|
|||||
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்! |
|||||
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலா செல்ல விரும்பும் முருக பக்தர்கள் வியாழக்கிழமை (ஜன.11) முதல் அறநிலையத்துறை இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்கள் வீதம் 5 கட்டமாக ஆண்டிற்கு 1,000 பக்தர்களை இலவசமாக ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளனர். மீதமுள்ளவர்கள் அடுத்தடுத்த சுற்றுப்பயணத்தில் செல்லப்படுவார்கள். அழைத்துச்செல்லப்பாடுவார்கள்.
28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக அறுபடை வீடுகளுக்கான ஆன்மிக சுற்றுலாப்பயணம் வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதையடுத்து 60 முதல் 70 வயதுடைய தகுதியான பக்தர்கள் வியாழக்கிழமை (ஜன.11) முதல் அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
by Kumar on 14 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|