|
|||||
அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்' |
|||||
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது.
மலைகளால் சூழப்பட்ட பகுதிகளைக் கொண்ட அப்பகுதியில் மலையடிவாரத்தில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆர்மா மலைக்குகை சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அங்குள்ள மக்களுக்கு இதுகுறித்த தகவல்கள் பெரிதும் தெரியவில்லை. மலைப்பகுதியில் இருப்பதால் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு செல்வதாக அங்கிருந்த மக்கள் சிலர் தெரிவித்தனர்.
ஆர்மாமலை என்று அழைக்கப்படும் இந்த மலை முன்பு ‘அருகர் மாமலை’ என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அருகர் சமணர்கள் வழிபடும் தெய்வமாகும். எனவே, அவர்கள் இம்மலையினை ‘அருகர் மாமலை’ என்று அழைத்திருக்க வேண்டும். பின்னர் காலப்போக்கில் அச்சொல் மருவி அருமாமலை, அர்மாமலை, ஆர்மா மலை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகிறது.
மூலிகைச் சாறு கொண்டு ஓவியங்கள்
இம்மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகையில் சமண முனிவர்கள் தங்குவதற்காக மண் மற்றும் பச்சை செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அறைகளும், வண்ண ஓவியங்களும் உள்ளன. பாறையின் மேற்பகுதியில் அழகிய பல்லவர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அங்குள்ள ஓவியங்கள் மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்டு அழகிய வேலைப்படுகளுடன் சமணச்சமயக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்களுடன் வரையப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று பிரபு தெரிவித்தார்.
கி.பி.1882-இல் ராபர்ட் சீவெல் (Robert Sewell) என்ற ஆங்கிலேய வரலாற்று அறிஞர் ஆர்மாமலை ஓவியத்தைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். |
|||||
by Kumar on 09 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|