LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

குறைந்துவரும் வேலைவாய்ப்புகள் - செப்டம்பர் மாத இதழ் தலையங்கம்

அனைவருக்கும் வணக்கம், 

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை , "மேக் இன்  இந்தியா" , அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே, மலேசிய வேலை மலேசியர்களுக்கே என்பதுபோன்ற குரல்கள் ஒவ்வொரு நாட்டிலும்  எழும்புவதை நாளும் காண்கிறோம். அமெரிக்காவிற்கு இனி வேலை தேடியோ, கல்வி கற்கவோ செல்வது எளிதல்ல என்பதும் அப்படியே சென்றாலும், பல்வேறு கெடுபிடிகளைத் தாண்டி செல்லவேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. 

ஒரு மாநிலத்திற்குக் குறைந்தது பத்து லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்படிப்பு முடிந்து வெளிவரும் சூழலில், இவ்வளவு பேருக்கும் அரசோ, தனியார்  நிறுவனங்களோ வேலைவாய்ப்பை வழங்குவது என்பது நடைமுறையில் சாத்தியம் கிடையாது. 

உலக நாடுகள் வேலைவாய்ப்புக்கான  கதவை அடைக்கத் தொடங்கிவிட்ட நிலையில் வளரும் நாடுகள், குறிப்பாக இந்தியா தன்னிடம் உள்ள மனித வளங்களை, வாய்ப்புகளை   முறையாக ஆராய்ந்து அதையொட்டிய மரபு சார் வேலைவாய்ப்புகளை, தொழில் சந்தையை, கிராமப்புற வேலைவாய்ப்புக்ளை ஊக்கப்படுத்துவதும்,  கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக நகர்ப்புறம் நோக்கி வருவதைக் குறைத்து கிராமங்களில் அதே அளவு வேலைவாய்ப்பும் , ஊதியமும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த உரிய திட்டங்கள் வகுப்பதும் அவசரத் தேவையாகிறது. இதை முறையாகத் திட்டமிடத்  தவறினால், இன்னும் சில ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டமும், மனிதவள தேக்கவும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும். 

இதழை வாசித்து உங்கள் கருத்துகளை, சிந்தனைகளை, நீங்கள் மேலும் இதில் எதிர்பார்ப்பதை ஆசிரியர் குழுவிற்கு magazine@ValaiTamil.com  மின்னஞ்சலுக்குத் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்துகளை உள்வாங்கி ஒவ்வொரு இதழும் மேலும் செம்மையாக வெளிவரும் என்பதை உறுதியளிக்கிறோம். 

மீண்டும் அடுத்த இதழில்  சந்திப்போம்.

இதழை வாசிக்க .. http://www.valaitamil.com/magazine.php

அன்புடன்,

ச.பார்த்தசாரதி

ஆசிரியர்.   

வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் 

Magazine@ValaiTamil.Com 

by Swathi   on 28 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.