|
||||||||
வள்ளுவத்தை வாழ்வியலாக்க"வழிகாட்டும் வள்ளுவம்" தொடர் பதிப்பு |
||||||||
![]() தமிழ்ச்சமூகம் திருக்குறளை முழுமையாக வாழ்வியலில் உள்வாங்காமைக்கு ஒரு முக்கியக் காரணமாக இருப்பது அதைப் பெருமைமிக்க , மதிப்பு மிக்க நூலாகக் கொண்டாடும் சமூகம் முழுமையாகத் துறைசார்ந்த அறிவை பிரித்து வாசிக்கவில்லை. முற்றோதல் செய்வதற்கும், தேவைப்படும்போது தேடுவதற்கும் முழு நூல் அவசியம். ஆனால் அன்றாடப் பயன்பாட்டிற்கு அவரவர்க்குத் தேவையான துறையில் எளிதாகப் பயன்படுத்தினால் வள்ளுவம் வாழ்வியலாகும்.
இதுவரை திருக்குறளில் அறம் , திருக்குறளில் நட்பு, திருக்குறளில் தலைமைப்பண்புகள் என்று அவ்வப்போது தனி மனிதர்கள் எழுதியுள்ளார்கள். பல நூல்கள் வெளிவந்துள்ளது. ஒருங்கிணைந்த பார்வையில் 1330 திருக்குறளையும் அது யாருக்குச் சொல்லப்பட்டது என்று துறைவாரியாக ஒரு தொடர் வெளிவரவில்லை.
ஒரு சில உரைகளை எடுத்து துறைசார் கருத்துகளாக வரிசையாக அனைத்துத் துறைகளின் கருத்துகளையும் ஆவணப்படுத்தி அதைக் கல்வியாக மாற்றவேண்டும் என்று சிந்தித்தோம். திருமணத்தில் இன்று திருக்குறள் முழுப் புத்தகம் அவ்வப்போது கொடுக்கப்படலாம் ஆனால் பெருமளவு பரிசு வழங்கலில் பள்ளி, கல்லூரி தவிரப் பிற இடங்களில் திருக்குறள் இடம்பெறவில்லை..
இது மாறவேண்டும். மேலாண்மை படிப்பவர்களுக்குத் திருக்குறள் பயிற்சி கொடுப்பது, அது சார்ந்த நூல் கிடைக்கச்செய்வது, அரசியலுக்கு வருபவர்களுக்குத் தலைவர்களுக்குக் கூறப்பட்ட திருக்குறள் நூல் வழங்குவது, தேவையானால் நம் குழு அவர்களுக்கு ஒரு வகுப்பு எடுப்பது என்று வாழ்வியலில் எளிமையாகக் கிடைக்கும் கட்டமைப்பு தேவை என்பதை உணர்ந்தோம்.
"வழிகாட்டும் வள்ளுவம்" என்ற தொடர் பதிப்பைத் திருக்குறள் பரவலாக்கத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள "வலைத்தமிழ் பதிப்பகம் " ( https://estore.valaitamil.com/) கொண்டுவருகிறது. அது அடுத்த வாரம் கரூரில் வள்ளுவர் கல்லூரியில் நடைபெறும் பெரும் திருக்குறள் விழாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வழிகாட்டும் வள்ளுவம்: மாணவர்களுக்கு
வழிகாட்டும் வள்ளுவம்: இளைஞர்களுக்கு
வழிகாட்டும் வள்ளுவம்: தொழில்முனைவோருக்கு
வழிகாட்டும் வள்ளுவம்: வாழ்க்கை இணையருக்கு
வழிகாட்டும் வள்ளுவம்: தலைவர்களுக்கு
வழிகாட்டும் வள்ளுவம்: விவசாயிகளுக்கு
வழிகாட்டும் வள்ளுவம்: மருத்துவர்களுக்கு
வழிகாட்டும் வள்ளுவம்: மூத்தோர்க்கு
மேலும் வரும்...
இதை உருவாக்கினால் போதுமா?, இதையே பாடத்திட்டமாக்கி பாடம் நடத்தவேண்டாமா? ஆம், அதற்கும் ஒரு கட்டமைப்பு "குறள்வழிக் கல்விக்கழகம்" உருவாக்கப்பட்டு, அனைத்துத் துறையினரும் புரிந்துணர்வு செய்துகொண்டு பயிற்சி பெறப் பேராசிரியர்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
"குறள்வழிக் கல்விக்கழகம்" ஒருங்கிணைப்பாளராக குறளரசி சங்கீதா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்..
இலக்கியப் பார்வையில் எழுதப்பட்ட கருத்துகளையும், துறைசார் வெற்றியாளர்கள் எழுதும் அனுபவ நூல்களையும் உள்வாங்கி இப்பயிற்சி முன்னெடுக்கப்படும்.
>>The Art Of Jogging With Your Boss -Soma Veerappan
>>திருக்குறளில் இன்றைய மேலாண்மை -
தொழிலதிபர் திரு.இரா.மனநாதன்
>>திருக்குறளில் தமிழர் மருத்துவம் - மருத்துவர். ஜெ.ஜெய வெங்கடேஷ்
இதுபோல் பல துறைகளில் வெற்றிகண்ட துறைசார் அனுபவப் பார்வையில் திருக்குறளை எழுதியுள்ள அறிஞர்களுடன் , நூலாசிரியர்களுடன் ஒருங்கிணைந்து இம்முயற்சி மேற்கொள்ளப்படும்..
மே 25, கரூர் மற்றொரு சந்திப்பு அல்ல.. திருக்குறளை வாழ்வியலாக்கும் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறது.. காலை 7:00 மணி முதல் -மலை 6:30 மணி வரை.. வெளிநாடுகளிலிருந்து அடுத்தவாரம் தமிழ்நாட்டில் இருக்கும் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ள முயலவும்.
வாருங்கள் சந்திப்போம் ... அடுத்த தலைமுறைகளைக் குறித்துச் சிந்திப்போம் ..
வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம்..
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
Register at https://www.tamilevent.com/thirukkural-5th-annual-day-tview1319.html
|
||||||||
by hemavathi on 17 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|