LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- வாழ்வியலில் திருக்குறளை கொண்டுசேர்க்கும் உத்திகள்

திருக்குறளில் தொழில்சார் திறன்கள் - முனைவர் ப.சு. மூவேந்தன்

ஆய்வுச்சுருக்கம்
மனித வாழ்க்கை நிகழ்வுகள் யாவும் தொழில் என்றைக்கு மான மனிதன் அறிவைப் பயன்படுத்தி ஆற்றலை அதிகரிக்கத் தொடங்கினானோ அன்றைக்கே அவன் தொழிற்துறை அறிஞன் ஆனான். சங்க காலம் தொழில் வளர்ச்சியில் செல்வாக்கு மிகுந்திருந்த காலகட்டமாகும். சங்க கால மருதம். நெய்தல் நிலத்தின் உற்பத்திப் பெருக்கம் அவனது தொழிற்துறை ஆற்றலைக் காட்டுகிறது. இதன் காரணமாகவே இலக்கியத்தில் தொழில்துறைத் திறன்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றன. திருவள்ளுவர் மானுட சமுதாயம் மேம்பாடு அடையத்தக்க திறன்களையே விளக்கி உரைக்கிறது. அவற்றில் தொழில்சார் திறன்கள் குறித்து இக்கட்டுரை ஆய்வுக்கு உட்படுத்துகிறது.

வன்திறன் , மென்திறன் , தொழில்சார் திறன்கள், மேலாண்மைத் திறன், அறம்

முன்னுரை
'திருவள்ளுவரின் உலகளாவிய சிந்தனையை எடுத்துரைத்தல். தொழில்சார் மென்திறன் பண்புகள் திருக்குறளில் வாழ்வியல் அறங்களாக வகுத்துரைக்கப்பட்டுள்ள திறத்தைப் புலப்படுத்துதல். இன்றைய மென்திறன் வல்லுநர்கள் குறிப்பிடும் தொழிலியல் சார்ந்த பண்புகள் திருக்குறளில் காட்டப்பட்டுள்ள திறத்தை விளக்குதல்' என்பதனை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.


ஆய்வு அணுகுமுறை
இந்த ஆய்வுக்கட்டுரையில் விளக்கமுறை உவயே) மற்றும் பகுப்புமுறையிலான லடி உameseusop) ஆய்வு அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. திருக்குறள் கருத்து விளக்க நிலையில் விளக்கமுறை ஆய்வும். தொழில்சார் திறன் தேர்வில் பகுப்பு முறையிலான ஆய்வு அணுகுமுறையும் பின்பற்றப்படுகின்றன.


ஒரு நாட்டின் இனத்தின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் மனிதன் பெற்றிருக்கும் திறன்களைப் பொறுத்தே அமைகிறது. திறன்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்திருப்பது அவனது அறிவு ஆகும். இதன் சிறப்பினைக் கருதியே 'மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றுரைத்தார் திருவள்ளுவர். 'திறன்' என்பது அறிவின்பாற்பட்ட நுட்பமான செயல்திறனைக் குறிப்பதாகும். 'திறன்' குறித்த சிந்தனைகள் இன்றைக்குப் பெருமளவிலான பேசுபொருளாக. இன்றைய இளைஞனுக்குத் தேவையான முதன்மையான அறிவுத்தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. அவ்வகையில் திறன் என்பது வன்திறன் (3) மென்திறன் (spectre ) என்று வகைப்படுத்தப்படுகிறது. வன்திறன் என்பதில் கல்வி. அறிவுடைமை. பயிற்சிமுறைக் கல்வி. பட்டங்கள் ஆகியன அமைகின்றன. இத்தகு வன்திறன் கூறுகளை ஒருவன் திறம்படக் கையாள்வானே யானால் அவனே வெற்றியாளனாக. ஆற்றல் வாய்ந்த திறனாளனாக உருவாக முடியும் என்பதனை இன்றைய திறன் மேம்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


பண்டைத் தமிழர்கள் அறிவிலும் ஆற்றலிலும் செயல்திறனிலும் மேம்பாடு பெற்ற திறன்சார் கலைஞர்களாக விளங்கியிருந்தனர் என்பதனைச் செவ்வியல் இலக்கியங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். மானுட வளர்ச்சிக்குத் துணைநிற்கும் வன்திறன் குறித்தும், மென்திறன் குறித்தும் திருக்குறள் மிக விரிவாகப் பேசியுள்ளது. அதிலும் குறிப்பாகத் திருக்குறள் குறிப்பிடும் தொழில்சார் திறன்கள் இன்றைக்கும் தேவை உள்ளதனை இக்கட்டுரை எடுத்துரைக்க முயல்கிறது.

தொழில்சார் திறன்கள்
சங்கத் தொழில்நிலைச் சமுதாயத்தில் வழக்காற்றிலிருந்த அரசர். அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பகுப்பில் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் குறித்துத் திருக்குறள் மிகவிரிவாக விளக்கியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் பணியாளர் பெற்றிருக்க வேண்டிய தகுதிப்பாடுகள் என்றும் இவற்றின் பொருளைக் கொள்ளலாம். தமிழ்-தமிழ் அகர முதலி தொழில் என்பதற்குச் 'செயல், அலுவல், தந்திரம். பெருமை' என்ற பொருள்களைக் குறிப்பிடுகிறது. (ப. 626) தொழில் என்பதற்குக் க்ரியாவின் தற்காலத் தமிழகராதி. 'பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யும் வேலை. மனித உழைப்பையும் இயந்திரங்களையும் பயன்படுத்தி வர்த்தக ரீதியில் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செயல்' (ப 780) என்ற பொருள்களைத் தருகிறது. இவை யாவும் மனிதச் செயல்பாடு-களையும் அவற்றால் பெரும் ஈட்டின் தன்மையையும் குறிக்கக் காணலாம்.


புலமைத்திறன் 
தொழிற்பெருக்கம் யாவும் அத்தொழிலில் ஈடுபாடு காட்டும் திறன்களைப் பொறுத்ததாக அமைந்திருக்கிறது. தொழில்திறன் என்பது புலமை (exempeupp). திறமை (சார்ந்ததாகும். இன்றைக்கும் தொழில் வளர்ச்சிக்குத் திறனாளர்கள் தான் தேவை. ஆதலால், திறன்களில் புலமைத் திறன் முதன்மையானதாக அமைந்திருக்கிறது. இதன் பொருட்டே புலமையை ஒரு தொழிலாகக் குறித்தார் திருவள்ளுவர். அது திறன்களைக் கொண்டு அமைவது என்பதனை அறிந்திருந்தார். செயல்பாட்டினை. இத்தகு புலமையாளர்கள்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் (kural . 394)


என்று குறித்தார். இதன்வழியாகத் திருவள்ளுவர் உடல் உழைப்பின்வழி   மேற்கொள்ளும் செயல்பாட்டினைவிட புலமையின் வழியாக (speedre N) மேற்கொள்ளும் செயலாண்மையைத் தொழிலாகக் குறிக்கக் காணலாம். இன்றைக்கு உடற்செயல் திறனைவிட கருவிகளை, பொறிகளை இயக்கும் நுண்திறனே உயர்வாகப் பேசப்படுகிறது. இத்தகு நுண்திறன்களே எதிர்காலத்தை இயக்கும் சக்தியாகத் திகழும் என்பதனைக் கருத்தில் கொண்டே திருவள்ளுவர் இவ்வாறு குறித்தார் எனலாம்.
 
திறன்கள் 2 திறத்தவை. ஆதலால், எல்லாத் திறன்களையும் நடுவுநிலைமையுடன் ஆராய்ந்தறியும் திறன் தொழில் பெருக்கத்திற்குத் தேவையானதாக அமைந்திருக்கிறது..
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து (kural:112)

என்பதில், செய்யும் தொழிலில் மேற்கொள்ள வேண்டிய நடுநிலைமைத் திறன் குறிக்கப்படுகிறது. தொழில் மேற்கொள்ளப்படும் நடுவுநிலைமை, முறையான வழியில் ஈட்டப்படும் செல்வம் அவனது துறை சார்ந்த அனைத்துப் பிரிவினர்க்கும் சிதைவுகள் ஏதும் இன்றி. பாதுகாப்புத் தருவதாக அமைந்திருக்கும் என்பது இதன்வழியாக அறிவுறுத்தப்படும் செய்தியாகும்.

தொழில்சார் திறன்களில் முதன்மையானதாகக் கொள்ள வேண்டியது செய்யும் தொழிலில் நேர்மையாகும். நேர்மையான தொழில்களே சமூகத்திற்குப் பயன்தருவதாக அமைந்திருக்கும். முறையற்ற. சமூகத்திற்குப் பயன்தராத தொழில்களால் எந்தவொரு நன்மையும் இல்லை. தொழிலில் நேர்மையைப் பின்பற்றுவதே ஒரு திறன்தான் என்கிறார் திருவள்ளுவர்.


அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (Kural: 754)


என்பதில் நேர்மையான வழியில் ஈட்டிய பொருள்சேர்க்கை. அதனைப் பெற்றவனுக்குப் பயன்தருவதுடன் பிறருக்குத் துணையாகவும் இருக்குமாதலால் இன்பத்தைக் கொடுக்கும் என்று அறிவுறுத்துகிறார். பொருள் ஈட்டுவதில் நேர்மை என்னும் பண்பினை ஒருபோதும் கைவிடல் ஆகாது என்பதே இதன்வழியாகக் கூறப்படும் திறன் ஆகும்.


தொழிற்பெருக்கம்
தொழில் பெருக்கம் என்பது நாளும் வளர்ந்து கொண்டே இருப்பது. இன்றைய தேவையை மட்டும் கருத்தில் கொண்டு எதிர்காலச் சிந்தனை இன்றி நடத்தப்படும் தொழில்கள் நாளடைவில் நலிவடைந்து விடும். ஆதலால். எதிர்காலத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களே நிலைத்து நிற்கும் என்பதனை


செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில் (Kural: 759)


என்னும் குறளில் குறிப்பிடுகிறார். எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் தொழில்களே காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும், நிலைத்து நிற்கத்தக்கதாகவும் இருக்கும் என்பது இதன்வழியாக உணர்த்தப்படுகிறது.


முடிவெடுத்தல்
இன்றைய வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு, செல்வம் வரும் வழிகளை உருவாக்காது முடிவெடுக்கும் திறன்களால் தொழில் வளர்ச்சி பெறாது என்கிறார் திருவள்ளுவர்.


மிகுபொருள் மட்டும் வந்தால் போதும்: வரும் வழியைப் பற்றிய சிந்தனை கொள்ளாது செயல்படும் நிலையைத் திருவள்ளுவர் தள்ளத்தக்க திறனாகக் (teea TONE) கூறுகிறார். அறிவின்மையால் நேரும் குறைபாட்டினை.

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு (Kural. 841)


என்னும் குறள்வழியாகக் கூறுகிறார். உலகில் பிறந்த மக்கள் அனைவரும் பிறக்கும் காலத்திலேயே திறன்களைப் பெற்றுப் பிறப்பதில்லை. காலமும். இடமும், கல்வியும், அறிவும் ஆற்றலுமே திறன்களை உருவாக்குகின்றன. ஆதலால், உலகில் ஒருவனிடம் செல்வம் இல்லாதிருப்பது சிறப்பல்ல; திறன் குறைபாடே வறுமைக்குக் காரணம் என்பதனை இதன்வழியாக எடுத்துரைக்கிறார்.


எண்ணும் எழுத்தும் 
இன்றைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஆனது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவே தொழில்வளர்ச்சிக்குத் துணைபுரியும். இத்தகு எண். எழுத்தின்வழிப்பட்ட திறன்களே கணினிச் செயல்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. திருவள்ளுவர் தொழில்சார் திறன்களில் தேவையான ஒரு திறனாக எண்ணையும் எழுத்தையும் குறிக்கிறார். இதனை, 


எண்ணென்ப ஏனைஎழுத் தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு (Kural. 392)


என்னும் குறளால் விளக்குகிறார். தொழில்சார் திறன் பெறவேண்டுவோர் எண்ணை அடிப்படையாகக் கொண்டனவற்றையும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டனவற்றையும் முதன்மையான பண்பாகப் பெற்று விளங்கவேண்டும் என்பதனை இதன்வழியாக உணர்த்துகிறார்.

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை (Kural. 449)


என்பதில் முதல் போட வழியில்லாத தொழில் என்பதனைத் தெளிவுபடுத்துகிறார். முன்னோர்களின் பட்டறிவும் அனுபவ அறிவும் தொழிலறிவும் கற்றுத் தேர்வதும். அவர்தம் அறிவுரைகளை ஏற்று நடத்துவதுமே தொழில்திறன் மேம்பாட்டிற்கு உகந்ததாக அமையும் என்பது இதன்வழியாக உணர்த்தப்படுகிறது. நிலைக்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் (Kural: 466)


ஒரு செயலில் செய்யத் தகாதனவற்றைச் செய்தாலும் அக்காரியம் கெடும்: செய்யத் தக்கனவற்றைச் செய்யாமையாலும் கெடும் என்பதனை இதில் உணர்த்தக் காணலாம்.

பணியாளர் தேர்வு
நல்ல தொழில்நிலை. உற்பத்தி. வருவாய் ஆகியன நிலையாக அமைவதற்கு நற்பணியாளர் தேவை. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி. செயல்திறன், ஆக்கநிலை ஆகியன யாவும் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் செயல்திறன்களைப் பொறுத்தே அமைகிறது. ஆதலால், பணியாளர் தேர்வில் மேற்கொள்ள வேண்டிய திறன்களை.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் (Kural: 509)

என்னும் குறள்வழியாக அறிவுறுத்துகிறார். ஆராயாமல் யாரையும் தேர்ந்தெடுத்தல் கூடாது. அவ்வாறு நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்த பின்னர் அவரிடம் ஒப்படைத்த பணிகளில் குறுக்கீடு செய்தல் தவறான அணுகுமுறையாகும் என்பதை இக்குறள்வழி எடுத்துரைக்கிறார்.


முடிவுகள்
திருவள்ளுவர் தொழில்சார் திறன்கள் குறித்த செய்திகளை எல்லோரும் கற்றுணர்ந்து கொள்ளும் நோக்கில் அறிவுடைமை. ஆள்வினை உடைமை. ஊக்கம் உடைமை. ஒழுக்கம் உடைமை, சொல்வன்மை, தெரிந்து செயல்வகை. பயனில சொல்லாமை. பெரியாரைத் துணையாகக் கோடல். பொருள்செயல் வகை. மடிஇன்மை, வினைத்திட்பம். வினை செயல்வகை, வினைத்தூய்மை முதலான அதிகாரங்களில் வகுத்துரைத்துள்ளார். இவ்வாறு திருவள்ளுவர் குறிப்பிடும் அறக்கூறுகளே இன்றைய தொழில்சார் மென்திறன் பண்புகளாக (group) இருந்து வருகின்றன. இவற்றை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து தொழில்திறனிலும் சிறந்து விளங்கினர் என்பது இக்கட்டுரையின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது.


பார்வை நூல்கள்:
L தமிழண்ணல் (உ.ஆ), திருக்குறள் நுண்பொருளுரை மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. 2009
2. சண்முகம் பிள்ளை, மு. (தொ.ஆ) தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்:, சென்னை. 2022
3. அண்ணாமலை. இ. (ப.ஆ.), க்ரியாவின் தற்காலத் தமிழகராதி. க்ரியா. சென்னை. 2020

by Swathi   on 10 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural - The Universal Book  (Compiled for Students of Non-Tamil) Thirukkural - The Universal Book (Compiled for Students of Non-Tamil)
மயிலாடுதுறையில் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் கூட்டம் மயிலாடுதுறையில் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் கூட்டம்
கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் பேரா. கிப்ட் சிரோமணி,  கோவிந்தராசு, சந்திரசேகரன் கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் பேரா. கிப்ட் சிரோமணி, கோவிந்தராசு, சந்திரசேகரன்
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்  - Thirukkural Translations in world Languages நூல் வெளியீடு உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் - Thirukkural Translations in world Languages நூல் வெளியீடு
திருக்குறளில் வணிக மேலாண்மை  -கி. ஜான்சிராணி அ. வே. தனுஜா அ திருக்குறளில் வணிக மேலாண்மை -கி. ஜான்சிராணி அ. வே. தனுஜா அ
திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன் திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன்
திருக்குறளில் வணிகம் திருக்குறளில் வணிகம்
வணிகர்களுக்கும் வழிகாட்டும் திருக்குறள்: குறள் இனிது சோம. வீரப்பன் வணிகர்களுக்கும் வழிகாட்டும் திருக்குறள்: குறள் இனிது சோம. வீரப்பன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.