LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- குறள் குறும்படம்-திரைப்படம்-ஆவணப்படம்

திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்க ஆவணப்படம்!

 

திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பது போதாது; உலகமக்களுக்கு அதை எளிதாகப் புரியும் வகையில் காட்சிப்படுத்தவும் அவசியம் என்கிறார் அமெரிக்கத் தமிழ் மூதறிஞர் திருக்குறளார் முனைவர் இர. பிரபாகரன். இதனை உணர்ந்து, அவர் நீண்ட கால கனவாகக் கொண்டிருந்த திருக்குறள் சார்ந்த ஆவணப்படம் தற்போது உருவாகி வருகிறது.

“The Ageless Wisdom of the Indian Poet Philosopher Thiruvalluvar” என்ற பெயரில் உருவாகும் இந்த ஆவணப்படம், tamilchair.org மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் உருவாகிறது. இப்படத்திற்கு முனைவர் பிரபாகரனே திரைக்கதையும் விவரணையும் எழுதியுள்ளார். கணினி, கணித, மேலாண்மை வல்லுநராக நாசாவிலும் அமெரிக்க இராணுவத்திலும் பணியாற்றிய இவர், சங்க இலக்கியங்களிலும் ஆழமான பங்களிப்பு செய்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தைத் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் இயக்குகிறார். “ஒருத்தி”, “மனுஷங்கடா” போன்ற திரைப்படங்களை இயக்கிப் புகழ் பெற்ற இவர், பாரதி, சர்.சிவி.ராமன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 

முனைவர் இ.ஜே.சுந்தர், உலகத் தமிழ்க்களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியர், இப்படத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கத்தில் பங்களித்த இதய மருத்துவர் ஜானகிராமன் இப்பதிவிற்கு முழு ஆதரவை வழங்கியுள்ளார்.

இந்த ஆவணப்படம் வரும் ஜூலை 3 முதல் 5 வரை வடக்குக் கரோலினா மாநில ராலே நகரில் நடைபெறும் ஃபெட்னா ( FeTNA) மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.

30 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்த ஆவணப்படம் முதற்கட்டமாக ஆங்கிலத்தில் வெளியானாலும், பின்னர் ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், சீனம், ஜப்பானிய மொழி, இந்தி உள்ளிட்ட பல உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும். மேலும், ஓடிடி தளங்களில் திரையிடப்படும் திட்டமும் இருக்கிறது. 

கன்னியாகுமரி, மயிலாப்பூர், திருச்சி, செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை போன்ற தமிழின் பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இத்திரைப்படம் திருக்குறளின் தத்துவச் செல்வங்களை உலக மக்கள் முன் கொண்டு சென்று, அவர்களிடையே ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

by hemavathi   on 03 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த  6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த 6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம்
வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி! வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி!
வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள் 2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள்
வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள் வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள்
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள்
திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு
“உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் “உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.