|
||||||||
கேரளத்தில் திருவள்ளுவர் ஞானமடம்: திருக்குறள் அன்னையின் திருப்பணி நின்றது. |
||||||||
![]() 18-april-2021 திருக்குறள் அன்னையின் திருப்பணி நின்றது.
கேரளம் ,எர்ணாகுளம் மாவட்டம். மூவாற்றுப்புழை வட்டம், வாரப்பட்டியில் வாழ்ந்து வந்த திருமதி சரஸ்வதி அவர்கள் 17.O4 .2021 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார். கேரளம் பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானம் மடத்தின் நிறுவனர் திருமிகு சிவானந்தர் அவர்களின் துணைவியார் தான் சரஸ்வதி அவர்கள்.
திருக்குறள் எழுதப்பட்ட காலம் முதல் இதுவரை உலகில் திருக்குறள் நெறியில் வாழ்ந்த சமூகம் என்பது பெரிய அளவில் அமையப் பெறவில்லை. ஆனால் கேரளத்தில் திருவள்ளுவர் ஞானமடம் எனும் பெயரில் கடந்த 35 ஆண்டுகளாக 30 ஆயிரம் மக்களை திருக்குறளில் நெறியில் ஒருங்கிணைத்து பெரியதொரு மக்கள் திரளை உருவாக்கியவர்கள்தான் சிவானந்தரும் சரஸ்வதி அவர்களும் ஆவர்.
சிவானந்தர் அவர்கள் திருவள்ளுவர் ஞானமடத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் உருவாவதற்கு முழுமையான அடித்தளம் சரஸ்வதி அவர்களே ஆவார். சிவானந்தர் அவர்கள் சிறந்த சிந்தனையாளர். பேச்சாளர், ஆனால் அவரை செயல்படுத்திய இயக்குநர் சரஸ்வதி ஆவார்.
கேரளம் முழுமையும் திருவள்ளுவர் ஞானமடங்களை உருவாக்குவதற்காக கடுமையான களப்பணியில் அறிவையும் உழைப்பையும் நல்கியவர் சரஸ்வதி அவர்கள். வழிபாட்டு முறைகளையும், பாடல்களையும் மகளிர் அமைப்பின் நெறிமுறைகளையும் உருவாக்கியவர் சரஸ்வதி அவர்கள்.
உலக வரலாற்றில் திருக்குறளை வாழ்வியலாக நிறுவுவதற்காக இப்படி உழைத்த உயர்ந்த அன்னை இதுவரை யாரும் வாழ்ந்தது இல்லை என்பதே வரலாற்று உண்மையாகும். அத்தகைய அறநெறி வளர்த்த அன்னை இவ்வுலகை விட்டு மறைந்தார் என்பது அறத்திற்கே பேரிழப்பாகும்.
#அம்மாவை இழந்து வாடும் ஐயா உள்ளிட்ட உறவுகள் மற்றும் அன்பர்களுக்கு ஆழ்ந்த துயரை பகிர்கிறோம்!
|
||||||||
![]() |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 16 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|