|
||||||||
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - போக்குவரத்து துறை எச்சரிக்கை !! |
||||||||
![]() செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் :
தேசிய குற்ற ஆவண காப்பாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த, 10 ஆண்டுகளில், அதிகளவில் சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2012 ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நடைபெற்ற 68 ஆயிரம் சாலை விபத்துகளில், 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். நாள்தோறும் சராசரியாக, 44 உயிரிழப்புகள் தமிழகத்தில் ஏற்படுகின்றன.
இதையடுத்து, தமிழகத்தில் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழுவினருக்கு, போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. அதன்படி, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகினறன. பெரும்பாலான விபத்துகள், கவனச் சிதறலால் ஏற்படுகின்றன. குறிப்பாக, மொபைல் போன் பேசிக் கொண்டே, வாகனத்தை ஓட்டும் போது ஏற்படும் கவனச் சிதறலால், அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இதையடுத்து, வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது, மொபைல்போன் பேசிக் கொண்டு இயக்குவதை தடுக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழகத்தில் அனைத்து, ஆர்.டி.ஓ.,க்களுக்கும் போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீதனான நடவடிக்கைகள் :
செல்போனில் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுபவரின் ஓட்டுனர் உரிமத்தை அதிகபட்சமாக, 15 நாட்கள் வரை, தற்காலிக நீக்கம் செய்யப்படும்.
ஓட்டுனர் உரிமம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர், மீண்டும் மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டினால், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வோம்.
முதற்கட்டமாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர். தேவையின் அடிப்படையில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. |
||||||||
by Swathi on 10 Dec 2013 0 Comments | ||||||||
Tags: Driving Licence Mobile Use While Driving ஓட்டுனர் உரிமம் செல்போன் பேசியபடியே | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|