|
||||||||
என்னன்னே தலைப்புகளில் திருக்குறள் வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்படுகிறது? |
||||||||
திருக்குறள் ஒன்றை மற்றும் எடுத்து ஆய்வு செய்ய , தொகுக்க 50 விதமான செயல்பாடுகள் உள்ளன. இதுவரை பெரும்பாலானவை தமிழ்ச்சமூகத்தால் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை ஆராய்ந்து www.KuralWorld.org என்ற ஒரு தளம் திருக்குறள் சார்ந்த அனைத்தையும் ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்க்க தொடங்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 50 விதமான திருக்குறள் ஊர் பரவலாக்கல்- உலகப்பரவலாக்கள் - தகவல் தொகுப்புகள் சார்ந்த வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
விரைவில் "திருக்குறள் பரப்புரை திட்டங்கள் 50" என்ற தலைப்பில் இந்த ஐம்பது தலைப்புகளைக் குறித்து எனது மூன்றாவது நூல் வெளிவரவிருக்கிறது.
திருக்குறள் ஊர் பரவலாக்கல் -உலகப் பரவலாக்கள் நடைபெற பல்வேறு தரவுகள் அவசியம். தொழில்நுட்பமும், புதிய சிந்தனைகளும் அவசியம்.
இதுவரை கடந்த காலங்களில் முன்னெடுத்த பெரும்பாலான செயல்பாடுகள் "அரங்க ஆய்வுகள்" என்று வகைப்படுத்தப்படுகிறது. நூல்கள் வெளியிடுதல், ஆய்வுக் கூட்டங்கள், திருக்குறள் ஆராய்ச்சிகள், M.Phil , முனைவர் பட்டங்கள், விருதுகள் , பாராட்டுகள், ஊக்குவித்தல், திருக்குறள் பன்னாட்டு மாநாடுகள், குழு உரையாடல்கள் போன்ற அனைத்தையும் "அரங்க ஆய்வுகள்" என்று வகைப்படுத்துகிறோம்.
இவை மக்களிடமும், தமிழுக்கு வெளியே உலகத்தினரிடமும் சென்று சேர நம் கவனத்தை தமிழ்ச்சமூகம் ஊர் பரவலாக்கல் -உலகப் பரவலாக்கள் என்ற இரண்டு கோணத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தவே அதற்கான ஆய்வுகளோடு அடுத்த முன்னெடுப்பு..
என்னன்னே தலைப்புகளில் திருக்குறள் வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்படுகிறது?
-------------------------------------------------------
திருக்குறள் நூலகங்கள் (Thirukkural Libraries)
திருக்குறள் அவதானிகள் (கவனகர்கள்)
வள்ளுவமும் வலைத்தமிழும்
முற்றோதல் முடித்தவர்கள் (இளநிலை, முதுநிலை)
திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள்
திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)
திருக்குறள் ஆளுமைகள் (Thirukkural Scholars)
திருக்குறள் பரப்புரையில் புதிய சிந்தனைகள்
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)
திருக்குறள் யுனெஸ்கோ (Thinakkural for UNESCO)
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
திருக்குறள் செயலிகள் (Thirukkural Mobile Apps)
திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்கள்
திருக்குறள் செய்திகள் (Thirukkural News
திருக்குறள் 2030
Thirukkural Translations Data Analytics
உலகத் திருக்குறள் அமைப்புகள்
திருக்குறள் விளக்கவுரை காணொளிகள்
திருக்குறள் வழிபாடு சிலைகள் வரலாறு
திருக்குறள் மந்திரங்கள் (போற்றி அகவல்)
திருக்குறள் மறையோதல்
திருக்குறள் இதழ்கள்
திருக்குறள் கதைகள் Thirukkural Stories
திருக்குறள் உரைகள் உரையாசிரியர்கள்
திருக்குறள் தேசிய நூல் (National Book)
வலைத்தமிழ் பதிப்பகம் ValaiTamil Publications (திருக்குறள்)
திருக்குறள் மேல் தொடுக்கப்படும் கேள்விகளும் அறிஞர்களின் விளக்கமும்
திருக்குறள் சுற்றுலா
Thirukkural Translations Guidance Committee
உலகத் திருக்குறள் ஆய்வு நடுவம், மயிலாடுதுறை
திருக்குறள் முற்றோதல் பயிற்சி உத்திகள் கையேடு
திருக்குறள் பரப்புரையாளர்கள் (அயலகம்)
திருக்குறள் நூல்கள் தொகுப்புத் திட்டம்
வாழ்வியலில் திருக்குறளை
கொண்டுசேர்க்கும் உத்திகள்
திருக்குறள் ஆய்வுகள் தொகுப்புத் திட்டம்
திருக்குறள் இசை (Thirukkural Music)
திருக்குறள் திறனாய்வுத் தேர்வு (இணையவழி)
திருக்குறள் வினாடி வினா
தமிழுக்கு வெளியே திருக்குறள்
குறள் குறும்படம் திரைப்படம் ஆவணப்படம்
திருக்குறள் நூலாசிரியர்கள்
திருக்குறள் ஆய்வு இருக்கைகள்
அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படம்
அரசுகளின் திருக்குறள் திட்டங்கள்
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 08 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|