|
|||||
ஓட்டுனர் உரிமம்(டிரைவிங் லைசென்ஸ்) பெற விண்ணப்பிப்பது எப்படி ? |
|||||
![]() பழகுனர் உரிமம்(எல்எல்ஆர்) எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி சென்ற பதிவில் விரிவாக பார்த்தோம். இந்த பதிவில் பழகுனர் உரிமம் பெற்றபின் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக காண்போம்.
பழகுனர் உரிமம்(எல்எல்ஆர்) பெற்ற முப்பது நாட்களில் சாலை விதிகளை நன்றாகப் புரிந்துகொண்டு, வாகனம் ஓட்டிப் பழகி, நெரிசல் மிகுந்த இடங்களிலும், வாகனத்தை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையை பெற்று விட்டீர்களா! இப்போது நீங்கள் தாரளமாக டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்க தகுதியானவராகிவிட்டீர்கள்.
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில், நேரடியாக விண்ணப்பிப்பவர்களுக்கும், டிரைவிங் ஸ்கூல் மூலமாக விண்ணப்பிக்கிறவர்களுக்கும் படிவம் 4, படிவம் 5 என்று தனித்தனி விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் :
1.உங்களுடைய பழகுனர் உரிமம்.
2.நீங்கள் ஓட்டிக் காட்டப்போகும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்.
3.அந்த வாகனத்தின் இன்ஷ்யூரன்ஸ்
4.மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்.
5.வாகன உரிமையாளரிடமிருந்து, அந்த வாகனத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் கடிதம்.
6.ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம்.
கட்டணம் :
கட்டணம் ரூ.250 (ஒரு வாகனத்திற்கு, பைக் மற்றும் காருக்கு சேர்ந்து எடுத்தால் 250+250 = ரூ.500) இதனுடன் சேவைக்கட்டணம்ரூ.100 கூடுதலாக கட்ட வேண்டும். போக்குவரத்து வாகனங்களுக்கு சேவைகட்டணம் ரூ.50 மட்டும்.
இதன்பின், நடைபெறும் ஓட்டுனர் தேர்வில் நீங்கள் வாகனத்தை சரியாக இயக்கத் தெரிகிறதா மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுகிறீர்களா என்பதை பார்த்து உங்களக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் டிரைவிங் லைசென்ஸ் வழங்க பரிந்துரைப்பார். இந்த தேர்வில் தோல்வி அடைந்தால் 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் விண்ணப்பித்து இதேபோன்று வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். அதில், வெற்றி பெற்றால் உங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் உடனே கிடைத்து விடும்.
ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க : http://transport.tn.nic.in/transport/appointment.do?_tq=1a38059e15442b6fca9c88d4a3ad8978 என்ற முகவரியை கிளிக் செய்யவும்.
பழகுனர் உரிமம் விண்ணப்பிப்பது எப்படி : http://www.valaitamil.com/how-to-apply-llr-in-online_11618.html |
|||||
by Swathi on 22 Jan 2014 7 Comments | |||||
Tags: Driving Licence ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசென்ஸ் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிப்பது எப்படி ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிப்பது எப்படி Driving Licence Driving Licence Tamil | |||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|