளது.

by Kumar   on 31 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு. ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு.
தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள். தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள்.
தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர். தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர்.
தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்! தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்!
சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம். சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம்.
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்! அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்!
அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்' அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்'
திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’ திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.