LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ்நாடு சுற்றுலா Print Friendly and PDF
- சிவகங்கை

தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்!

தமிழகத்தில் கிராமத்துச் சூழல் நிறைந்த மாளிகை வீடுகளைப் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? இங்கே பல ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் இன்னும் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று.

 

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய நகரம் தான் காரைக்குடி. செட்டிநாடு பகுதி என்று பரவலாக அறியப்படும் காரைக்குடியில் காரை வீடுகளும், செட்டிநாட்டு உணவும் மிகவும் பிரபலமானவை. என நாம் அறிந்ததே. அங்கு இருக்கும் ஒவ்வொரு செட்டிநாட்டு வீடுகளும் கட்டிடக் கலைக்குப் புகழ்பெற்றவையாகப் பெயர் பெற்றுள்ளன. காரைக்குடிக்கும் விசிட் அடித்தீர்கள் என்றால் அங்கு இருக்கும் மாளிகை வீடுகளைப் பார்க்கத் தவறாதீர்கள்.

 

சிவகங்கையில் காரைக்குடி, ஆத்தங்குடி, கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி செட்டிநாட்டு பகுதி என அழைக்கப்படுகிறது. இங்கு மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்ட செட்டிநாட்டு பங்களாக்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இந்தப் பங்களா வீடுகள் பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

 

விசாலமான இடவசதி, எண்ணற்ற ஜன்னல்கள், பர்மா தேக்கினால் ஆன கதவுகள், வீட்டின் முற்றம், மழைநீர் சேகரிப்பு தொட்டி, காற்றோட்டமான வராந்தா உள்ளிட்டவை வியப்பில் ஆழ்த்துகின்றன.

 

கானாடுகாத்தான் அரண்மனை

 

காரைக்குடி அருகே ஆத்தங்குடி மற்றும் கானாடுகாத்தான் பகுதியில் காணப்படும் பிரமாண்ட வீடுகள் மற்றும் காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடுகள் புகழ்பெற்றதாகத் திகழ்கின்றன. இந்த வீடுகளில் மின்விசிறி இல்லாமலேயே குளுமை இருக்கும். அதேசமயத்தில் குளிர் காலத்திலும் குளிரின் தாக்கம் இருக்காது.

 

காரைக்குடி அருகே செட்டிநாடு பாரம்பரியக் கட்டிடக் கலையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள கானாடுகாத்தான் அரண்மனை உலகப் புகழ்பெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய ராஜா சர் அண்ணாமலை செட்டியர் 1912 ஆம் ஆண்டு இதனைக் கட்டினார்.

 

நூற்றாண்டு கடந்த பழைமையான இக்கட்டடத்தின் பொலிவு இன்றளவும் கொடிகட்டிப் பறக்கிறது. தற்போது இந்த அரண்மனைக்கு செல்லப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

 

அதே சமயம் காரைக்குடி, கானாடுகாத்தான், பள்ளத்தூா், ஆத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஆண்டுகள் கடந்தும், இன்றும் பொலிவுடன் காட்சி அளிக்கும் பல செட்டிநாடு பங்களாவினுள் செல்ல அனுமதி உள்ளது. இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வீடுகள் உயர்ரக மரங்கள், கண்ணாடி வேலைப்பாடுகளுடன் அரண்மனை போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளன.

 

செட்டிநாடு வீடுகளின் தனித்துவத்தால் பல தென்னிந்தியத் திரைப்படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டாக காரைக்குடி இருக்கிறது. திரைப்படத்துறையினரின் விருப்பமான படப்பிடிப்புத் தலமாக காரைக்குடி உள்ளது. ஏராளமான தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன.

கட்டிடக்கலை எவ்வளவு பிரபலமனோதோ அதேபோல செட்டிநாடு உணவு வகைகளும் பிரபலமானதாக அறியப்படுகிறது. செட்டிநாடு மசாலாவுக்கு என்று தனிப் பக்குவமே உள்ளது.

 

குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், கண்ணதாசன் மணிமண்டபம், கம்பன் மணிமண்டபம், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில், திருமயம் பெருமாள் கோவில், செட்டிநாடு அருங்காட்சியகம் ஆகியவை காரைக்குடி சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

by Kumar   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு. ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு.
தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள். தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள்.
தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர். தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர்.
சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம். சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம்.
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்! அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்!
அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்' அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்'
தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..! தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..!
திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’ திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.