LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

இரங்கற்பா பாடுதற்கு இறையருள் பெற்றவனே !!

பெருவாழ்வு பெற்றவனே
பெரும் சாதனைகள் புரிந்தவனே
நல்ல மனம் பெற்றவனே
மக்கள் நலம் காத்தவனே
ஈவிரக்கம் கொண்டவனே
இணையில்லா நாட்டைக் கண்டவனே
பல்லின மக்களைக் காத்தவனே
பார் புகழ வாழ்ந்தவனே
உனை வாழ்த்திப் பாடுதற்கு
உலகமே திரள்கிறது விந்தையன்றோ
மனிதனும் மனிதமும் வாழ்வதற்கு
பிறப்பு எடுத்து வந்தவனே
இரங்கப்பா பாடுதற்கு நீ
இறையருள் பெற்றவனே
பெரும் தலைவா லீ குவான் யூ
உன் புகழ் உலகமே சுற்றுதையா...........!

சிங்கம் வாழ்ந்த காட்டை
சிங்காரப் பூமியாக்கிய மன்னனே
வனத்தை வளமாக்கியவனே
வானுயர கட்டிடங்கள் சிங்கையின்
எழிலைக் காட்டும்
சிங்கத்தின் முகம்
உன் வீரத்தைக் காட்டும்
விவேகத்தை வெளிச்சமிடும்
உழைப்பை பறைசாற்றும்
உழைப்பவனே உயர்ந்தவன்
உலகம் உன்னைக் காட்டும்
நினைப்போர் உயர்ந்து நிற்பர்...........!

உன் சாம்ராஜியம்
பணநோட்டில்
நான்கு மொழிகளைக் காட்டிது
உலக மொழி ஆங்கிலமாம்
அணிகலன்களாய் சீனம்,மலாய்,தமிழ்
அற்புதம் படைத்தாய்
மக்கள் மனதில்
அரியணைக் கொண்டாய் உன்
தொலை நோக்கு யாருக்கு வரும்?

உலகத்தலைவர்கள் பலர்
ஊழலில் வீழ்ந்தார் நீயோ
அறிவு ஊற்றாய் மலர்ந்தாய்
அகிலமும் ஏற்றமுற
நற்போதனை தந்தாய்
அறிவான குடிகளை உழைப்பின்
சிகரங்களை சிங்கையில் தந்தாய்
உலகம் வியக்கிறது தப்பாமல்
உன் வழி செல்கிறது.............!

நீ பெற்ற செல்வம்
தலைமையில் சிங்க நகர்
மேலும் வளர்கிறது உன் புகழ்
சரியாமல் நீதி பயணம் செல்கிறது........!

நீ இல்லா சிங்கை நகர்
கண்ணீர் கடலில்
தகப்பன் இல்லா குடும்பம்
கலங்கி நிற்கிறது
கல்லறையில் துயில் கொண்டாலும்
களங்கமில்லா சிங்க நகரைக் காப்பாய்
முப்பத்தோறு ஆண்டுகள்
ஆட்சிக்கட்டிலில் மக்கள்
புதுவுலகைக் கண்டனர்
எழுச்சி  கொண்டனர்
வளம் சேர்த்த பிதா மகனை
மறவாமல் வாழ்திடுவர்
பெருவாழ்வு பெற்றவனே
வாழ்வீர் எந்நாளும்...........!

முற்றும்

 

- வே.ம.அருச்சுணன் – மலேசியா

by Swathi   on 24 Mar 2015  0 Comments
Tags: இரங்கற்பா   இறையருள்   Lee Kuan Yew   Lee Kuan Yew Death   லீ குவான் இயூ   லீ குவான் இயூ மறைவு   லீ குவான் இயூ கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
இரங்கற்பா  பாடுதற்கு இறையருள் பெற்றவனே !! இரங்கற்பா பாடுதற்கு இறையருள் பெற்றவனே !!
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !! சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.